LIC Jeevan Pragati Policy Details in Tamil
இன்றைய கால கட்டத்தில் மக்களிடையே எதிர்கால சேமிப்பு பற்றிய அதிக விழிப்புணர்வு வந்துள்ளது. ஆனால் எந்த திட்டத்தில் சேமித்தால் அதிக முதிர்வுத்தொகை கிடைக்கும் என்பதை சரியாக புரிந்து கொள்வதில் தான் பலருக்கும் சந்தேகம் உள்ளது. அப்படி உங்களுக்கும் சந்தேகம் உள்ளது என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் LIC Jeevan Pragati Policy பற்றிய முழுவிவரங்களையும் அறிந்துக் கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த LIC Jeevan Pragati Policy-ல் யாரெல்லாம் சேமிக்கலாம் எவ்வளவு சேமிக்கலாம் அப்படி சேமித்தால் என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்பதை பற்றியெல்லாம் அறிந்து கொள்ளுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> எதிர்காலத்தில் பல நன்மைகளை அளிக்கும் அருமையான LIC திட்டம்
LIC Jeevan Pragati Policy in Tamil:
எல்ஐசியின் ஜீவன் பிரகதி திட்டம் என்பது இணைக்கப்படாத, சேமிப்பு மற்றும் பாதுகாப்புடன் கூடிய லாபம் ஈட்டும் திட்டமாகும். ஜீவன் பிரகதி திட்டத்தின் கீழ் (எண்.838) ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை இறப்புக்கான காப்பீட்டுத் தொகை அதிகரிக்கிறது.
இந்த பாலிசியில் 12 – 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.
இந்த பிரகதி பாலிசியின் பிரீமியம் தொகையை நீங்கள் ஆண்டு தொகையாகவும், அரையாண்டு மற்றும் காலாண்டு தொகையாகவும் செலுத்தலாம். அப்படியில்லை என்றால் மாத மாதமும் செலுத்தலாம்.
LIC Jeevan Pragati Policy Eligibility in Tamil:
இந்த திட்டத்தில் 12 வயது முதல் 45 வரை உள்ள எந்த ஒரு இந்திய குடிமகனும் இணைந்து கொள்ளலாம். இந்த பாலிசியில் 12 – 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.
அதாவது இந்த பாலிசி முதிர்வடையும் பொழுது உங்களுக்கு அதிகபட்ச வயதாக 65 வயது இருக்கலாம்.
இதையும் படித்துப்பாருங்கள்=> அசத்தலான ஆயுள் காப்பீடு முதிர்வு காலத்தில் லம்ப் அமௌன்ட் கிடைக்கும்
எல்ஐசி ஜீவன் பிரகதி திட்டத்தின் நன்மைகள்:
அதாவது இந்த பிரகதி திட்டத்தின் தினசரி 200 ரூபாய் வீதம் மாதம் 6000 ரூபாய் செலுத்தினால், 20 வருடம் கழித்து 28 லட்சம் ரூபாய் முதிர்வு பலனாக பெறலாம்.
இதில் நீங்கள் விபத்து காப்பீடு மற்றும் இறப்பு காப்பீடு என இரண்டும் உங்களுக்கு உண்டு.
அதாவது இதில் விபத்து காப்பீடாக குறைந்தபட்சம் 10,000 ரூபாயும், அதிகபட்சம் 1 கோடி ரூபாயும் கிடைக்கும்.
இது ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் இது அதிகரிக்கும்.
அதாவது 0 – 5 வருடத்திற்கான பாலிசியில் அடிப்படை காப்பீட்டில் – 100%,
5 – 10 வருடத்திற்கான பாலிசியில் அடிப்படை காப்பீட்டில் -125%,
11 – 15 வருடத்திற்கான பாலிசியில் அடிப்படை காப்பீட்டில் -150%,
16 – 20 வருடத்திற்கான பாலிசியில் அடிப்படை காப்பீட்டில் -200%
இந்த பிரகதி பாலிசியில் செயல் திறன் இழப்புக்கும் ரைடர் பாலிசி வசதியும் உண்டு.
இந்த பிரகதி பாலிசியில் பிரீமியம் செலுத்தும் போது ஆண்டு தொகையாக செலுத்தினால், 2% தள்ளுபடியும், அரையாண்டுக்கு ஒரு முறை செலுத்தினால் 1% பிரீமியமும் தள்ளுபடியும் கிடைக்கும்.
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |