எல் ஐ சி புதிய பாலிசி
பொதுவாக நம்முடைய வாழ்க்கையில் ஒரு நாளைக்கு 1,000 ரூபாய்க்கு மேல் பணத்தினை நம்முடைய அன்றாட தேவைக்காக செலவு செல்கிறோம். அத்தகைய செலவானது கண்டிப்பாக நமக்கு அத்தியாவசியமானதாக இருந்தாலும் கூட அதில் ஒரு பங்கினை சேமித்து வைக்க வேண்டும். ஏனென்றால் இப்படி நாம் பணத்தினை சேமித்து வைப்பதன் மூலம் எதிர்காலத்தில் அந்த பணமானது ஏதோ ஒரு தேவைக்காக கண்டிப்பாக பயன்படக்கூடியதாக உள்ளது. ஆகையால் வீட்டிலேயே இந்த பணத்தினை சேமித்து வைப்பதன் மூலம் நமக்கு அவ்வளவாக பலன் எதுவும் கிடைப்பது இல்லை. அதுவே போஸ்ட் ஆபீஸ் மற்றும் Lic இதுபோன்றவற்றில் சேமித்து வந்தால் உங்களுக்கு வட்டி கூடுதலாக கிடைக்கும். அந்த வகையில் இன்று Lic-யின் ஒரு அருமையான சேமிப்பு திட்டத்தை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
இதையும் படியுங்கள்⇒ LIC-யில் மாதந்தோறும் 6500 செலுத்தினால் 27 லட்சம் பெறும் திட்டம்..
Lic Jeevan Azad 868 Plan Details:
Lic-யில் அறிமுகம் செய்துள்ள Lic Jeevan Azad 868 பாலிசியானது எந்த ஒரு பங்கு சந்தை சாராத பாலிசி ஆகும். அதுபோல நீங்கள் இந்த பாலிசியில் எல்லா வருடமும் பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
நீங்கள் இந்த பாலிசி மூலம் லோன் பெற வேண்டும் என்று விரும்பினால் அதற்கான வாய்ப்பும் இதில் உள்ளது. ஆனால் நீங்கள் பாலிசி வாங்கி 2 வருடம் முடிந்து இருந்தால் மட்டுமே இதில் லோன் பெற முடியும்.
வயது தகுதி:
இந்த பாலிசியில் ஒரு குழந்தை பிறந்த 90 நாட்கள் முதல் 50 வயது வரை என எப்போது வேண்டுமானாலும் இந்த பாலசியினை பெற்று கொள்ளலாம்.
மேலும் இத்தகைய பாலிசி முடியும் போது பாலிசிதாரர்களுக்கு குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்ச வயது 70 இதில் ஏதாவது ஒன்று கண்டிப்பாக இருக்க வேண்டும்.
பாலிசிக்கான தொகை:
எல்ஐசியில் உள்ள இந்த பாலிசிக்கான குறைந்த பட்ச தொகை 2 லட்சம் மற்றும் அதிகபட்ச தொகை 5 லட்சம் ரூபாய் ஆகும்.
இத்தகைய தொகையினை 3 மாதத்திற்கு ஒரு முறை, 6 மாதத்திற்கு ஒரு முறை அல்லது வருடத்திற்கு ஒரு முறை என எப்போது வேண்டும் செலுத்தலாம்.
பாலிசிக்கான காலம்:
இந்த பாலிசிக்கான முதிர்வு காலம் என்று பார்த்தால் 15 வருடம் மற்றும் 20 வருடம் ஆகும். இதில் ஏதாவது ஒன்றினை நீங்கள் பாலிசி பெறும் போது தேர்வு செய்ய வேண்டும்.
அதுமட்டும் இல்லாமல் உங்களுடைய பாலிசியின் முதிர்வு காலத்தில் இருந்து 8 வருடத்தினை கழித்த பிறகு மீதம் உள்ள வருடம் உங்களுக்கான தொகையினை நீங்கள் செலுத்தினால் போதும்.
Lic Jeevan Azad 868 Policy in Tamil:
இதில் நீங்கள் 5 லட்சம் ரூபாய்க்கான பாலசியினை தேர்வு செய்து அதனை நீங்கள் 15 வருட கால அளவில் வாங்குனீர்கள் என்றால் அதில் 8 வருடம் கழித்து பிறகு 7 வருடம் மட்டுமே தொகை செலுத்தினால் போதும்.
Lic Jeevan Azad 868 Policy in Tamil | ||||
வயது | பாலிசிக்கான தொகை | முதிர்வு காலம் | மாதம் செலுத்த வேண்டிய தொகை | பாலிசியில் செலுத்த வேண்டிய மொத்த தொகை |
25 வயது | 5 லட்சம் | 15 வருடம் ( 15-8= 7) | 3,785 ரூபாய் | 3,12,451 ரூபாய் |
இதையும் படியுங்கள்⇒ Lic-யில் ஒரே ஒரு பிரீமியம் செலுத்தினால் போதும் 10 வருடத்தில் Rs.21,25,000 பெறலாம்..
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |