மாதம் இவ்வளவு தானா..? 10 லட்சம் வரை லாபம் கிடைக்குமா..? அருமையான திட்டமா இருக்கே..!

Lic Jeevan Umang Policy in Tamil

Lic Jeevan Umang Policy in Tamil

பொதுவாக அனைவருக்குமே சேமிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. மேலும்..! பொதுவாக பெண் குழந்தையாக இருந்தாலும் சரி ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி அவர்களின் அடுத்த கட்ட வாழ்க்கைக்கு பொருளாதார ரீதியாக உதவிடும் வகையில் நாம் செய்யும் திட்டம் தான் சேமிப்பு.

இது இப்போது இருக்கும் காலங்களில் உதவவில்லை என்றாலும் வருக்காலத்தில் அவர்களுக்கு பெரிதாக உதவும். இன்று நாம் தெரிந்துகொள்ள வேண்டிய திட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முதலீடு செய்யலாம். சரி வாங்க அது என்ன திட்டம் என்பதை பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம்..!

Lic Jeevan Umang Policy in Tamil:

இது ஒரு ஆயுள் காப்பிட்டு திட்டமாகும். இந்த திட்டத்தில் நீங்கள் மாத தவணையாகவும், வருட தவணையாகவும், ஒன்றரை வருட தவணையாகவும் பணத்தை செலுத்தலாம். இந்த திட்டத்தில் முடிவின் போது வயது 70 ஆக இருந்தாலும். அவர் இந்த திட்டத்தை 100 வயது வரை தொடர முடியும்.

செலுத்தும் முறை  தொகை 
மாதம்  Rs.5,000/-
 1 வருடம்  Rs.15,000/-
1 /1/2 வருடம்  Rs.25,000/-
ஆண்டுதோறும்  Rs.50,000/-

 

இதையும் படியுங்கள்⇒ 1 லட்சம் முதலீட்டிற்கு 2 லட்சம் வருமானம் தரும் அருமையான சேமிப்பு திட்டம்..!

பலன்கள்:

மொத்த முதலீட்டுக்கு பிறகு ஆண்டு தோறும் 8 சதவீதம் பலன் கிடைக்கிறது. உங்களது வயதுக்கு ஏற்ப பிரீமியம் தொகை மாறுபடும். மேலும் குறிப்பிட்ட காலத்திற்குள் முதலீடு தொகை முடிந்துவிட்டால். 31 ஆண்டில் இருந்து ஆண்டு தோறும் வருமானம் கிடைக்கும். அப்படி ஆண்டுதோறும் வருமானம் பெற விரும்பாதவர்கள் பிரீமிய காலம் முடிந்த பிறகு பெரிய தொகையாக பெற முடியும்.

மேலும் பாலிசியில் செலுத்தப்படும் பிரீமிய தொகைக்கு வரி சலுகைகளும் கிடைக்கும். இதில் குறைந்தபட்ச காப்பீட்டு தொகை 1 லட்சம் ஆகும். இதற்கு அதிகபட்ச தொகை என்று எதுவும் நிர்ணயிக்கவில்லை. ஆகவே காப்பீட்டாளருக்கு பாதுகாப்பும் கிடைக்கும், வருமானமும் கிடைக்கும்.

இந்த திட்டத்தில் 100 வயது தொகையாக இருக்கும். இந்தத்திட்டத்தின் இடையில் இறப்பு பலன், உயிர் வாழும் பலன்கள், முதிர்வு பலன்கள், கடன் பெரும் வசதிகளும் உள்ளது .

லாபம்:

இந்த திட்டத்தில் 20 ஆண்டுகளாக பாலிசியில் 10 லட்சம் ரூபாய் முதிர்வு தொகையாக கிடைக்க வேண்டுமெனில் வருடத்திற்கு 50,000 ரூபாய் பிரிமியம் செலுத்த வேண்டியிருக்கும். முதிர்வு காலம் முடிவுக்கு பிறகு 10 லட்சம் ரூபாய் முதிர்வு தொகையாக பெற முடியும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 மாதம் Rs. 3,348/- செலுத்தினால் போதும் LIC-யில் Rs. 13,75,000 பெறுவதற்கான அருமையான பாலிசி..!

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil