LIC New Jeevan Shanti Plan in Tamil
லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (LIC) என்பது மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய பன்னாட்டு பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம், பல வகையான பாலிசிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் LIC -யின் புதிய புதிய ஜீவன் சாந்தி திட்டம் பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். இத்திட்டம் மேம்படுத்தப்பட்ட வருடாந்திர விகிதங்களை சிறப்பான முறையில் மேம்படுத்தி இருக்கிறது. மேம்படுத்தப்பட்ட விகிதங்களை ஜனவரி 5 -ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கும் பாலிசிதாரர்கள் பெற்று பயனடையலாம். எனவே , இத்திட்டத்தினை பற்றிய மேலும் விவரங்களை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
LIC Jeevan Shanti Plan Details in Tamil:
LIC -யின் புதிய ஜீவன் சாந்தி திட்டத்தின்படி, பாலிசிதாரர்கள் வாங்கும் விலையில் ரூ.1000 ரூபாய்க்கு 3 ரூபாய் முதல் 9.75 ரூபாய் வரை லாபம் பெறுவார்கள். அதுமட்டுமில்லாமல், இந்த லாபம் அவர்கள் பெரும் போனஸ் கொள்முதல் மற்றும் தேர்தெடுக்கப்பட்ட ஒத்திவைப்பு காலத்தை பொறுத்து அமைப்பும்.
இந்த திட்டத்தில் பாலிசிதாரர்களுக்கு இரண்டு வகையான ஆப்ஷன்கள் வழங்கபடுகிறது. அதாவது, ஒற்றை வாழ்க்கை மற்றும் கூட்டு வாழ்க்கை ஆகும்.
எனவே, இந்த புதிய ஜீவன் சாந்தி திட்டத்தில் தற்போது வேளையில் உள்ளவர்கள், சுயதொழில் செய்பவர்கள் அல்லது எதிர்காலத்தில் வருமானத்தை பெற விரும்புபவர்கள் இத்திட்டத்தின் பாலிசியை எடுத்து கொள்ளலாம்.
மேலும், LIC -யின் புதிய சாந்தி திட்டத்தில், பாலிசிதாரர்கள் குறைந்தபட்சம் 1.5 லட்சம் ரூபாய்க்கு பாலிசியை வாங்கலாம். இத்திட்டத்திற்கு அதிகபட்ச பாலிசி வரம்பு கிடையாது. பாலிசியை வாங்கிய பிறகு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 12 ஆயிரம் ரூபாய் பெறலாம்.
444 நாட்களில் 2,17,114 ரூபாய் தரக்கூடிய அருமையான பிக்சட் டெபாசிட் திட்டம்..!
வயது தகுதி:
LIC -யின் புதிய சாந்தி திட்டத்தில் சேருவதற்கு பாலிசிதாரர்கள் குறைந்தபட்சம் 30 வயது உடையவர்களாகவும் அதிகபட்சமாக 79 வயது உடையவர்களாகவும் இருக்க வேண்டும்.
டெபாசிட் செய்யும் காலம்:
- வருடம் வருடம்
- அரையாண்டு
- காலாண்டு
- மாதம் மாதம்
நன்மைகள்:
இத்திட்டத்தின் மூலம் புதிய பாலிசிதாரர்கள், வாழ்நாள் முழுவதும் உத்திரவாதமான மாத வருமானத்தை பெறுவார்கள்.
முதன்மை பாலிசிதாரர் இறந்துவிட்டால், பரிந்துரைக்கப்பட்டவர் அல்லது இரண்டாம்நிலை பாலிசிதாரர் வருமானத்தை பெறலாம்.
எல்ஐசி-யில் வருடத்திற்கு Rs. 12,000/- கிடைக்கக்கூடிய அசத்தலான திட்டம்..!
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |