Kisan Vikas Patra Post Office Scheme 2023
இன்றைய காலத்தை பொறுத்தவரை பெரும்பாலும் ஏதோ ஒரு வகையில் பணத்தினை சம்பாதிக்கின்றனர். அப்படி நாம் சம்பாதிக்கும் தொகை எவ்வளவாக இருந்தாலும் அதில் ஒரு பங்காக ஒரு குறிப்பிட்ட தொகையினை நம்முடைய எதிர்கால நன்மைக்காக சேமித்து வருகிறோம். அப்படி நாம் சேமித்து வைக்கும் பழக்கமானது நல்லதாக இருந்தாலும் கூட அதனை வங்கி அல்லது போஸ்ட் ஆபீஸில் சேமித்து வைத்தால் வட்டி தொகை நிறைய பெறலாம். அதிலும் குறிப்பாக வங்கியை விட போஸ்ட் ஆபீஸில் தான் வட்டி நிறைய உள்ளது. ஆகையால் இன்றைய பதிவில் 1000 ரூபாய் செலுத்தி 2,000 ரூபாய் பெறக்கூடிய ஒரு அருமையான போஸ்ட் ஆபீஸ் திட்டத்தினை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
இதையும் படியுங்கள்⇒ 2,000 ரூபாய் செலுத்தினால் போதும் 3,25,000 ரூபாய் பெறக்கூடிய போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம்…
Kisan Vikas Patra Post Office Scheme:
போஸ்ட் ஆபீசில் அறிமுகப்படுத்தியுள்ள இந்த Kisan Vikas Patra Post Office திட்டமானது நாம் செலுத்தும் குறிப்பிட்ட தொகைக்கு இரு மடங்கு தொகையினை அளிக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் நீங்கள் சேமிக்க தொடங்கிவிட்டால் உங்களுக்கு முதிர்வு காலம் முடிந்த பிறகு Certificate வழங்கப்படும்.
- E-mode Certificate
- Passbook mode Certificate
அதுமட்டும் இல்லாமல் இந்த திட்டத்தில் உங்களுக்கு அளிக்கப்படும் Certificate-னை வைத்து வங்கியில் லோன் பெற்றுக்கொள்ளலாம்.
முதலீடு தொகை:
இந்த சேமிப்பு திட்டத்திற்கான குறைந்த பட்ச தொகை 1,000 ரூபாய் ஆகும். அதுவே அதிகபட்ச தொகை என்றால் உங்களால் முடிந்த தொகையினை செலுத்தலாம்.
வயது தகுதி:
இத்திட்டத்தில் 18 வயதில் இருந்து உள்ள இந்திய குடியுரிமை பெற்ற அனைவரும் சேர்ந்து கொள்ளலாம்.
வட்டி விகிதம்%:
தபால் துறையில் அறிமுகப்படுத்தியுள்ள இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் 7% ஆகும்.
முதிர்வு காலம்:
நீங்கள் இந்த திட்டத்தில் சேர விரும்பினால் இதற்கான முதிர்வு காலம் 10 வருடம் 3 மாதம் ஆகும்.
இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் 1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்:
போஸ்ட் ஆபீஸில் உள்ள இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் 1 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையினை முதலீடு செய்தால் உங்களுக்கு 10 வருடம் 3 மாதத்திற்கு பிறகு எவ்வளவு தொகை கிடைக்கும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Kisan Vikas Patra Post Office Scheme 2023 | ||
முதலீடு செய்த தொகை | வட்டி தொகை | மொத்த தொகை |
1 லட்சம் | 1,00,000 ரூபாய் | 2,00,000 ரூபாய் |
2 லட்சம் | 2,00,000 ரூபாய் | 4,00,000 ரூபாய் |
5 லட்சம் | 5,00,000 ரூபாய் | 10,00,000 ரூபாய் |
10 லட்சம் | 10,00,000 ரூபாய் | 20,00,000 ரூபாய் |
20 லட்சம் | 20,00,000 ரூபாய் | 40,00,000 ரூபாய் |
இதையும் படியுங்கள்⇒ 33,000 ரூபாய் வரை லாபம் தரும் தபால் துறையின் அருமையான திட்டம்..
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |