Kisan Vikas Patra Scheme in Tamil
சேமிப்பு என்பது மனிதர்களுக்கு மிகவும் முக்கியமாக உள்ளது. அதுவும் விலைவாசிகள் அதிகரிக்கும் நிலையில் நாம் வாங்கும் சம்பளத்தில் சேமிக்கவேண்டும். அதே சமயம் நமக்கு பிற்காலத்தில் நாம் சேமிக்கும் பணமானது மிகவும் உதவியாக இருக்கும். அதேபோல் நாம் ஒவ்வொரு மாதம் சேமிக்கும் பணம் தான் பிற்காலத்தில் நமக்கு உதுவுகிறது. நல்ல சேமிப்பு திட்டமான அஞ்சல் நிலைய சேமிப்பு திட்டங்கள் வங்கியை விட அதிக வட்டியை வழங்கி வருகிறது. அது என்ன திட்டம் என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Kisan Vikas Patra Scheme in Tamil:
உங்களுடைய வருமானத்தில் மாதம் 1,000 ரூபாய் கிசான் விகாஸ் பத்ரா அஞ்சலக திட்டம் (Kisan Vikas Patra Scheme) சேமித்தால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்..! உங்களின் பணமானது நல்ல லாபத்தை அதிகரிக்கும். இந்த திட்டத்தில் என்ன லாபம் எவ்வளவு கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம் வாங்க..!
யார் இந்த திட்டத்தில் சேரலாம்:
இந்த திட்டத்தில் 18 வயது நிரம்பியவர் அனைவரும் சேர்ந்து கொள்ளலாம். இதில் தனியாகவும், ஜாயிண்டு அக்கௌன்ட் கூட சேர்ந்து கொள்ளலாம்.
எவ்வளவு முதலீடு செய்யலாம்:
Kisan Vikas Patra திட்டத்தில் குறைந்தபட்சமாக 1000 ரூபாய் முதலீடு செய்யலாம். அதேபோல் இதில் முதலீடு செய்யும் தொகையை 2 மடங்கு அதிகமாக மாற்றம். இந்த கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் இவ்வளவு தான் முதலீடு செய்யவேண்டு என்று எந்த கட்டாயமும் இல்லை. ஆகவே எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👇
399 நாளில் Rs.87,529/- வட்டி தரும் அருமையான சேமிப்பு திட்டம்..!
முதிர்வு காலம்:
இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 10 ஆண்டுகள் 4 மாதங்கள் ஆகும். இந்த திட்டத்தின் முடிவில் நீங்கள் டெபாசிட் தொகையை சரியாக பெற்றுக் கொள்ளலாம்.
வட்டி:
கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் முன்பு வட்டி விகிதமானது 6.5 சதவீதம் ஆகும். ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் 1 தேதி முதல் 7.5 சதவீதம் வட்டியாக உயர்த்தியுள்ளது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 ஆண் குழந்தைகளுக்கு அரசின் அருமையான மூன்று சேமிப்பு திட்டங்கள்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |