தினமும் Rs.42/- சேமித்தால் Rs.5,30,000/- பெறலாம் பெண்களுக்கான பாலிசி..! LIC Aadhaar Shila Policy Details Tamil
LIC Aadhar Shila Policy Details Tamil – ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் மாதம் 1283 ரூபாய் முதலீடு செய்து 5,30,000/- ரூபாயை மொத்தமாக தரக்கூடிய பெண்களுக்கான பாலிசி திட்டத்தை பற்றி தான் இன்றைய பதிவில் நாம் படித்து தெரிந்துகொள்ள போகிறோம். ஆக பதிவை முழுமையாக படித்து பயன்பருங்கள்.
Life Insurance Corporation of India பெண்களுக்காக ஆதார் ஷீலா என்ற பாலிசி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த பாலிசியின் பயன்களை பற்றி முதலில் தெரிந்துகொள்வோம்.
எல்ஐசி ஆதார் ஷீலா பாலிசி – Woman High Return Policy Tamil
வயது:
LIC-யின் பெண்களுக்கான பாலிசியான ஆதார் ஷீலா பாலிசியை வாங்க விரும்புகிறீர்கள் என்றால் அதற்கான குறைந்தபட்ச ஆண்டு 8 வயதாகும். அதிகபட்சமாக 55 வயது வரை உள்ள பெண்கள் இந்த பாலிசியை பெறலாம்.
மெச்சூரிட்டி காலம்:
இந்த திட்டத்தின் குறைந்தபட்ச காலம் 10 வருடம் ஆகும், அதிகபட்சமாக 20 வருடம் வரை இந்த பாலிசியை நீங்கள் வாங்கலாம்.
மெச்சூரிட்டி வயது:
இந்த பாலிசி மெச்சூரிட்டி ஆகும்போது உங்கள் வயது 70 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
5 வருடத்தில் ரூ.14,80,000/- பெறக்கூடிய நல்ல திட்டம்..! ஏப்ரல் 4 முதல் புதிய வட்டி விகிதத்துடன் நடைமுறைக்கு வருகிறது..! மிஸ் பண்ணிடாதீங்க..!
காப்பீட்டு தொகை (Sum Assured):
இந்த பாலிசியை வாங்குவதற்கான குறைந்தபட்சம் காப்பீட்டு தொகை 2,00,000/- ஆகும். அதிகபட்சம் காப்பீட்டு தொகை என்று பார்க்கும் போது 5,00,000/- வரை இந்த பாலிசியை வாங்கலாம். நீங்கள் தேர்வு செய்யும் Sum Assured தொகையை பொறுத்து உங்களுக்கான பாலிசி அமௌன்ட் மாறுபடும்.
பிரீமியம் தொகையை செலுத்தும் முறை:
இந்த பாலிசியை வாங்கிய பிறகு உங்களது பிரீமியம் தொகையை நீங்கள் ஒவ்வொரு மாதம் அல்லது, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அல்லது, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அல்லது ஒரு வருடத்திற்கு ஒரு முறை செலுத்தலாம்.
Grace Period:
இந்த பாலிசியில் Grace Period-ம் வழங்குகிறர்கள். அதாவது உங்களது பிரீமியம் தொகையை ஒவ்வொரு மாதம் செலுத்துகிறீர்கள் என்றால் அதற்கு 15 நாட்கள் Grace Period வழங்குகிறார்கள். அதுவே Quarterly, Half Yearly or Yearly இவற்றில் ஏதாவது ஒரு முறையில் பிரீமியம் தொகையை வழங்கினால் 30 நாட்கள் வரை Grace Period வழங்குகிறார்கள்.
வங்கி கடன் பெரும் வசதி:
இந்த பாலிசியில் இணைந்தவர்களுக்கு வங்கிக்கடன் வாங்கும் வசதியையும் வழங்குகிறது. இருப்பினும் அதற்கும் சில விதிமுறைகள் உள்ளது. அதாவது இந்த பாலிசியில் இணைந்த 2 வருடத்திற்கு பிறகு நீங்கள் வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம். கடன் தொகை எவ்வளவு என்பது உங்களின் Sum Assured தொகையை பொறுத்து மாறுபடும்.
எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்:
30 வயதில் உள்ள ஒரு பெண் 4 லட்சம் Sum Assured-யில் 20 வருடம் கால அளவில் இந்த பாலிசியை வாங்கினால். அவர்கள் முதல் மாதம் மட்டும் 1311 செலுத்த வேண்டும். பிறகு இரண்டாவது மாதத்தில் இருந்து பாலிசியின் கடைசி மாதம் வரை 1283 ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும். பாலிசியின் கால அளவான 20 வருடத்தில் அவர்கள் மொத்தமாக 3,08,399/- ரூபாயை டெபாசிட் செய்திருப்பார்கள். பாலிசியின் கால அளவான 20 வருடம் முடிந்த பிறகு அவர்களுக்கு கிடைக்கக்கூடிய மெட்சூரிட்டி தொகை 5,30,000/- ரூபாய். (ஆக தினமும் 42 ரூபாய் சேர்த்து வைத்து இந்த பாலிசியில் மாதம் 1283 ரூபாய் டெபாசிட் செய்து வந்தாலே போதும்.)
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாதந்தோறும் 5,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய மத்திய அரசின் புதிய பென்ஷன் திட்டம்..!
Death Benefits:
எதிர்பாராத விதமாக இந்த பாலிசியை வாங்கியவர்கள் இந்த பாலிசியின் 20 வருடத்திற்குள் இறந்தால் அதற்கு Death Benefits வழங்குகிறார்கள். அதாவது பாலிசிதாரரின் நாமினிக்கு கிடைக்க கூடிய Benefits தான் Death Benefit. ஆக அவர்களது நாமினிக்கு Death Benefits தொகை எவ்வளவு கிடைக்கும் என்றால். பாலிசியை வாங்க முதல் 5 வருடத்தில் பாலிசிதாரர் இறக்கும் பட்சத்தில் காப்பீட்டு தொகையில் 110 சதவீதம் தொகையை அவர்களது நாமினிக்கு வழங்குவார்கள் அதாவது 4,40,000 ரூபாயை வழங்குவார்கள்.
அதுவே 5 வருடத்திற்கு பிறகு பாலிசி ஹோல்டர் இறந்தால் காப்பீட்டு தொகை 110% + Loyalty Addition தொகை ஆகியவற்றை சேர்த்து வழங்குவார்கள்.
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |