KVP Scheme in Tamil
நாம் வாழும் இந்த பூமியில் பணம் என்று ஒன்று எப்பொழுது மனிதனால் படைக்கப்பட்டதோ அன்றிலிருந்து அதுதான் அனைத்தும் என்றாகிவிட்டது. அதனால் அனைவருமே இந்த பணத்தினை அதிக அளவு தன்னிடம் சேமித்து வைத்து கொள்ள வேண்டும் என்று நினைகின்றார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் உள்ள பொருளாதார ஏற்ற இறக்கங்களினால் அது சாத்தியமாகாமல் போகின்றது. அதனால் அனைவருக்குமே தங்களின் பணத்தை சரியான முறையில் சேமிக்க வேண்டும் அல்லது முதலீடு செய்ய வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமும் விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது.
அதனால் நம்மில் பலரும் தங்களது இன்றைய காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் சேர்த்து சேமிக்க தொடங்கிவிட்டார்கள். ஆனால் நம்மில் ஒரு சிலருக்கு தங்களது எதிர்காலத்திற்காக சேமிக்க வேண்டும் என்ற ஆசையுள்ளது. ஆனால் எவ்வாறு சேமிப்பது என்பதில் தான் குழப்பம் மற்றும் கேள்விகள் உள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கத்தில் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு சேமிப்பு திட்டத்தை பற்றி விரிவாக பார்த்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்று மத்திய அரசின் Kisan Vikas Patra சேமிப்பு திட்டம் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Post Office Kisan Vikas Patra Scheme in Tamil:
இந்த Kisan Vikas Patra என்பது ஒரு நிலையான வருமான முதலீடு திட்டமாகும். இந்த திட்டத்தினை நீங்கள் எந்த ஒரு போஸ்ட் ஆஃபீஸிலும் திறக்கலாம்.
அதாவது இந்த திட்டத்தில் குறிப்பிட்ட தொகையினை அஞ்சலகத்தில் சேமித்து சேமிப்பு பத்திரத்தினை வாங்கி 10 வருடம் 4 மாதத்திற்கு பிறகு பத்திரத்தினை திருப்பி அளிக்கும் போது செலுத்திய தொகை மற்றும் அதன் வட்டியுடன் கிடைக்கும்.
தபால் துறையில் 5 வருடத்தில் 14,00,000 ரூபாய் வரை லாபம் தரும் அருமையான சேமிப்பு திட்டமா
தகுதிகள்:
இந்த Kisan Vikas Patra திட்டத்தில் இணைவதற்கு விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் துவங்க உங்களுக்கு 18 வயது முதல் இருக்க வேண்டும். இதில் 3 நபர்கள் இணைந்து ஜாயிண்ட் அக்கவுண்ட் ஓபன் செய்து கொள்ளலாம்.
மைனர் குழந்தைகள் தங்களது பெற்றோரின் மூலம் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும்.
NRI-கள் இந்த திட்டத்தில் இணைய முடியாது.
நன்மைகள்:
இது அரசு ஆதரவு திட்டமாகும் அதனால் செய்யும் முதலீடு மற்றும் வட்டிக்கு பாதுகாப்பு உண்டு.
இந்த திட்டத்தின் கால அளவானது 10.4 வருடங்கள் ஆகும். இதில் குறைந்தபட்சம் 1,000 முதல் அதிகபட்சம் எவ்வளவு ரூபாய் வேண்டுமென்றாலும் முதலீடு செய்து கொள்ள முடியும்.
இந்த திட்டத்தின் வட்டி தற்போது 6.9% ஆகும். மேலும் இந்த திட்டத்தில் நீங்கள் இணையும் பொழுது உங்களுக்கு அளிக்கப்படும் வட்டியே உங்கள் திட்டம் முடியும் வரை வழங்கப்படும்.
மாதம் ரூ.730 செலுத்தினால் ரூ.1 கோடி கிடைக்கும் LIC பாலிசி பற்றி உங்களுக்கு தெரியுமா
மேலும் இந்த திட்டத்தில் கடனும் பெற்று கொள்ள முடியும். இந்த திட்டத்தில் நீங்கள் யாரை வேண்டுமென்றாலும் நாமினியாக நியமனம் செய்து கொள்ளலாம்.
ஒருவேளை நீங்கள் இந்த திட்டம் முடிவதற்குள் இறந்துவிட்டீர்கள் என்றால் இந்த திட்டத்தின் முதிர்வு தொகை உங்களின் வாரிசுகளுக்கு அல்லது குடும்பத்திற்கு வழங்கப்படும்.
லாபம்:
உதாரணத்திற்கு நீங்கள் இந்த திட்டத்தில் உங்களிடம் உள்ள 1,00,000 ரூபாயை முதலீடு செய்து இந்த திட்டத்திற்கான பத்திரத்தை பெற்று கொள்கிறீர்கள். 10 வருடம் 4 மாதத்திற்கு பிறகு உங்களுக்கு வட்டியுடன் சேர்த்து 2,00,000 ரூபாயாக திரும்ப கிடைக்கும்.
இதுவே நீங்கள் திட்டத்தில் உங்களிடம் உள்ள 5,00,000 ரூபாயை முதலீடு செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு 10 வருடம் 4 மாதத்திற்கு பிறகு உங்களுக்கு வட்டியுடன் சேர்த்து 10,00,000 ரூபாயாக திரும்ப கிடைக்கும். இதேபோல் நீங்கள் செலுத்து முதலீடு இரண்டுமடங்காக திரும்ப கிடைக்கும்.
555 நாட்களுக்கு இப்படி ஒரு வட்டியை யாராலும் இனிமேல் தரவேமுடியாது
444 நாட்களிலேயே 1,10,114 ரூபாய் வரை கிடைக்கும் திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |