Axis Bank FD Schemes Details in Tamil
சேமிப்பு என்பது இக்காலத்தில் மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால் இக்கால பணத்தேவையை பூர்த்தி செய்வதோடு மட்டுமில்லாமல் எதிர்காலத்திற்கும் தேவையான பணத்தை சேமித்து வைக்க வேண்டும். அப்போது தான் வாழ்க்கையை எதிர்கொள்ள முடியும். இப்படிப்பட்ட சூழலில் தான் அனைவரும் இருக்கிறோம். இதனை கருத்தில் கொண்டு பலரும் எதிர்கால பயன்பாட்டிற்கு சேமிக்க தொடங்கிவிட்டனர். பணத்தை சேமிப்பதற்கு பல வழிகள் உள்ளன. வங்கிகள், போஸ்ட் ஆபிஸ், LIC சேமிப்பு திட்டம் போன்ற பல்வேறு வழிகள் மூலம் சேமிக்கலாம். அந்த வகையில் நம் பொதுநலம் பதிவில் இன்று 5 வருடத்தில் ரூ.14,86,675/- பெறக்கூடிய நல்ல திட்டத்தினை பற்றித்தான் பார்க்கப்போகிறோம். அதாவது ஆக்சிஸ் பேங்க் FD திட்டத்தில் 5 வருடத்தில் ரூ.14,86,675 பெறலாம். இத்திட்டத்தின் வட்டி விகிதங்கள், தகுதியுடையவர்கள், லாபம் போன்ற விவரங்களை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படியுங்கள்⇒ ஏப்ரல் 4 தேதி முதல் மாதம் 1000 ரூபாய் செலுத்தினால் ரூ.5,39,449 ரூபாய் வரை பெற முடியும்..
Axis Bank New FD Interest Rates in Tamil:
ஆக்சிஸ் பேங்க் பல்வேறு வகையான கால அளவுகளில் FD திட்டத்தினை வழங்குகின்றார்கள்.
கால அளவு | வட்டி விகிதம் |
6 மாதம் | 4.75% |
6 முதல் 9 மாதம் வரை | 5.75% |
9 முதல் 14 மாதம் வரை | 6% |
1 வருடம் முதல் 1 வருடம் 24 நாட்கள் வரை | 6.75% |
1 வருடம் 25 நாட்கள் முதல் 13 மாதம் வரை | 7.10% |
13 மாதம் முதல் 2 வருடம் | 7.15% |
2 வருடம் முதல் 30 வருடம் வரை | 7.26% |
30 மாதம் முதல் 10 வருடம் வரை | 7% |
Axis Bank Senior Citizen Interest Rate in Tamil:
கால அளவு | வட்டி விகிதம் |
6 மாதம் | 4.75% |
6 முதல் 9 மாதம் வரை | 6% |
9 முதல் 14 மாதம் வரை | 6.25% |
1 வருடம் முதல் 1 வருடம் 24 நாட்கள் வரை | 7.50% |
1 வருடம் 25 நாட்கள் முதல் 13 மாதம் வரை | 7.85% |
13 மாதம் முதல் 2 வருடம் | 7.90% |
2 வருடம் முதல் 30 மாதம் வரை | 8.01% |
30 மாதம் முதல் 10 வருடம் வரை | 7.75% |
இதையும் படியுங்கள்⇒ 444 நாட்களில் 11,00,000 வரை பெறும் அருமையான திட்டம்..!
5 வருட கால அளவில் ஆக்சிஸ் பேங்க் பிக்ஸ்டு டெபாசிட் திட்டத்தில் 1 லட்சம் டெபாசிட் செய்தால் எவ்வளவு பெற முடியும்..?
வைப்பு தொகை | வட்டி தொகை | பெறக்கூடிய மொத்த தொகை |
1 லட்சம் | ரூ.43,296/- | ரூ.1,43,296/- |
2 லட்சம் | ரூ.86,592/- | ரூ.2,86,592/- |
5 லட்சம் | ரூ.2,16,482/- | ரூ.7,16,482/- |
10 லட்சம் | ரூ.4,32,964/- | ரூ.14,32,964/- |
மூத்த குடிமக்கள் (Senior Citizen) ஆக்சிஸ் பேங்க் FD திட்டத்தில் 5 வருட கால அளவுகளில் 1 லட்சம் டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை பெற முடியும்..?
வைப்பு தொகை | வட்டி தொகை | பெறக்கூடிய மொத்த தொகை |
1 லட்சம் | 48,667 | 1,48,667 |
2 லட்சம் | 97,335 | 2,97,335 |
5 லட்சம் | 2,43,337 | 7,43,337 |
10 லட்சம் | 4,86,675 | 14,86,675 |
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |