Lic Aadhaar Shila Plan (844) Details
நம்முடைய பதிவில் தினமும் ஒவ்வொரு மாதிரியான சேமிப்பு திட்டங்கள் பற்றி பார்த்து வருகிறோம். அதிலும் குறிப்பாக அனைவருக்கும் ஏற்ற மாதிரியான Lic-யில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் பயன்படும் வகையிலான திட்டங்களை தெரிந்துக்கொண்டு வருகிறோம். அதன் அடிப்படையில் இன்றைய பதிவில் பெண்களுக்கு பயன்பெறும் வகையிலான Lic Aadhaar Shila Plan (844) Details என்பது பற்றி விரிவாக பார்க்போகிறோம். மேலும் இந்த திட்டமானது பெண்களுக்கு மட்டும் உள்ள திட்டம் ஆகும். ஆகையால் திட்டத்தை தெளிவாக படித்து பார்த்து சேமிக்க தொடங்கலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள்⇒ LIC-யில் ஒரு முறை 2,70,315 ரூபாய் செலுத்தினால் 9,65,000 ரூபாய் பெறும் அருமையான திட்டம்
Lic Aadhaar Shila Plan (844) Details in Tamil:
இந்த திட்டத்தில் பெண்கள் மட்டுமே பயன் அடைய முடியும். மேலும் இந்த திட்டத்தில் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகை 2 லட்சம் முதல் அதிகபட்ச தொகை 5 லட்சம் ரூபாய் ஆகும்.
நீங்கள் பாலிசி வழங்கும் நாட்கள் முடிந்துவிட்டது என்றால் மீண்டும் நீங்கள் சேமிப்பு தொகையினை செலுத்துவதற்கு குறிப்பிட்ட கால அளவு கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நீங்கள் இந்த திட்டத்தினை ஒரு முறை மட்டும் தான் பெற முடியும் என்ற அவசியம் இல்லை. 2 முறை கூட பெற்று கொள்ளலாம் ஆனால் பாலிசி தொகை மொத்தம் 5 லட்சம் மட்டுமே.
பாலிசியில் தொகையினை செலுத்துவதற்கான காலம்:
Lic Aadhaar Shila Plan-ல் நீங்கள் சேரும் போதே உங்களுடைய பாலிசிக்கான தொகை மற்றும் அதனை செலுத்தும் காலம் இரண்டினையும் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் 4 முறைகளில் இந்த தொகையினை செலுத்தலாம்.
- மாதம் தோறும்
- 3 மாதத்திற்கு ஒரு முறை
- 6 மாதத்திற்கு ஒரு முறை
- வருடத்திற்கு ஒரு முறை
பாலிசிக்கான வயது தகுதி:
இத்திட்டத்தின் கீழ் பெண்கள் சேர வேண்டும் என்றால் அதற்கான வயது தகுதியானது குறைந்த பட்ச வயது 8 முதல் அதிகபட்ச வயது 55-ற்குள் இருக்க வேண்டும். மேலும் இந்த பாலிசி முடிவடையும் போது பெண்களுக்கு 70 வயதிற்குள் மட்டுமே இருக்க வேண்டும்.
பாலிசிக்கான முதிர்வு காலம்:
இந்த பாலிசியில் 2 மாதிரியான முதிர்வு காலங்கள் உள்ளது. அதாவது 10 வருடம் அல்லது 20 வருடம் என்பது பாலிசிக்கான முதிர்வு காலம் ஆகும். ஆகையால் பாலிசியில் சேரும் போதே உங்களுக்கான முதிர்வு காலத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
லோன் பெரும் முறை:
Lic Aadhaar Shila Plan மூலம் நீங்கள் லோன் பெற வேண்டும் என்று நினைத்தால் அதற்கான வாய்ப்பும் இதில் உள்ளது. அது என்னவென்றால் இந்த பாலிசியில் சேர்ந்து 2 வருடம் கழித்து உங்களுக்கான பாலிசி தொகையில் இருந்து குறிப்பிட்ட தொகையினை பெற்று கொள்ளலாம்.
இத்தகைய பாலிசியில் 5 லட்சம் செலுத்தினால் எவ்வளவு தொகை கிடைக்கும்:
ஒரு பெண் இந்த பாலிசியில் 20 வருட கால அளவில் 5 லட்சம் ரூபாய் பாலிசியில் மாதம் 1551 ரூபாய் செலுத்தினால் அவர்களுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Lic Aadhaar Shila Plan (844) Details | ||||
வயது | முதிர்வு காலம் | பாலிசிக்கான தொகை | பாலிசித்தாருக்கான லாயல்டி தொகை | மொத்த தொகை |
25 வயது | 20 வருடம் | 5 லட்சம் | 1,62,500 ரூபாய் | 6,62,500 ரூபாய் |
இதையும் படியுங்கள்⇒ Lic-யில் குழந்தைகளின் பெயரில் Rs. 1900 செலுத்தினால் போதும் Rs. 12,15,000 பெறக்கூடிய அருமையான பாலிசி..
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |