LIC New Pension Plus Scheme Details in Tamil
அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்… இந்த பதிவின் மூலம் LIC யின் புதிய பென்ஷன் திட்டத்தை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். LIC நிறுவனமானது ஒரு புதிய பென்ஷன் பிளஸ் 867 திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பென்ஷன் பிளஸ் திட்டமானது பென்ஷன் இல்லாமல் பணி செய்யும் ஊழியர்களின் நிதி பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பற்றிய சில தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
இதையும் பாருங்கள் –> LIC தன் வர்ஷா புதிய பாலிசி திட்டத்தின் நன்மைகள் என்ன
பென்ஷன்:
பென்ஷன் என்பது அரசு துறையில் பணி செய்யும் ஊழியர்கள் தங்கள் பணி காலம் முடிந்த பிறகு பணியை நிறைவு செய்த ஊழியர்களுக்கு ஓவ்வொரு மாதமும் அரசாங்கம் வழங்கும் தொகை தான் பென்ஷன்.
இது ஒவ்வொரு ஊழியருக்கு முக்கியமானதாக திகழ்கிறது. இந்த பென்ஷன் ஊழியர்களின் முதிர்வு காலத்திலும், அவர்களின் குடும்பத்திற்கும் அரசாங்கம் வழங்கும் உதவி தொகையாக இருக்கிறது.
LIC புதிய பென்ஷன் பிளஸ் திட்டம்:
LIC நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த திட்டமானது ஊழியர்களின் நிதி பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் பங்குச் சந்தையுடன் தொடர்பில்லாத திட்டமாக செயல்பட்டு வருகிறது.
புதிய பென்ஷன் பிளஸ் என்பது பங்கு பெறாத மற்றும் யூனிட் இணைக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்று அழைக்கப்படுகிறது.
பென்ஷன் இல்லாமல் நிதி பாதுகாப்பு இன்றி பணி செய்யும் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய பென்ஷன் பிளஸ் என்ற திட்டத்தை LIC நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
பென்ஷன் பிளஸ் திட்டத்தில் ஒற்றை பிரீமியம் பாலிசி அல்லது வழக்கமான பிரீமியம் பாலிசி என்று 2 வகைகள் உள்ளன. அதாவது ஒரே தவணையில் செலுத்தும் முறை அல்லது மாத தவணையில் செலுத்தும் முறை என்று சொல்லலாம்.
LIC பென்ஷன் பிளஸ் திட்டத்தின் நன்மைகள்:
இந்த பென்ஷன் பிளஸ் திட்டத்தின் மூலம் தொடர்ந்து நம் பணத்தை சேமித்து ஓய்வு காலத்தில் நமக்கு தேவையான பணத்தை உருவாக்கி கொள்ள முடியும்.
இத்திட்டம் பங்குச் சந்தையுடன் தொடர்பில்லாத திட்டமாக இருப்பதால் பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்கள் பற்றி பயப்பட தேவையில்லை. இந்த பென்ஷன் பிளஸ் திட்டத்தை பங்கு சந்தை ஏற்ற இறக்கங்கள் எந்த விதத்திலும் பாதிக்காது.
ஒற்றை பிரீமியம் பாலிசியானது குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வரம்புகளுக்கு உட்பட்டு செலுத்த வேண்டிய பிரீமியம் என்று சொல்லப்படுகிறது.
இந்த பென்ஷன் பிளஸ் திட்டத்தை முடிக்கும் போது நமக்கு கிடைக்கும் தொகையை வழக்கமான வருமானமாக மாற்றி கொள்ள முடியும். வழக்கமான வருமானத்தை பெறுவதற்கு பாலிசிதாரர் வருடாந்திர திட்டத்தை வாங்க வேண்டும்.
இந்த பென்ஷன் பிளஸ் திட்டத்தில் சேமித்த பணத்தை 5 ஆண்டுகளுக்கு பின் பாதி தொகையாக எடுத்து கொள்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பென்ஷன் திட்டத்தில் 4 வகையான நிதிகள் உள்ளன. இதில் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப முதலீடு செய்து கொள்ளலாம். எனவே இந்த திட்டத்தில் தைரியமாக முதலீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
LIC பென்ஷன் பிளஸ் திட்டத்தில் முதலீடு செய்வது எப்படி..?
இந்த பென்ஷன் பிளஸ் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு LIC நிறுவனத்திற்கு சென்றோ அல்லது LIC நிறுவனத்தில் இருக்கும் ஏஜெண்டுகளின் மூலமாகவோ முதலீடு செய்யலாம்.
மேலும், LIC நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலமாகவும் முதலீடு செய்யலாம்.
மேலும் இது போன்ற சேமிப்பு திட்டங்கள் மற்றும் காப்பீட்டு திட்டங்கள் பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து பாருங்கள் 👉👉👉 | Schemes |