LIC Dhan Rekha Plan Details in Tamil
மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் பணம் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. பணத்தை சம்பாதிப்பதை விட சேமிப்பது முக்கியமானது. அதனால் தான் உங்களுக்கும் உதவும் வகையில் தினந்தோறும் பல்வேறு வகையான திட்டங்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் LICயில் உள்ள திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
LIC Dhan Rekha Plan Details:
LIC -யின் இந்த திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள் என்றால், இது ஒரு மணி PACK பாலிசி என்பதால். இந்த பாலிசியின் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட தொகை உங்களுக்கு Money Pack வழங்கப்படும்.
Money Pack பாலிசியில் எவ்வளவு தொகை வழங்கப்படும்:
பாலிசி காலம் 20 ஆண்டுகள் என்றால், முதலீட்டாளர் 10 மற்றும் 15-வது பாலிசி ஆண்டுகளின் முடிவில் அடிப்படைத் தொகையில் 10% தொகையினை பெறுவார்.
பாலிசி காலம் 30 ஆண்டுகளாக இருந்தால், முதலீட்டாளர் 15, 20 மற்றும் 25-வது பாலிசி ஆண்டுகளின் முடிவில், அடிப்படைத் தொகையில் 15% தொகையினை பெறுவார்.
40 வருட பாலிசியில், 20, 25, 30 மற்றும் 35-வது பாலிசி ஆண்டுகளின் முடிவில், அடிப்படைத் தொகையில் 20% தொகை Money Pack தொகையாக வழங்கப்படும்.
மாதம் மாதம் 9,250/- ரூபாய் வருமானம் தரும் அருமையான திட்டம் கடைசி தேதி மார்ச் – 31..!
Guaranteed Addition:
பாலிசிக்கான காலம் | Rs.1,000-கான உத்திரவாத தொகை |
6 முதல் 20 வருடம் வரை | நீங்கள் பாலிசி செய்துள்ள மொத்த தொகையில் ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 50 ரூபாய் உத்திரவாத தொகை வழங்கபடுகிறது. |
21 முதல் 30 வருடம் வரை | பாலிசி செய்த மொத்த தொகையின் அடிப்படையில் ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 55 ரூபாய் உத்திரவாத தொகை வழங்கபடுகிறது. |
31 முதல் 40 வருடம் வரை | நீங்கள் பாலிசி செய்துள்ள மொத்த தொகையில் ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 60 ரூபாய் உத்திரவாத தொகை வழங்கபடுகிறது. |
இந்த திட்டத்தில் சேருவதால் கிடைக்கும் லாபம்:
5 லட்சம் 30 வயது முதலீடு செய்தால்:
நீங்கள் இந்த திட்டத்தில் 30 வயதில் 5 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், மேலும் பாலிசி பிரீமியம் காலமும் 30 ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்திற்கான மாத தொகையாக 3348 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த பாலிசியில் முதல் 15 வருடம் மட்டும் தான் Premiyum செலுத்த வேண்டியிருக்கும். மற்ற 15 வருடம் பிரீமியம் செலுத்த தேவையில்லை. முதல் 15 வருடத்தில் பிரீமியம் செலுத்திய தொகை 5,78,632 ரூபாய் செலுத்திருப்பீர்கள். Money Pack தொகை 2,25,000 ரூபாயும், முதலீட்டு தொகை 5 லட்சம், Guaranteed Addition தொகை 6,50,000 ரூபாய் என மொத்தமாக 13,75,000 ரூபாய் பெறலாம்.
36 மாதத்தில் 3,83,000/- பெறும் அருமையான திட்டம்
5 லட்சம் 25 வயது முதலீடு செய்தால்:
நீங்கள் இந்த திட்டத்தில் 25 வயதில் 5 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், மேலும் பாலிசி பிரீமியம் காலமும் 20 ஆண்டுகள் கால அளவில் வாங்கினால் 4,659 ரூபாய் பிரிமியம் செலுத்த வேண்டும்.
முதல் 5 வருடத்தில் பிரீமியம் செலுத்திய தொகை 5,37,170 ரூபாய் செலுத்திருப்பீர்கள். உங்களுக்கு கிடைக்க கூடிய Money Pack தொகையை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
Money Pack தொகை 10,000 ரூபாயும், முதலீட்டு தொகை 5 லட்சம், Guaranteed Addition தொகை 3,75,000 ரூபாய் என மொத்தமாக 9,75,000 ரூபாய் பெறலாம்.
10 லட்சம் 30 வயது முதலீடு செய்தால்:
நீங்கள் இந்த திட்டத்தில் 30 வயதில் 10 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், மேலும் பாலிசி பிரீமியம் காலமும் 30 ஆண்டுகள் கால அளவில் வாங்கினால் 4,659 ரூபாய் பிரிமியம் செலுத்த வேண்டும்.
நீங்கள் இந்த திட்டத்தில் 30 வயதில் 10 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், மேலும் பாலிசி பிரீமியம் காலமும் 15 ஆண்டுகள் கால அளவில் வாங்கினால் 6,523 ரூபாய் பிரிமியம் செலுத்த வேண்டும்.
முதல் 5 வருடத்தில் பிரீமியம் செலுத்திய தொகை 11,26,530 ரூபாய் செலுத்திருப்பீர்கள். Money Pack தொகை 4,50,000 ரூபாயும், முதலீட்டு தொகை 10 லட்சம், Guaranteed Addition தொகை 13,00,000 ரூபாய் என மொத்தமாக 27,50,500 ரூபாய் பெறலாம்.
400 நாட்களில் Rs.3,25,938 ரூபாய்க்கு மேல் லாபம் தரும் அருமையான சேமிப்பு திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |