Lic-யில் ஒற்றை பிரீமியம் செலுத்தி 21,25,000 ரூபாய் பெறக்கூடிய புதிய பாலிசி..!

Advertisement

Lic Dhan Vriddhi Plan Details 

நாம் அனைவரும் எல்ஐசி பற்றி கேள்வி பட்டிருப்போம். Lic என்பதன் முழு விரிவாக்கம் Life Insurance Corporation of India ஆகும். மேலும் இந்த Lic நிறுவனம் ஆனது மும்பாயினை தலைமை இடமாக கொண்டிருந்தாலும் கூட இந்தியாவில் தான் மக்கள் இதில் அதிகமாக பயன் அடைந்து வருகிறார்கள். அந்த வகையில் Lic-யில் குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் என பலவகையான பாலிசி திட்டங்கள் இடம் பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது மற்ற Lic திட்டங்ளுக்கு சம அளவு ஈடு கொடுக்கும் அளவில் புதிய திட்டம் ஒன்று அறிமுகம் ஆகியுள்ளது. ஆகவே அத்தகைய திட்டத்தினை பற்றிய முழு விவரங்களையும் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Lic Dhan Vriddhi Plan 869:

 lic dhan vriddhi plan 869 in tamil

எல்ஐசியில் புதிதாக அறிமுகம் செய்துள்ள இந்த பாலிசி ஆனது Single பிரீமியம் தொகையினை செலுத்தும் விதமாக உள்ளது. மேலும் இந்த பாலிசி ஆனது 2 விதமாக உள்ளது.

Option -1 என்ற முறையில் நீங்கள் இந்த பாலிசியினை பெற்றால் உங்களுக்கான பாலிசி தொகையினை ஒற்றை பிரிமீயமாக செலுத்தலாம்.

அதுவே Option -2  என்றால் உங்களுக்கான பாலிசி தொகையினை 10 முறையாக பிரித்து செலுத்தி கொள்ளலாம்.

வயது மற்றும் பாலிசி காலம்:

10 வருட பாலிசி  15 வருட பாலிசி  18 வருட பாலிசி 
குறைந்தப்பட்ச வயது 8 வயது 3 வயது குழந்தை பிறந்த 90 நாட்கள்
 Option- 1 அதிகப்பட்ச வயது 60 வயது 60 வயது 60 வயது
 Option- 2 அதிகப்பட்ச வயது 40 வயது 35 வயது 32 வயது

 

அதேபோல் நீங்கள் Option 1-ஐ தேர்வு செய்து மேலே உள்ள பாலிசி காலத்தில் பணத்தை சேமித்தால் அத்தகைய பாலிசி முடியும் போது 78 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அதுவே Option 2 என்றால் உங்களுக்கு பாலிசி முடியும் போது 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

New Scheme👇👇 செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் செலுத்தினால் கிடைக்கும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா

பாலிசி தொகை:

இந்த பாலிசிக்கான குறைந்தப்பட்ச தொகை 1,25,000 ரூபாய் ஆகும். அதுவே அதிகப்பட்ச தொகை என்பது வரம்பே கிடையாது.

பாலிசிக்கான உத்திரவாத தொகை:

நீங்கள் இந்த பாலிசி திட்டத்தில் செலுத்தும் மொத்த தொகைக்கு ஒவ்வொரு 1,000 ரூபாய்க்கும் குறிப்பிட்ட உத்திரவாத தொகை ஆனது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

பாலிசி தொகை  Option- 1 Option- 2
பாலிசி காலம்  10 வருடம்  15 வருடம்  18 வருடம்  10 வருடம்  15 வருடம்  18 வருடம் 
Rs.1,25,000/- முதல் Rs.2,45,000/- Rs. 60/- Rs. 65/- Rs. 65/- Rs. 25/- Rs. 30/- Rs. 30/-
Rs.2,50,000/- முதல் Rs.6,95,000/- Rs. 65/- Rs. 70/- Rs. 70/- Rs. 30/- Rs. 35/- Rs. 35/-
Rs.7,00,000 அல்லது அதற்கு மேல் Rs. 70/- Rs. 75/- Rs. 75/- Rs. 35/- Rs. 40/- Rs. 40/-

 

இந்த பாலிசியில் எவ்வளவு தொகை கிடைக்கும்:

மேலே சொல்லப்பட்டுள்ள முறையில் ஒரு நபர் அவருடைய 25 வயதில் 15 வருட கால அளவில் 10,00,000 ரூபாய் பாலிசியினை தேர்வு செய்தால் அவர் Single பிரீமியமாக 8,95,824 ரூபாய் செலுத்த வேண்டும்.

அப்படி என்றால் 15 வருடத்திற்கான உத்திரவாத தொகையாக 11,25,000 ரூபாய் கிடைக்கும். ஆகவே மொத்தமாக உத்திரவாத தொகை + பாலிசி தொகை என இரண்டினையும் சேர்த்து 21,25,000 ரூபாய் பெறலாம்.

New Scheme👇👇 இரண்டே வருடத்தில் Rs. 1,15,562/- பெறக்கூடிய அசத்தலான தபால் துறை சேமிப்பு திட்டம்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement