1 லட்சம் போஸ்ட் ஆபீஸில் செலுத்தினால் 2,00,000 ரூபாய் பெறக்கூடிய அதிசய திட்டம்…!

Advertisement

KVP Scheme in Post Office 2023

சேமிப்பு என்பது மனிதனாக பிறந்த அனைவருடைய வாழ்க்கையிலும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் இப்போது இல்லை என்றாலும் கூட எதிர்காலத்தில் ஏதோ ஒரு வகையில் பயன்படக்கூடியதாக உள்ளது. இத்தகைய சேமிப்பினை சிலர் படிக்கும் போது, வேலைக்கு செல்லும் போது, திருமணத்திற்கு பிறகு மற்றும் வயதான காலத்தில் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான முறையில் சேமித்து வருகிறார்கள். ஆனால் இந்த நவீன காலத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் சிறுவயதில் இருந்து அவர்களால் முடிந்த குறிப்பிட்ட தொகையினை சேமித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக போஸ்ட் ஆபீஸில் உள்ள திட்டங்களில் தான் அதிக அளவு சேமித்து வருகிறார்கள். ஏனென்றால் போஸ்ட் ஆபீஸில் வட்டி முதல் மற்ற விஷயங்கள் என அனைத்தும் மக்களுக்கு ஏற்றதாக உள்ளது. அந்த வகையில் இன்றைய பதிவில் 1 லட்சம் ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் ரூபாய் பெறக்கூடிய ஒரு அருமையான போஸ்ட் ஆபீஸ் திட்டத்தினை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Kisan Vikas Patra Post Office Scheme 2023:

போஸ்ட் ஆபீஸில் உள்ள கிஷான் விகாஸ் பத்திரம் திட்டம் ஆனது நாம் முதலீடு செய்யும் தொகையினை இரு மடங்காக தொகையினை முதிர்வு காலத்தில் அளிக்கும் திட்டம் ஆகும். மேலும் இத்தகைய திட்டத்திற்கு முதிர்வு காலம் முடிந்த பிறகு உங்களுக்கு Certificate அளிக்கப்படும்.

எவ்வளவு முதலீடு:

இத்தகைய திட்டத்தில் முதலீடு செய்வதற்கான குறைந்தப்பட்ச தொகை 1,000 ரூபாய் மற்றும் அதிகப்பட்ச தொகை ஆனது உங்களால் முடிந்த தொகை எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம்.

வயது தகுதி என்ன:

18-வயதிற்கு மேல் இந்திய குடியுரிமை பெற்ற அனைவரும் போஸ்ட் ஆபீஸில் உள்ள இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம்.

இதையும் படியுங்கள்⇒ 2023 ஆண்டில் 1000 ரூபாய் சேமித்தால் 1,00,000 பெறலாம்

வட்டி எவ்வளவு:

தபால் துறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் என்பது 7.50% வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் நீங்கள் சேரும் போது உங்களுக்கு வட்டி விகிதம் எவ்வளவு இருக்கிறதோ அது தான் முதிர்வு காலம் வரை அப்படியே இருக்கும்.

மேலும் வருடந்தோறும் உங்களுக்கு வட்டி விகிதம் அளிக்கப்படும்.

முதிர்வு காலம் எவ்வளவு:

இந்த திட்டத்திற்கான முதிர்வு காலம் 9 வருடம் 7 மாதம் ஆகும். ஒரு வேளை நீங்கள் இந்த திட்டத்தினை பாதியிலேயே முடித்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு 2 1/2 வருடம் முடிந்து இருக்க வேண்டும்.

கிஷான் விகாஸ் பத்ரா:

கிஷான் விகாஸ் பத்ரா 2023
முதலீடு தொகை  முதிர்வு காலம்  வட்டி விகிதம்% முதிர்வு கால தொகை 
1,000 ரூபாய் 9 வருடம் 7 மாதம் 1,000 ரூபாய் 2,000 ரூபாய்
1 லட்சம் 9 வருடம் 7 மாதம் 1,00,000 ரூபாய் 2,00,000 ரூபாய்
5 லட்சம் 9 வருடம் 7 மாதம் 5,00,000 ரூபாய் 10,00,000 ரூபாய்

 

ஏப்ரல் முதல், மாதம் 1000 ரூபாய் செலுத்தினால் ரூ.5,39,449 ரூபாய் பெறும் பெண்களுக்கான சிறப்பு திட்டம்…

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement