கலைஞரின் கனவு இல்லம் திட்டம் | Kalaignar Kanavu Illam Scheme in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் பற்றிய விவரங்களை பின்வருமாறு கொடுத்துள்ளோம். கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கடா யாரெல்லாம் தகுதியானவர்கள். இத்திட்டத்தில் சேர என்னென்ன ஆவணங்கள் தேவைபடும், எவ்வளவு தொகை வழங்கப்படும் உள்ளிட்ட விவரங்களை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.
கருணாநிதி அவர்கள் முதலைவராக இருந்தபோது வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தரும் திட்டத்தினை 1975 ஆம் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு குடிசையில்லா மாநிலம் என்ற இலக்கை எட்டும் வகையில் வீடு வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. வீடு இல்லாமல் குடிசை வீடுகளில் வசித்து வருபவர்களுக்கு பாதுகாப்பான கான்கிரீட் வீடுகளை அமைத்து தருவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
Kalaignar Kanavu Illam Scheme Details in Tamil:
அணைவருக்கும் வீடு என்ற கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் கிராமப்புற பகுதியில் கிட்டத்தட்ட 8 லட்சம் குடிசை வீடுகள் உள்ளது. இதனால், குடிசை இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கை அடையும் வகையில் 2030 ஆம் ஆண்டிற்குள் மொத்தம் 8 லட்சம் வீடுகள் கட்டி தருவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதில், முதல்கட்டமாக 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.3500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு வீட்டிற்கு ரூ.3.50 லட்சம் ரூபாய் அரசு நிதி வழங்கும். இந்த ரூ.3.50 லட்சத்தில் ரூ.3.10 லட்சம் நீதியாகவும் மீதமுல்லா ரூ.40 ஆயிரம் இரும்பு கம்பி, சிமெண்ட் ஆகிய கட்டுமானப் பொருள்களாக வழங்கப்படும்.
இந்த 3.10 லட்சமும் ஒரே தவணையாக கொடுக்காமல் 4 தவணையாக கொடுக்கப்படும். இந்த தொகை நேரடியாக பயனாளியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
பயனாளிகளின் நிதிச்சுமையை குறைக்கும் பொருட்டு இத்திட்டத்தின் கீழ் TANCEM சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகள் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்டு, துறை மூலம் வழங்கப்படுகிறது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதிகள்:
- குடிசை வீட்டில் வசிப்பவர்கள் இத்திட்டத்தின் கீழ் வீடு கட்ட முடியும்.
- குடிசையில் ஒரு பகுதி கான்கிரீட், ஓடு, அல்லது ஆஸ்பெஸ்டாஸ் சீட்டு இதுபோன்று இருந்தாலும் இந்த திட்டத்தின் கீழ் வீடு பெற முடியாது.
- சொந்தமாக பட்டா வைத்திருந்தால் மட்மே இந்த திட்டத்தின் கீழ் வீடு பெற முடியும்.
- அரசு வழங்கும் இந்த வீடு வழங்கும் திட்டத்தை பெற குறைந்தபட்சம் 360 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். இதில் 300 சதுர அடிக்கு கான்கிரீட் வீடு கட்டி தரப்படும்.
- புறம்போக்கு இடத்தில் குடிசை போட்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் வீடு பெற முடியாது.
- சொந்தமாக பணம் போட்டு கான்கிரீட் வீடு கட்டி இருப்பவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பணம் பெற முடியாது.
இளைஞர்களுக்கான பிரதமர் மோடியின் புதிய Internship திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |