Lic Bima Policy Details
மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே பணத்தை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கிறது. ஆனால் எதில் சேமிப்பது, எதில் சேமித்தால் லாபம் அதிகமாக கிடைக்கும் என்ற சந்தேகம் இருக்கும். உங்களுக்கு உதவும் வகையில் தான் நம் பதிவில் தினந்தோறும் நிறைய வகையான திட்டங்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய LIC பீமா ரத்னா திட்டத்தை பற்றி அறிந்து கொள்வோம். LIC கார்ப்பரேஷன் இந்தியாவின் மிக பெரிய காப்பீட்டு நிறுவனமாகும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே
👇 https://bit.ly/3Bfc0Gl
Lic money Back Policy Details in Tamil:
LIC பீமா ரத்னா பாலிசி 27 மே 2022 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஒரு மணி பேக் பாலிசி. இந்த பாலிசியில் நீங்கள் பாலிசியின் இடைப்பட்ட காலங்களிலும் தொகையை பெறலாம், இல்லையென்றால் பாலிசி தொகை மற்றும் முதிர்வு தொகை சேர்ந்து தரப்படும். இவை ரிஸ்க் இல்லாத பாலிசி.
இந்த பாலிசியை மூன்று ஆப்ஷன்களில் வழங்குகிறார்கள்.
ஆப்ஷன்:1
நீங்கள் 15 வருட கால அளவு பாலிசியை எடுத்தால் குறைந்த பட்ச வயது 5 வருடம், அதிகபட்ச 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மேலும் இந்த ஆப்ஷனில் 11 வருடம் மட்டும் டெபாசிட் தொகையை செலுத்தினால் போதும், இந்த பாலிசியை நீங்கள் முடிக்கும் பொழுது 20 வயதாக இருக்கும்.
இந்த திட்டத்தில் ரூபாய் 166/- சேமித்தால் 15 லட்சம் மொத்தமாக பெறலாம்
ஆப்ஷன்:2
நீங்கள் 20 வருட பாலிசியை தேர்வு செய்தால் குறைந்த பட்ச வயதாக குழந்தை பிறந்து 90 நாட்களும், அதிகபட்ச வயதாக 50 வயதாக இருக்க வேண்டும்.
மேலும் இந்த பாலிசியை 16 வருடம் மட்டும் டெபாசிட் செய்தால் போதுமானது, இந்த பாலிசியை நீங்கள் முடிக்கும் பொழுது 20 வயதாக இருக்கும், அதிகபட்ச வயதாக 70 வயதாக இருக்கும்.
ஆப்ஷன்:3
நீங்கள் 25 வருட பாலிசியை தேர்வு செய்தால் குறைந்த பட்ச வயதாக குழந்தை பிறந்த 90 நாட்களும், அதிகபட்ச வயதாக 45 வயதாக இருக்க வேண்டும்.
இதில் நீங்கள் 21 வருடம் டெபாசிட் செய்தால் போதுமானது. இந்த பாலிசியை நீங்கள் முடிக்கும் பொழுது 25 வயதாக இருக்கும், அதிகபட்ச வயதாக 70 வயதாக இருக்கும்.
பாலிசி செலுத்தும் முறை:
இந்த பாலிசியை நீங்கள் மாதந்தோறும், காலாண்டு, அரையாண்டு, வருடத்திற்கு ஒரு முறை செலுத்தி கொள்ளலாம்.
444 நாட்களில் Rs.5,51,110/- பெறலாம் இப்படி ஒரு திட்டமா
பாலிசி தொகை:
குறைந்தபட்ச அடிப்படைத் தொகை ரூ. 5 லட்சமாக இருந்தாலும், அதிகபட்ச அடிப்படைத் தொகைக்கான வரம்பு எதுவும் இல்லை.
பாலிசி காலம் 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள் மற்றும் 25 ஆண்டுகள்.
எவ்வளவு லாபம் கிடைக்கும்:
30 வயது நபர் 5 லட்சம் பாலிசியை 25 வருட கால அளவை செலக்ட் செய்தார்கள் என்றால் பிரீமியம் தொகையை 21 வருடம் செலுத்த வேண்டும்.
அதுவே நீங்கள் வருடாந்திர முறையை செலக்ட் செய்தீர்கள் என்றால் வருடத்திற்கு 30,899 ரூபாய் செலுத்த வேண்டும். 21 வருடத்தில் 6,49,559 ரூபாய் டெபாசிட் செய்திருப்பீர்கள். 25 வருடத்திற்கு பிறகு 12,12,500 ரூபாய் கிடைக்கும்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |