வெறும் ரூ.150-யில் குழந்தைகளின் படிப்புக்காக இப்படியொரு சேமிப்பை நீங்கள் ஆரம்பிக்கலாம்!

LIC Jeevan Tarun Policy Details in Tamil

எல்ஐசி ஜீவன் தருண் திட்டம் பற்றிய விவரங்கள் | LIC Jeevan Tarun Policy Details in Tamil

LIC Jeevan Tarun Policy Details in Tamil –  இன்றைய காலகட்டத்தில் நம் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு நாம் சேர்க்கும் சேமிப்பு என்பது எவ்வளவு முக்கியமான ஒன்று என்று அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. அப்படி குழந்தைகளின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு, உங்கள் குழந்தைகளுக்காக எந்த மாதரியான திட்டங்களில் முதலீடு செய்யலாம். எதில் எவ்வளவு ரிஸ்க்? என்ன லாபம்? வரி வரம்பு என அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டியது பெட்ரோட்களின் மிக முக்கிய கடமையாகும். அந்த வகையில் இந்த பதிவில் உங்களுக்கு உதவும் வகையில் வெறும் ரூ.150-யில் குழந்தைகளின் படிப்புக்காக ஒரு அருமையான சேமிப்பு திட்டத்தை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம் சரி வாங்க அது என்ன திட்டம் என்பதை பற்றி முழுமையாக படிக்கலாம்.

என்ன சேமிப்பு திட்டம் அது? எல்ஐசி ஜீவன் தருண் திட்டம்:

காப்பீடு நிறுவனமான LIC-யில் பல வகையான சேமிப்பு, முதலீடு, காப்பீடு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அதில் ஒன்று தான் ஜீவன் தருண் பாலிசி.  இந்த திட்டத்தில் குழந்தைகள் பிறந்த 90 நாள் முதல் 12 வயதுக்குள் முதலீடு செய்ய வேண்டும். உங்கள் பிள்ளைகளின் வயது 20 ஆகும் வரை முதலீடு செய்யலாம். பிள்ளைகளின் வயது 25 ஆகும் போது பாலிசி முதீர்வடையும். ஜீவன் தருண் திட்டத்தில் அதிகபட்ச வரம்பு என்று ஏதுமில்லை.

இத்திட்டத்தின் முதிர்வு காலம்:

குறைந்தபட்ச வயது 90 நாட்கள், மற்றும் நுழைவதற்கான அதிகபட்ச வயது 12 ஆண்டுகள் ஆகும். திட்டத்தின் அதிகபட்ச முதிர்வு 25 ஆண்டுகள் ஆகும். பாலிசி கால அளவு 25 ஆண்டுகள், பிரீமியம் செலுத்தும் காலம் (PPT) 20 ஆண்டுகள். உங்கள் குழந்தைகளின் வயது 12 ஆகும் போது நீங்கள் முதலீட்டை செய்ய தொடங்கினால் 13 வருடங்களுக்கு பிறகு பாலிசி முதிர்ச்சியடையும்.

எவ்வளவு மூதாட்டி செய்ய வேண்டும்?

இந்த பாலிசி திட்டத்தில் தினமும் 150 ரூபாய் முதலீடு செய்தால் ஒரு வருடத்திற்கு 55,000 ரூபாய் பிரீமியாமாக செலுத்துவீர்கள். இப்படி தினமும் ரூ.150 என வருடத்திற்கு ரூ.55,000 முதலீடு செய்து வந்தால் பிள்ளைகளுக்கு 25 வயது ஆகும் போது பாலிசி முதீர்வடையும்.

இத்திட்டத்தின் சிறப்பு அம்சம்:

பாலிசி முதிர்வடையும் போது போனஸ் தொகை, குறைந்தபட்ச உறுதித் தொகை, லாயல்ட்டி தொகை ஆகியவை சேர்த்து உங்களின் சேமிப்பு தொகை உயரும். இந்த பாலிசியில் முதலீடு செய்யும் போது கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 5, 10, 15 சதவீத தொகையை இடையில் பெறவும் முடியும். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு எல்.ஐ.சி முகவர்களை அணுகலாம். எல்.ஐ.சி ஆன்லைன் போர்டல் தளத்திலும் பார்வையிடலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 குழந்தைகளுக்கான Post Office சிறப்பு திட்டம் வரவேற்பு..! பிற்காலத்தில் உதவியாக இருக்கும்

இந்த திட்டத்தில் இணைய என்னென்ன ஆவணங்கள் தேவை?

எல்ஐசி ஜீவன் தருண் பாலிசியில் இணைய முகவரி சான்றிதழ், மருத்துவ சான்றிதழ், கேஓய்சி ஆவணங்கள் என அனைத்து சான்றிதழ்களும் தேவைப்படும்.

மேலும் இந்த திட்டம் பற்றிய முழுமையான விவரங்களை அறிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து படியுங்கள் 👉👉 https://www.licindia.in/

 

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil