Rs.3,915/- செலுத்தினால் Rs.26,25,000/- பெறலாம் அருமையான சேமிப்பு திட்டம்..!

Advertisement

LIC Jeevan Labh Policy Full Details in Tamil

நண்பர்களுக்கு வணக்கம் இன்று நாம்.. எல்‌.ஐ.சி ஜீவன் லாப் – 936 திட்டம் பற்றிய தெளிவான தெரிந்துகொள்ள போகிறோம். இது ஒரு Endowment Plan ஆகும். இந்த திட்டத்தின் மிக சிறந்த விசையம் எதுவென்றால் பிரீமியம் மிகவும் குறைவாகும். அதாவது நீங்கள் 16 வருடம் பாலிசி எடுக்குறோம்னா அதுல நாம 10 வருடம் மட்டும் பிரீமியம் செலுத்தினால் போதும். இவற்றில் மூன்று ஆப்ஷன்கள் உள்ளது. இந்த மூன்று ஆப்ஷனிகளை பற்றி பதிவை தொடர்ந்து படிக்கும் போது தெரிந்துகொள்ளுங்கள். குறைந்த பிரீமியத்தில் அதிக வருமானம் கிடைக்கும். சரி இந்த திட்டத்தை பற்றி தொடர்ந்து படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

LIC Jeevan Labh 936 Full Details in TamilLIC Jeevan Labh 936

வயது:

குறைந்தபட்சம் 8 வயது முதல் அதிகபட்சம் 59 வயது வரை உள்ள அனைவரும் இந்த எல்‌.ஐ.சி ஜீவன் லாப்-936 திட்டத்தில் இணைந்து முதலீடு செய்யலாம். 

காப்பீட்டு தொகை (Sum Assured):

நாம் எடுத்திருக்கும் காப்பீட்டு தொகையை பொறுத்து நமது பிரீமியம் மற்றும் போனஸ் போன்றவற்றை கணக்கிடுகின்றன. இவற்றில் குறைந்தபட்ச காப்பீட்டு தொகை 2 லட்சம் ஆகும். அதிகபட்ச காப்பீட்டு  தொகைக்கு எந்த ஒரு வரம்பு இல்லை.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அசத்தலான ஆயுள் காப்பீடு..! முதிர்வு காலத்தில் லம்ப் அமௌன்ட் கிடைக்கும்..!

இந்த திட்டத்திற்கான பாலிசி இயர் மற்றும் அதற்கான பிரீமியம் இயர்:

இவற்றில் மூன்று ஆப்ஷன்கள் வழங்கபடுகிறது எது என்னென்ன என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

  1. 16 வருட பாலிசிக்கு 10 வருடம் மட்டும் பிரீமியம் தொகை செலுத்தினால் போதும்.
  2. 21 வருட பாலிசிக்கு 15 வருடம் மட்டும் பிரீமியம் தொகை செலுத்தினால் போதும்.
  3. 25 வருட பாலிசிக்கு 16 வருடம் மட்டும் பிரீமியம் தொகை செலுத்தினால் போதும்.

மெச்சூரிட்டி இயர்:

  • 75 ஆண்டுகள் ஆகும்.

போனஸ்:

இந்த பாலிசியில் இரண்டு வகையான போனஸ் வழங்குகிறார்கள். அது என்னவென்று பார்க்கலாம்.

  • Vested Simple Reversionary Bonus.
  • Final Additional Bonus

Optional Riders:

இந்த LIC பாலிசி திட்டத்தில் நான்கு வகையான Riders வழங்குகிறார்கள். அது என்னென்ன என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

  1. Accidental Death and Disability Benefit Rider.
  2. Accident Benefit Rider.
  3. New Term Assurance Rider.
  4. New Critical illness Benefit Rider.

பிரீமியம் தொகையை செலுத்தும் முறை:

  1. மாதம்.
  2. காலாண்டு.
  3. அரையாண்டு.
  4. ஆண்டுதோறும்.

ஆகிய நான்கு வகைகளில் நீங்கள் ஏதாவது ஒரு முறையில் தங்களது பிரீமியம் தொகையை செலுத்தலாம்.

கடன் வசதி:

இந்த பாலிசி திட்டத்தின் மூலம் நீங்கள் வங்கிகளில் கடன் வாங்கும் வசதியும் உள்ளது. ஆனால் இந்த பாலிசி திட்டத்தில் இணைந்த மூன்று வருடத்திற்கு பிறகு தான் கடன் வசதியை பெறமுடியும். மேலும் நீங்கள் எடுத்திருக்கும் காப்பீட்டு தொகையை பொறுத்து அதற்கான கடன் தொகை மாறுபடும்.

எடுத்துக்காட்டு:

ஒரு நபர் தனது 25 வயதில் 10 லட்சத்திற்க்கான காப்பீட்டை 25 வருட கால அளவில் வாங்கினால் அவர்கள் மாதம் கட்டவேண்டிய பிரீமியம் தொகை 3915/- ரூபாய் ஆகும். அவர்கள் முதல் 16 வருடத்திற்கு மட்டும் தான் மாதம் மாதம் 3915 ரூபாய் பிரீமியம் தொகையை செலுத்த வேண்டும். மீதமுள்ள 9 வருடம் அவர்கள் பிரீமியம் தொகை செலுத்தவேண்டிய அவசியம் இருக்காது. அப்படி பார்க்கும் போது அவர்கள் 16 வருடத்தில் 7,37,653/- ரூபாய் பிரீமியம் தொகை செலுத்திருப்பார்கள். இந்த திட்டத்தின் மூலம் இவர்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்றால்.

Sum Assured – 10,00,000/-
Bonus – Rs.11,75,000/-
Final Additional Bonus – 2,62,500/-

இவை அனைத்தையும் சேர்த்து உங்களுக்கு மெட்சூரிட்டி தொகையாக 26,25,000/- லாபமாக கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாதம் Rs. 3,348/- செலுத்தினால் போதும் LIC-யில் Rs. 13,75,000 பெறுவதற்கான அருமையான பாலிசி..!

பயன்கள்:

இந்த பாலிசியில் சேர்ந்தவர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் மரணம் ஏற்பட்டால் அவர்களுடைய லீகல் நாமினிக்கு Sum Assured தொகையாக அவர்கள் எவ்வளவு தொகையை தேர்வு செய்தார்களோ அந்த தொகை + Vested Simple Reversionary Bonus + Final Additional Bonus இவை மூன்றையும் சேர்த்து வழங்குவார்கள்.

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement