LIC -யில் 138 ரூபாய் முதலீடு செய்தால் 13.5 லட்சம் பெறும் சூப்பரான திட்டம் மிஸ் பண்ணிடாதீங்க 

Advertisement

LIC Bima Policy Details in Tamil

மனிதர்களின் வாழ்க்கையில் பணம் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அப்படிப்பட்ட பணத்தை சேமிப்பதும் முக்கியம். நீங்கள் இதில் சேமிப்பது என்று யோசித்து கொண்டிருப்பவர்களாக இருந்தால் நமது பதிவில் தினந்தோறும் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் LIC-யில் 138 ரூபாய் சேமித்தல் 13.5 லட்சம் பெரும் திட்டத்தில்  யாரெல்லாம் பயன் பெறலாம் என்று படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

LIC Bima Ratna Policy Details in Tamil:

LIC பீமா ரத்னா திட்டம் என்பது ஆயுள் காப்பீட்டு திட்டம். இது கார்ப்பரேட் முகவர்கள், தரகர்கள், இன்சூரன்ஸ் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் (IMF) மற்றும் பொதுவான சேவை மையங்கள் (CSC) மூலம் பெறக்கூடிய, இணைக்கப்படாத, பங்கேற்காத, தனிப்பட்ட திட்டமாகும். இந்த திட்டம் பல்வேறு நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் பெரிதும் உதவியாக இருக்கிறது.

LIC-யில் மாதம் 1968 ரூபாய் செலுத்தினால் 13,12,500 ரூபாய் பெறும் திட்டம்..

வயது தகுதி:

பாலிசிதாரரின் நுழைவு வயது 15 ஆண்டுகள் பாலிசி காலத்திற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் மற்றும் 25 ஆண்டுகள் பாலிசி காலத்திற்கு அதிகபட்சம் 55 ஆண்டுகள் ஆகும். பாலிசியின் முதிர்வுக்கான வயது வரம்பு 70 ஆண்டுகள்.

பாலிசியை செலுத்தும் முறை:

LIC பீமா ரத்னா திட்டத்திற்கான பிரீமியத்தை மாதந்தோறும் (NACH மூலம் மட்டும்), காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் என உங்களின் விருப்பத்திற்கேற்ப செலுத்தி கொள்ளலாம்.

கடன் வசதி:

இந்த திட்டத்தில் நீங்கள் 2 வருடம் பாலிசியை சரியாக செலுத்தியிருந்தால் கடன் பெறும் வசதி இருக்கிறது.

திட்டத்தின் நன்மைகள்:

எல்ஐசி பீமா ரத்னா திட்டம் பாலிசிதாரர்களுக்கு இறப்பு பலன், உயிர்வாழும் பலன், முதிர்வு நன்மை மற்றும் உத்தரவாதமான சேர்த்தல்கள் போன்ற பல நன்மைகள் இருக்கிறது.  பாலிசி காலத்தின் போது பாலிசிதாரரின் இறப்பிற்கு இறப்புப் பலன் அளிக்கப்படும் மற்றும் இறப்பின் மீதான உறுதியளிக்கப்பட்ட தொகையையும் சேர்த்து உத்தரவாதம் அளிக்கப்பட்டது, இது வருடாந்திர பிரீமியத்தின் ஏழு மடங்கு அல்லது அடிப்படைக் காப்பீட்டுத் தொகையின் 125 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும்.

SBI-யில் 5 வருடத்தில் Rs.7,10,000 பெறக்கூடிய நல்ல திட்டம்.. 

பாலிசி முதிர்வு ஆண்டு:

இந்த பாலிசியில் குறைந்தபட்ச தொகையாக 5 லட்சமும், அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த திட்டத்தின் முதிர்வு ஆண்டு 15 வருடம், 20 வருடம், 25 வருடம் இருக்கலாம்.

இந்த திட்டத்தில் லாபம் எவ்வளவு பெறலாம்:

30 வயதில் அடிப்படைத் தொகையுடன் எல்ஐசி பீமா ரத்னா திட்டத்தை தேர்ந்தெடுத்தால் 20 வருட பாலிசி காலத்திற்கு 10 லட்சமாக இருக்கும். அவர் தனது பிரீமியங்களை ஆண்டுதோறும் செலுத்தும் முறையை தேர்வு செய்திருந்தால், அடுத்த 16 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 50,000 ரூபாய் செலுத்த வேண்டும். அப்படியென்றால் நாளொன்றுக்கு 138 ரூபாய் வருமானத்தில் ஒதுக்க வேண்டும். 20 ஆண்டுகள் முடிவில் அவருக்கு ரூ.10 லட்சம் பணம் மற்றும் கூடுதல் வருவாய் ரூ.3 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டு ரூ.13.5 வரை கிடைக்கும். 

Lic-யில் ஒரே ஒரு பிரீமியம் செலுத்தினால் போதும் 10 வருடத்தில் Rs.21,25,000 பெறலாம்..!

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil

 

Advertisement