LIC Jeevan Umang Plan Details in Tamil
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் LIC -யின் அருமையான திட்டத்தை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். LIC என்று சொல்ல கூடிய ஆயுள் காப்பீடு நிறுவனமானது ஜீவன் உமங் என்ற காப்பீடு திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்கள் பெரும்பாலும் எதிர்காலத்திற்கு நீண்ட கால அடிப்படையில் பலன் தருகின்றது.
இந்த ஜீவன் உமங் திட்டம் நீண்ட கால திட்டம் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த திட்டத்தில் முதலீடு செய்வதால் ஒரு பெரிய தொகையினை முதிர்வு காலத்தில் பெற முடியும். மேலும், இந்த ஜீவன் உமங் திட்டத்தின் சிறப்பம்சங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க..!
LIC தன் வர்ஷா புதிய பாலிசி திட்டத்தின் நன்மைகள் என்ன..? |
LIC -யின் புதிய ஜீவன் உமங் திட்டத்தின் நன்மைகள்:
சிறந்த திட்டம்:
இந்த திட்டத்தில் முதலீடு செய்வதால் மாதம் மாதம் ஒரு சிறந்த தொகை வருமானமாக கிடைக்கும். மேலும், இதில் நிரந்தரமான வருமானம் கிடைக்கும்.
அதுமட்டுமில்லாமல், இது ஒரு பாதுகாப்பான திட்டமாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதால் பிற்காலத்தில் நல்ல லாபத்தை பெறமுடியும்.
அதுபோல இந்த ஜீவன் உமங் திட்டம் மக்களுக்கு பயனுள்ள திட்டமாக பார்க்கப்படுகிறது.
நல்ல பலன் கிடைக்கும்:
இந்த ஜீவன் உமங் திட்டத்தில் முதலீடு செய்திருந்தால் பயனாளர்கள் வாழும் போதே நல்ல பலனை அடைய முடியும்.
இதில் முதலீடு செய்த பாலிசிதாரர்கள் பாலிசி காலம் முடிவதற்குள் எதிர்பாராத விதமாக இறந்து விட்டால் அவர்களின் குடும்பத்திற்கு இந்த தொகையானது கிடைக்கும்.
அதாவது, முதலீடு செய்தவரின் வாரிசு அல்லது நாமினிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் ஒரு நல்ல பலன் கிடைக்கும்.
இந்த திட்டத்திற்கு வயது வரம்பு என்ன..?
இந்த ஜீவன் உமங் திட்டத்தில் பொதுவாக 55 வயது வரை உள்ள நபர்கள் இணைந்து முதலீடு செய்யலாம்.
அதுமட்டுமில்லாமல், இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் உங்களுக்கு 100 வயது ஆன பிறகும் இதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும்.
மேலும், பிரீமிய காலத்திற்கு பிறகும் ஆண்டுதோறும் உங்களின் மொத்த முதலீட்டு மதிப்பில் இருந்து 8% பலன் உங்களுக்கு கிடைக்கும். அதாவது 36,000 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும்.
இந்த திட்டத்தில் 15 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை பிரீமியம் செலுத்தும் வசதி உள்ளது.
மேலும் இது போன்ற சேமிப்பு திட்டங்கள் மற்றும் காப்பீட்டு திட்டங்கள் பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து பாருங்கள் 👉👉👉 | Schemes |