Iob Rd Details
வீட்டில் கணவன், மனைவி இருவருமே சம்பாதிக்கிறார்கள். ஆனால் இப்படி சம்பாதிக்கின்ற பணத்தை சரியானவற்றில் முதலீடு செய்யாமல் காலம் முழுவதும் உழைத்து கொண்டே இருந்தால் பணம் கரைந்து கொண்டே போகும். பிறகு கடைசி காலத்தில் உட்கார்ந்து சாப்பிடுகிற வயதிலும் உழைத்து கொண்டே இருக்க வேண்டியிருக்கும். அதனால் சம்பாதிக்கின்ற பணத்தை சரியானவற்றில் முதலீடு செய்து அதிலிருந்து வருமானம் கிடைக்க கூடிய அளவில் உள்ள திட்டங்களை பற்றி அறிந்திருக்க வேண்டும். இந்த பதிவில் IOB-யில் உள்ள Rd திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Iob Rd Scheme Details:
தகுதி:
இந்த திட்டத்தில் இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் பயன் அடையலாம்.
டெபாசிட் செய்யும் தொகை:
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 50 ரூபாய் செலுத்தி இந்த திட்டத்தை தொடங்கலாம்.
முதிர்வு காலம்:
குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை கால அளவு கொடுக்கப்படுகிறது.
வட்டி:
பதவிக்காலம் | ஜெனரல் சிட்டிசன் | சீனியர் சிட்டிசன் |
189 நாட்கள் முதல் 269 நாட்கள் வரை | 4.90% | 5.40% |
270 நாட்கள் முதல் 364 நாட்கள் வரை | 4.90% | 5.40% |
1 வருடம் முதல் 2 வருடம் வரை | 5.15% | 5.65% |
2 ஆண்டு முதல் 3 ஆண்டு வரை | 5.20% | 5.70% |
3 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை | 5.20% | 5.70% |
மாதம் 1500 ரூபாய் சேமித்தால் 10 லட்சம் பெறலாம் அருமையான சேமிப்பு திட்டம்
1000 ரூபாய் டெபாசிட் செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்:
ஜெனரல் சிட்டிசன்:
நீங்கள் இந்த மாதந்தோறும் 1000 ரூபாய் என்று 10 வருடத்திற்கு முதலீடு செய்தால் உங்களின் சேமிப்பு தொகையானது 1,20,000 ரூபாயாக இருக்கும். இதற்கு வட்டியாக 37,447 ரூபாய் வழங்கப்படுகிறது. சேமிப்பு மற்றும் வட்டி தொகை என சேர்த்து 1,57,447 ரூபாய் கிடைக்கும்.
சீனியர் சிட்டிசன்:
நீங்கள் 10 வருடத்திற்கு 1000 ரூபாய் மாதந்தோறும் சேமித்து வந்தால் 1,20,000 ரூபாய் சேமித்திருப்பீர்கள். இதற்கு வட்டியாக 41,760 ரூபாய் வழங்கப்படுகிறது. சேமிப்பி மற்றும் வட்டி தொகை என சேர்த்து முதிர்வு காலத்தில் 1,62760 ரூபாய் கிடைக்கும்.
ஒரு லட்சம் செலுத்தினால் Rs.1,45,000/- பெறலாம் HDFC பேங்கில்
மேல் கூறப்பட்டுள்ள தொகையானது டெபாசிட் செய்யும் தொகை மற்றும் கால அளவை பொறுத்து மாறுபடும்.
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |