மாதம் ரூ.730 செலுத்தினால் ரூ.1 கோடி கிடைக்கும் LIC பாலிசி பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

LIC Dhan Rekha Plan in Tamil

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்று தான் இந்த எல்.ஐ.சி ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஆகும். இது தனது வடிக்கையாளர்களுக்காக பல சிறப்பான பாலிசி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதாவது இது தனிநபர்களின் சேமிப்பு மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பல காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகிறது. அவற்றில் சில எல்ஐசி டேர்ம் இன்சூரன்ஸ், எண்டோமென்ட் திட்டங்கள், பணத்தை திரும்பப் பெறும் பாலிசிகள், லைஃப் திட்டங்கள் ஆகியவை ஆகும். மேலும் இங்கு நீங்கள் உங்களின் பணத்தை எவ்வித அச்சமும் இல்லாமல் முதலீடு செய்யலாம். உங்களது பணம் பாதுகாப்பாக இருக்கும் என்ற மத்திய அரசின் உத்தரவாதம் உள்ளது. ஆனால் நம்மில் பலருக்கும் எல்.ஐ.சி ஆயுள் காப்பீட்டு திட்டங்களை பற்றிய சரியான புரிதல் இல்லை. எனவே தான் இன்று  எல்.ஐ.சி நிறுவனத்தின் தன் ரேகா பாலிசி பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

LIC Dhan Rekha Plan Details in Tamil:

LIC Dhan Rekha Plan Details in Tamil

இந்த எல்.ஐ.சி தன் ரேகா பாலிசியானது பணத்தைத் திரும்பப்பெறும் திட்டமாகும். இந்த எல்.ஐ.சி தன் ரேகா பாலிசியில் நீங்கள் முதலீடு செய்யும் தொகை உங்களுக்கு இரண்டுமடங்கு அல்லது மூன்று மடங்காக திரும்ப அளிக்கப்படும்.

தகுதிகள்:

இந்த பாலிசியை நீங்கள் பிறந்து 90 நாட்களே ஆன குழந்தை முதல் 8 வயது நிரம்பிய குழந்தையின் பெயரிலும் எடுத்து கொள்ளலாம்.

மேலும் இந்த பாலிசியில் நுழைவதற்கு அதிகபட்ச வயது வரம்பு 26 வயது முதல் 35 வயது வரை ஆகும்.

555 நாட்களுக்கு இப்படி ஒரு வட்டியை யாராலும் இனிமேல் தரவேமுடியாது

முதலீடு செய்யும் கால வரம்பு:

இந்த பாலிசியில் மூன்று பிரிவுகள் உள்ளன. அதாவது 20 ஆண்டுகள், 30 ஆண்டுகள் மற்றும் 40 ஆண்டுகள். இதில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். விதிமுறைகளின்படி பிரீமியம் தொகை செலுத்த வேண்டும்.

நீங்கள் 20 வருட பாலிசியைத் தேர்வுசெய்தால், 10 வருடங்களுக்கான பிரீமியத்தை செலுத்த வேண்டும். இதுவே நீங்கள் 30 வருட பாலிசியைத் தேர்வுசெய்தால், 15 வருடங்களுக்கான பிரீமியத்தை செலுத்த வேண்டும்.

ஒருவேளை நீங்கள் 40 வருட பாலிசியைத் தேர்வுசெய்தால், 20 வருடங்களுக்கான பிரீமியத்தை செலுத்த வேண்டும். இது தவிர நீங்கள் ஒரே ஒரு பிரீமியம் தொகையாகவும் செலுத்தலாம்.

நன்மைகள்:

இந்த பாலிசியில் நீங்கள் குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை.

இந்த பாலிசியில் உங்களுக்கு உறுதியளிக்கப்பட்ட காப்பீட்டு தொகையில் இருந்து ஒருகுறிப்பிட்ட பகுதியை முதிர்வு காலத்திற்கு முன்னரே பெற்று கொள்ளலாம்.

இந்த பாலிசியின் சிறப்பம்சம் என்னவென்றால், இதன் முதிர்வுக் காலத்தில் பாலிசிதாரர் ஏற்கெனவே பெற்ற தொகை எதுவும் பிடித்தம் செய்யப்படாமல் முழு காப்பீட்டுத் தொகையையும் பெறுவார்.

இந்த பாலிசியில் உங்களுக்கு இறப்பு காப்பீடும் வழங்கப்படுகிறது. அதாவது பாலிசியின் முதிர்வு காலத்திற்கு முன்னரே பாலிசிதாரர் இறந்துவிட்டால் இந்தத் திட்டம் குடும்பத்திற்கு நிதி உதவியை வழங்குகிறது.

மேலும் இதில் நீங்கள் கடனும் வாங்கி கொள்ளலாம்.

444 நாட்களிலேயே 1,10,114 ரூபாய் வரை கிடைக்கும் திட்டம்

லாபம்:

உதாரணத்திற்கு நீங்கள் நீங்கள் 20 ஆண்டுகளுக்கான பாலிசியை தேர்வு செய்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். இதில் நீங்கள் அடிப்படை காப்பீடாக 10 லட்சம் ரூபாய் முதல் எடுத்து கொள்ளலாம். அதனால் நீங்கள் 50 லட்சம் ரூபாயை காப்பீடு தொகையாக நிர்ணையிக்கிறீர்கள்.

மேலும் இதில் நீங்கள் இறப்பு காப்பீடும் எடுத்து கொள்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். மாதம் 729 ரூபாய் அல்லது ஆண்டுக்கு 8,754 ரூபாய் என 10 வருடங்களுக்கு பிரீமியம் செலுத்துகிறீர்கள்.

நீங்கள் ஒருவேளை ஏதோ ஒரு விபத்தில் மரணம் அடைந்து விட்டீர்கள் என்றால் உங்களது குடும்பத்திற்கு காப்பீடு தொகை 50 லட்சம் ரூபாய் மற்றும் மரண இழப்பீடு 50 லட்சம் ரூபாய் என மொத்தம் 1 கோடி ரூபாய் கிடைக்கும்.

666 நாட்களில் 1,14,573 ரூபாய் வரை அளிக்கும் அருமையான திட்டம்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil

 

Advertisement