Lic Jeevan Kiran Policy Details in Tamil
நம் முன்னோர்களின் காலத்தில் பணத்தை சம்பாதித்து விட்டு அன்றைய னால செலவுகளை மட்டும் தான் பார்த்தார்கள். அவர்கள் சேமிக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை. ஆனால் இன்றைய காலத்தில் உள்ளவர்கள் அப்படி இருக்க முடியாது. ஏனென்றால் பணத்தை சம்பாதிப்பதை விட சேமிப்பது ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அதனால் சேமிப்பு திட்டங்களை பற்றி ஆராய்கின்றனர். அதனால் இந்த பதிவில் lic-யில் உள்ள பாலிசியை பற்றி தெரிந்து கொள்ளவோ வாங்க..
Lic Jeevan Kiran Policy Details in Tamil:
வயது தகுதி:
இந்த திட்டத்தில் சேர்வதற்கு குறைந்தபட்ச வயதாக 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 65 வயது வரைக்கும் உள்ளவர்கள் இந்த திட்டத்தில் பயன் அடையலாம்.
திட்டத்தின் இரண்டு வகை:
- ஒற்றை பிரீமியம்
- வழக்கமான பிரீமியம்
ஒற்றை பிரீமியம் என்பது நீங்கள் ஒரு முறை மட்டும் பணத்தை டெபாசிட் செய்தால் போதுமானது.
வழக்கமான பிரீமியம் என்பதை நீங்கள் செலக்ட் செய்தால் பாலிசி முடிவடையும் காலம் வரைக்கும் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டியிருக்கும்.
பாலிசியின் காலம்:
குறைந்தபட்சம் 10 வருடங்களாகவும், அதிகபட்சம் 40 வருடமும் வழங்கப்படுகிறது.
50 லட்சம் பாலிசியை எடுத்தால் எவ்வளவு கிடைக்கும்:
விண்ணப்பதாரர் 40 வயதில் 50 லட்சம் பாலிசியை 20 வருட கால அளவில் எடுத்தால் ஒரு வருட பிரீமியம் தொகையாக 48,004 ரூபாய் செலுத்த வேண்டும். அப்போ பாலிசியின் காலமான 20 வருடத்தில் நீங்கள் 9,60,080 ரூபாய் செலுத்திருப்பீர்கள்.
பாலிசியின் இடைப்பட்ட காலத்தில் பாலிசிதாரர் இறந்து விட்டால் அவருடைய நாமினுக்கு 50 லட்சம் வழங்கப்படும்.
நீங்கள் இந்த பாலிசியை 5 வருடத்தில் Surrender செய்கிறீர்கள் என்றால் 1.20 லட்சமும், 10 வருடத்தில் Surrender செய்தால் 2.76 லட்சமும், 15 வருடத்தில் Surrender செய்தால் 5.04 லட்சமும் வழங்குகிறார்கள்.
அதுவே நீங்கள் Single பாலிசியை செலக்ட் செய்திருந்தால் 3,14,280 ரூபாய் செலுத்த வேண்டும். பாலிசியின் இடைப்பட்ட காலத்தில் பாலிசிதாரர் இறந்து விட்டால் அவருடைய நாமினுக்கு 50 லட்சம் வழங்கப்படும்.
பாலிசிதாரர்களுக்கு ஏதும் ஆகாத பட்சத்தில் பாலிசி முடிவடையும் காலத்தில் 3,14,280 பெறுவீர்கள்.
நீங்கள் இந்த பாலிசியை 3 வருடத்தில் Surrender செய்தால் 2,35,710 ரூபாயும், அதுவே 3 வருடத்திற்கு பிறகு Surrender செய்தால் 2,82,852 ரூபாய் கிடைக்கும்.
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |