உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்கும் அருமையான அஞ்சல் துறை திட்டம்…

Advertisement

KVP scheme

சேமிப்பு நமது வாழ்க்கையில் மிக முக்கியமானது. நாம் சேமிக்கும் தொகை குறிப்பிட்ட காலகட்டத்தில் 2 மடங்காக உயர இந்திய தபால் துறையில் எண்ணற்ற திட்டங்கள் உள்ளன. மனிதனின் வாழ்க்கையில் சேமிப்பு என்பது ரொம்ப முக்கியமானதாக இருக்கிறது. ஏனென்றால் நாம் வாழ்நாள் முழுவதும் வேலை பார்த்து கொண்டே இருக்க முடியாது. 55 வயதிற்கு மேல் மனிதனுக்கு ஓய்வு தேவைப்படும். அதனால் அப்போது நாம் உட்கார்ந்து சாப்பிட வேண்டுமென்றால் இப்போது சம்பாதிக்கின்ற பணத்தை சேமித்து வைக்க வேண்டும். சேமிப்பைப் பொறுத்தவரை பல திட்டங்கள் இருந்தாலும் ஒரு சில திட்டங்கள் கூடுதல் நன்மைகள் வழங்குகிறது. இந்த பதிவின் மூலம் நீங்கள் முதலீடு செய்யும் தொகையை இரட்டிப்பாக பெறக்கூடிய ஒரு சேமிப்பு திட்டத்தை பற்றி தெரிந்துகொள்ளாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

KVP Scheme Details in Tamil:

 

தகுதி:

இந்திய அரசின் KVP சேமிப்பு திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும் இணையலாம்.

முதலீடு தொகை:

KVP திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம்.

அதிகபட்சம் முதலீட்டு வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

10 லட்சம் மற்றும் அதற்கு மேல் முதலீடு செய்யும்போது வருமானத்திற்கான சான்று வழங்க வேண்டும்.

வட்டிவிகிதம்:

KVP சேமிப்பு திட்டத்திற்கான தற்போதைய வட்டிவிகிதம் தோராயமாக 7.5% ஆகும். இந்த வட்டிவிகிதங்கள் வருடம் வருடம் மாற்றியமைக்கப்படும்.

முதிர்வு காலம்:

KVP சேமிப்பு திட்டத்திற்க்கான முதிர்வு காலம் 115 மாதங்கள், அதாவது 10 வருடங்கள் ஆகும்.

வரி சலுகை:

KVP சேமிப்பு திட்டத்தின் கீழ் நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு,  1961 பிரிவு 80C பிரிவின் படி வரி சலுகை அளிக்கப்படுகிறது.

கணக்கு விவரங்கள்:

  • 18 வயதை அடைந்தவர் தனியாக திறக்கலாம்.
  • 3 நபர்கள் இணைந்து கூட்டாக திறக்கலாம்.
  • 10 வயது நிரம்பியவர்கள் பாதுகாவலர்கள் உடன் இணையலாம்.
  • மனநலம் பாதித்தவரின் சார்பாக பாதுகாவலர் கணக்கை திறக்கலாம்.

திரும்ப பெரும் முறை:

கணக்கு தொடங்கிய நாளில் இருந்து இரண்டரை வருடங்களில் கணக்கை முடிக்கலாம்.

கணக்கை வைத்திருப்பவர் அல்லது கூட்டு கணக்கில் உள்ளவர்கள் இறந்தால் முன்கூட்டியே கணக்கை திருப்ப பெறலாம்.

நீதிமன்ற உத்தரவின் பெயரில் கணக்கை முடிக்கலாம்.

எவ்வளவு வருமானம் கிடைக்கும்:

நீங்கள் முதலீடு செய்யும் தொகையின் இரட்டிப்பை நீங்கள் 10 வருடங்களின் முடிவில் பெறுவீர்கள்.

நீங்கள் 1 லட்சம் முதலீடு செய்தால் 2 லட்சம் நீங்கள் திரும்ப பெறுவீர்கள்.

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement