ஜான்சுரக்ஷா விபத்து காப்பீடு பற்றி தெரியுமா உங்களுக்கு….. 

Advertisement

ஜான்சுரக்ஷா காப்பீடு 

இந்தியாவில் ஏற்படும் அதிக இறப்புக்கு விபத்துகளே காரணமாகிறது. இந்த விபத்து உங்களிடம் சொல்லிவிட்டுவராது. எப்போழுது வேண்டுமானாலும் நடக்கலாம், அது சிறிய காயங்கள் முதல் பெரிய இழப்புகள் வரை இருக்கலாம். விபத்து காலங்களில் உங்கள் மருத்துவ செலவுகளை சமாளிக்க உங்களுக்கு நிதி மேலாண்மையில் அக்கறையிருக்க வேண்டும். அதற்காக தான் விபத்து காப்பீடு அனைவருக்கும் அவசியமாகிறது. விபத்து காப்பீடு அறிமுகமாகி பல வருடங்கள் ஆகிவிட்டாலும் இன்றைய சாமானிய மக்களை சென்றடையவில்லை, அதற்காக தான் இந்திய அரசு வங்கி மற்றும் அஞ்சலகம் மூலம் மக்களிடம் விபத்து காப்பீடு விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டுள்ளது. அத்தகைய ஒரு விபத்து காப்பீட்டு திட்டமான ஜான்சுரஷா பற்றித்தான் இன்று தெரிந்துக்கொள்ள போகின்றோம்.

Jansuraksha Scheme

ஜான்சுரஷா என்பது ஒரு விபத்து காப்பீட்டுத் திட்டமாகும்.
விபத்து காரணமாக ஏற்படும் இறப்பு அல்லது உடல் குறைபாடு உள்ளடக்கிய பாதுகாப்பு அம்சமாகும்.

வயது வரம்பு:

18 முதல் 70 வயதுக்குட்பட்ட, வங்கி அல்லது அஞ்சல் அலுவலக கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் இந்த திட்டத்தில் சேருவதற்கு தகுதியுடையவர்கள்.

இ-ஷ்ராம் கார்டு எதற்கு பயன்படுகிறது

பதிவு செய்யும் முறை மற்றும் காலம்:

இந்த காப்பீடு திட்டம் ஜூன் 1 முதல் மே 31 வரை என ஒரு வருட காலத்திற்கு மட்டும் செல்லுபடியாக கூடியது. உங்களது காப்பீட்டை நீங்கள் நீட்டிக்க அந்த வருட ஆரம்பத்தில் புதுப்பிக்க வேண்டும்.  இந்த திட்டத்தில் சேர ஜூன் 1 தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.

பிரீமியம்:

ஒரு காப்பீட்டிற்கு ஆண்டுக்கு ரூபாய் 20 ஆகும். இந்த பிரிமியம் அவர்களின் கணக்கில் இருந்து ஆட்டோ டெபிட் மூலம் ஜூன் 1 தேதிக்கு பிறகு எடுத்துக்கொள்ளப்படும்.

நரேந்திர மோடி அறிவித்த திட்டங்கள்

தகுதி நிபந்தனைகள்:

வங்கி மற்றும் அஞ்சல்  கணக்குகளில் ஆதார் இணைத்துள்ள 18 முதல் 70 வயதுக்குட்பட்ட அனைவரும் இந்த காப்பீட்டில் சேர தகுதியுடையவர்கள். இந்த திட்டத்தில் சேர ஜூன் 1 தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். நாமினி பெயர் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.

பலன்கள்:

  •     விபத்தில் மரணம் – ரூ 2 லட்சம்
  •     இரண்டு கண்களின் மொத்த மற்றும் மீள முடியாத இழப்பு அல்லது இரண்டு கைகள் அல்லது கால்களின் பயன்பாடு இழப்பு அல்லது ஒரு கண்ணின் பார்வை இழப்பு மற்றும் கை அல்லது காலின் பயன்பாடு இழப்பு – ரூ 2 லட்சம்
  •      ஒரு கண்ணின் பார்வை இழப்பு அல்லது ஒரு கை அல்லது காலின் பயன்பாடு இழப்பு – ரூ.1 லட்சம்.

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்- ₹10000 ரூபாய் பென்சன் கிடைக்கும்

பாதுகாப்பு முடிவு:

1) 70 வயதை எட்டும்போது.

2) வங்கி அல்லது அஞ்சலகத்தில் கணக்கை முடித்தல்.

3) வங்கி அல்லது அஞ்சலகத்தில் கணக்கில் minimum balances அல்லது உங்களது காப்பீட்டிற்கான பிரிமியம் தொகை இல்லாத போது.

4) ஒரு உறுப்பினர் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் மூலம் காப்பீடு செய்யப்பட்டிருந்தால் காப்பீட்டுத் தொகை கட்டுப்படுத்தப்படும்.

போன்ற காரணங்களால் உங்களது காப்பீடு முடித்து வைக்க படும்.

ஜான்சுரக்ஷா விபத்துக்காப்பீட்டு  திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா ?

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil

 

Advertisement