LIC -யில் 868 ரூபாய் செலுத்தினால் போதும் 2 லட்சம் ரூபாய் பெறக்கூடிய அருமையான திட்டம்..!

Advertisement

Lic Jeevan Azad Policy in Tamil

மனிதர்களின் வாழ்க்கையில் பணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதிலும் எதிர்காலத்தில் பணத்தேவை அதிகரித்து கொண்டே தான் இருக்கும். எனவே அனைவருமே பணத்தை சேமித்து வைப்பது அவசியம். அப்படி சேமித்து வைப்பதற்கு பல வலிகள் இருக்கின்றன. அந்த வகையில் LIC-யில் உள்ள சேமிப்பு திட்டங்களை நம் பொதுநலம்.காம் பதிவில் தினமும் பதிவிட்டு வருகிறோம். எனவே இன்றைய பதிவில் LIC –யின் Jeevan Azad Policy 868 (ஜீவன் ஆசாத் பாலிசி 868) பற்றிய விவரங்களை தான் இப்பதிவில் பார்க்க போகிறோம். அதாவது இத்திட்டத்தில் 868 ரூபாய் செலுத்தி 2 லட்சம் பெற்று கொள்ளலாம். எனவே பணத்தை சேமிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இப்பதிவை முழுவதுமாக படித்து பயனடையுங்கள்.

Lic Jeevan Azad Policy 868 Details in Tamil:

LIC ஜீவன் ஆசாத் பாலிசி 868 எந்தவொரு பங்குச்சந்தையும் சாராத பாலிசி. இந்த பாலிசியை நீங்கள் வாங்கும் போதே உங்களுக்கான மெச்சூரிட்டி தொகை எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் 3 லட்சம் பாலிசி வாங்கினால் மருத்துவ சான்றிதழ் தேவையில்லை. ஆனால் 3 லட்சத்திற்கும் அதிகமான தொகை வாங்கினால் மருத்துவ சான்றிதழ் தேவைப்படும்.

பாலிசியை பெறுவதற்கான வயது தகுதி:

குறைந்தபட்சமாக ஒரு குழந்தை பிறந்து 90 நாட்களுக்கு பிறகு வாங்கலாம். அதிகபட்சமாக 50 வயது வரம்பில் இப்பாலிசியை வாங்கலாம்.

Lic-யில் ஒரே ஒரு பிரீமியம் செலுத்தினால் போதும் 10 வருடத்தில் Rs.21,25,000 பெறலாம்..!

கால அளவு:

LIC ஜீவன் ஆசாத் பாலிசியை 15 வருடம் மற்றும் 20 வருட கால அளவில் வாங்கலாம். பாலிசியின் முதிர்வுக்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது அதிகபட்சமாக 70 வயது ஆகும். அதாவது 18 வயதிலிருந்து 70 வயதிற்குள் மட்டுமே பாலிசி தொகையை பெற முடியும்.

பாலிசியின் தொகை அளவு:

இப்பாலிசியை பெறுவதற்கான குறைந்தபட்ச தொகை 2 லட்சம் மற்றும் அதிகபட்ச தொகை 5 லட்சம் ஆகும்.

தொகையினை செலுத்துவதற்கான கால அளவு:

பாலிசியின் கால அளவில் 8 வருடத்தை கழித்து மீதமுள்ள காலத்தில் மட்டும் பாலிசி தொகையினை செலுத்தினால் போதும்.

உதாரணமாக, நீங்கள் 20 வருட கால அளவை தேர்ந்தெடுத்தால் 20 வருடத்தில் 8 வருடத்தை கழித்து மீதமுள்ள 12 வருடத்தில் மட்டும் பாலிசி தொகையினை செலுத்தினால் போதும். 

லோன் பெரும் முறை:

LIC ஜீவன் ஆசாத் பாலிசியில் லோன் பெறக்கூடிய வசதியும் உள்ளது. எனவே நீங்கள் இப்பாலிசியை பெற்று 2 வருடத்திற்கு பிறகு லோன் பெற்று கொள்ளலாம்.

LIC -யில் 138 ரூபாய் முதலீடு செய்தால் 13.5 லட்சம் பெறும் சூப்பரான திட்டம் மிஸ் பண்ணிடாதீங்க

LIC ஜீவன் ஆசாத் பாலிசியின் முதிர்வு காலத்தில் எவ்வளவு லாபம் பெற முடியும்..?

வயது  பாலிசியின் கால அளவு  மாதம் செலுத்த வேண்டிய பாலிசி தொகை  12 வருடத்தில் மொத்தமாக செலுத்திய பாலிசி தொகை  பாலிசியின் முதிர்வு காலத்தில் பெறக்கூடிய மொத்த தொகை 
20 வயது  20 வருடம்  868 ரூபாய்  1,20,112 ரூபாய்  2 லட்சம் 

 

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement