Rs.868 செலுத்தினால் Rs.2,00,000/- தரும் அருமையான திட்டம்..!

Advertisement

 Rs.868 செலுத்தினால் Rs.2,00,000/- தரும் அருமையான திட்டம்..! LIC New Jeevan Azad Policy Details in Tamil..!

இந்தியாவின் முன்னணி பெரிய காப்பீடு நிறுவனமான LIC ‘ஜீவன் ஆசாத்’ என்கின்ற புதிய காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தத் திட்டம் பங்குச் சந்தையோடு இணைக்கப்படாத சேமிப்பு மற்றும் ஆயுள் காப்பீடு திட்டமாகும். LIC-யின் ‘ஜீவன் ஆசாத்’ திட்டத்தின் குறைந்தபட்ச அடிப்படை உத்தரவாத தொகை ரூ.2 லட்சமாகவும், அதிகபட்ச உத்தரவாத தொகை ரூ.5 லட்சமாகவும் உள்ளது. பாலசி காலங்கள் 15 முதல் 20 ஆண்டுகள் வரையில் உள்ளன. மொத்த பாலிசி காலத்தில் 8 ஆண்டுகள் போக மீதமுள்ள ஆண்டுகளுக்கு மட்டும் பிரீமியம் செலுத்தினால் போதும். மேலும் இந்த திட்டம் குறித்த தகவல்களை இப்பொழுது படித்தறியலாம் வாங்க.

LIC New Jeevan Azad Policy Details in Tamil:LIC New Jeevan Azad Policy

இந்த பாலிசியில் 3 லட்சம் வரை நீங்கள் Sum Assured-ஐ எந்த ஒரு மெடிக்கல் சர்டிபிகேட்டும் இல்லாமல் வாங்கலாம். அதுவே 3 லட்சத்திற்கு மேல் காப்பீட்டு தொகை வேண்டும் என்றால் அதற்கான மெடிக்கல் சர்டிபிகேட் சமர்ப்பிக்க வேண்டும்.

தகுதி:

பிறந்து 90 நாட்கள் ஆன குழந்தைகள் முதல் 50 வயது பெரியவர்கள் வரை இந்தத் திட்டத்தில் சேர முடியும்.

வயது:

பாலிசியின் குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 70 ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
50% மானியத்தில் டிராக்டர் வழங்கும் மத்திய அரசின் திட்டம்!

பாலிசியின் கால அளவு:

இத்திட்டத்தின் பாலசி காலங்கள் 15 முதல் 20 ஆண்டுகள் வரையில் உள்ளன. மொத்த பாலிசி காலத்தில் 8 ஆண்டுகள் போக மீதமுள்ள ஆண்டுகளுக்கு மட்டும் பிரீமியம் செலுத்தினால் போதுமானது.

எவ்வளவு காப்பீட்டு தொகை வாங்கலாம்:

LIC-யின் ‘ஜீவன் ஆசாத்’ திட்டத்தின் குறைந்தபட்ச அடிப்படை உத்தரவாத தொகை ரூ.2 லட்சமாகவும், அதிகபட்ச உத்தரவாத தொகை ரூ.5 லட்சமாகவும் உள்ளது. இந்த பாலிசியில் கடன் வாங்கும் ஆப்சனும் உள்ளது.

அதாவது இந்த பாலிசியில் இணைந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு இந்த LIC பாலிசி மூலம் நீங்கள் வங்கிகளில் கடன் பெற முடியும்.

மேலும் இந்த பாலிசியில் இணைந்த பிறகு பாலிசியின் இடைப்பட்ட காலங்களில் சரண்டர் செய்து உங்களுடைய தொகையை திரும்ப பெற விரும்புகிறீர்கள் என்றால் அதற்கும் ஆப்சன் வாங்கப்படுகிறது. இரும்பினும் இந்த பாலிசியில் இணைந்த 2 வருடத்திற்கு பிறகு தான் அதற்கான ஆப்ஷன்கள் வழங்கபடுகிறது.

பிரீமியம் செலுத்தும் வசதி:

இந்த LIC பாலிசியில் தங்களது பிரீமியத்தை ஆண்டுக்கு ஒருமுறையோ, அல்லது அரையாண்டு, காலாண்டு அடிப்படையிலோ, மாதந்தோறுமோ என அவரவர் வசதிக்கேற்ப செலுத்தலாம்.

2 லட்சத்திற்கு பாலிசி எடுத்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்:

ஒரு நபர் தனது 20 வயதில் 2 லட்சம் Sum Assured-க்கான இந்த பாலிசியை, 20 வருட கால அளவில் வாங்கினால். இவர்களுக்கான மாத பிரீமியம் 868 ரூபாய் ஆகும். அவர்கள் முதல் 12 வருடம் மட்டும் தங்களது பிரீமியம் தொகையை செலுத்தினால் போதும். மீதமுள்ள 8 வருடம் அவர்கள் பிரீமியம் தொகையை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. பாலிசி பிரீமியம் வருமானம் 12 வருடங்கள் அவர்கள் மொத்தம் 1,20,112/- ரூபாய் பிரீமியம் தொகையை செலுத்தி இருப்பார்கள். பாலிசியின் கால அளவான 20 வருடம் முடிந்த பிறகு அவர்ளுக்கு கிடைக்கக்கூடிய மெச்சூரிட்டி தொகையான Sum Assured 2 லட்சம் ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ICICI பேங்கில் 1 லட்சம் செலுத்தினால் 1,45,000 ரூபாய் பெறலாம் எப்படி தெரியுமா..?

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement