எதிர்காலத்தில் பல நன்மைகளை அளிக்கும் அருமையான LIC திட்டம்..!

Advertisement

LIC Jeevan Amar Policy

பொதுநலம் பதிவின் வாசகர்கள் அனைவருக்கும் இன்றைய பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும். அப்படி என்ன பதிவு என்று யோசிக்கிறீர்களா..? அது வேறவொன்றும் இல்லை LIC -யின் ஒரு அருமையான எதிர்கால திட்டத்தை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். தினமும் இந்த பதிவின் வாயிலாக பல திட்டங்கள் பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் LIC -யின் ஜீவன் அமர் திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

பம்பு செட்டு அமைப்பதற்கு 90% மானியம் வழங்கப்படுகிறது.! யாரெல்லாம் பயன் அடையலாம்

LIC Jeevan Amar Policy in Tamil:

LIC Jeevan Amar Policy

எல்ஐசி ஜீவன் அமர் (LIC Jeevan Amar) என்பது பங்குபெறாத, இணைக்கப்படாத, டேர்ம் இன்சூரன்ஸ் திட்டமாகும். இந்த பாலிசியில் பாலிசி காலம் முழுவதும் ஒரே ஒரு காப்பீட்டு தொகையை தேர்வும் செய்யலாம் அல்லது அதிகரிக்கவும் செய்யலாம்.

இந்த திட்டமானது உங்கள் குடும்பத்திற்கு உறுதியளிக்கும் மரண பலன்களுடன் டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டத்தின் அனைத்து நன்மைகளையும் வழங்குகிறது.

இந்தத் திட்டம் அதிகரிக்கும் காப்பீட்டுத் தொகை மற்றும் நிலை காப்பீட்டுத் தொகை என்று  இரண்டு நன்மைகளில் இருந்து தேர்ந்தெடுக்கும் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.

பெண்களுக்கு சிறப்பு பிரீமியம் கட்டணங்களை இந்தத் திட்டம் வழங்குகிறது. அதிக உறுதியளிக்கப்பட்ட தொகையில் தனித்துவமான தள்ளுபடிகள் இதில் வழங்கப்படுகிறது.

கூடுதல் பிரீமியம் தொகையை செலுத்துவதன் மூலம் அடிப்படை கவரேஜை மேம்படுத்தும் தற்செயலான ரைடர் நன்மைகளும் இதில் கிடைக்கின்றன. இந்த திட்டத்தில் தவணை முறையில் பலன் செலுத்துவதையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.

ஆழ்துளை கிணறு அமைக்க 100% மானியம்..!

LIC Jeevan Amar Policy Eligibility in Tamil: 

இந்த எல்ஐசி ஜீவன் அமர் பாலிசி திட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும் அதிகபட்சம் 65 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இதில் பாலிசிதார் 80 வயது வரையில் காப்பீடு பெற முடியும்.

இந்த பாலிசியினை 20 வயதான ஒருவர் எடுத்தால், அதிகபட்சமாக 60 ஆண்டுகள் காப்பீடு பெறலாம். 50 வயதில் பாலிசி எடுத்தால் 30 ஆண்டுகள் அதிகபட்ச காப்பீட்டு காலமாக இருக்கும்.

இந்த திட்டத்தில் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை 25 லட்சம் ரூபாய் ஆகும். அதிகபட்ச காப்பீடு வரம்பு என்பது இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை.

அசத்தலான ஆயுள் காப்பீடு..! முதிர்வு காலத்தில் லம்ப் அமௌன்ட் கிடைக்கும்..!

எல்ஐசி ஜீவன் அமர் திட்டத்தின் நன்மைகள்:

  1. பாலிசிதாரர் பாலிசி காலத்தின் இறுதி வரை உயிர் பிழைத்திருந்தால், முதிர்வு பலன் எதுவும் செலுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை.
  2. இந்த திட்டத்தில் இறப்பு பலனும் உண்டு. அதாவது இந்த திட்டத்தில் பாலிசிதாரர் இறக்கும்பட்சத்தில் நாமினி, பணத்தை மொத்தமாகவோ அல்லது 5 ஆண்டுகள், 10 ஆண்டுகள் அல்லது 15 ஆண்டு தவணைகளாகவோ பிரித்து வாங்கிக் கொள்ளலாம்.
  3. இந்த பாலிசியில் பாலிசி காலம் முழுவதும் பிரீமியத்தை செலுத்தலாம். அல்லது விரைவாகவும் பிரீமியத்தினை செலுத்தி முடிக்கலாம். முழுவதுமாக ஒரே தவணையிலும் பிரீமியத்தினை செலுத்திக் கொள்ளலாம்.
  4. இதில் ரைடர் பாலிசிகளும் உண்டு. அதாவது விபத்து அல்லது புகை பிடிப்போருக்கு பாலிசி வழங்கப்படுகிறது. இந்த ஜீவன் அமர் பாலிசியில் மற்ற பாலிசிகளை போலவே பெண்களுக்கான பிரீமியம் மிகவும் குறைவு.
  5. இதில் வரி சலுகையும் உண்டு. அதாவது இந்த பாலிசியில் 80 -சி பிரிவின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த பாலிசியினை பொறுத்த வரையில் பாலிசி தாரர் எப்போது தங்களால் பிரீமியம் செலுத்த முடியுமோ அப்போது செலுத்திக் கொள்ளலாம்.

 

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement