எல் ஐ சி புதிய பாலிசி
பொதுவாக மனிதனுடைய அடிப்படை வாழ்க்கைக்கு எப்படி சில பொருட்கள் அவசியமாக இருக்கிறதோ அதே மாதிரி சேமிப்பு என்பதும் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. நாம் ஏதோ ஒரு திட்டத்தின் கீழ் நம்மால் முடிந்த குறிப்பிட்ட தொகையினை சேமித்து வைத்தால் மட்டுமே அது நம்முடைய எதிர்காலத்திற்கு உதவக்கூடிய ஒன்றாக இருக்கும். அதுவே நம்முடைய குழந்தைகள் பெயரில் சேமித்து வைத்தால் அது அவர்களுடைய படிப்பு மட்டும் இல்லாமல் வாழ்க்கையினை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்கும் உதவியாக இருக்கும். ஆகையால் குழந்தைகளுக்கு என்றே Lic-யில் 1900 ரூபாய் செலுத்தினால் 12,15,000 ரூபாய் கிடைக்கக்கூடிய ஒரு அருமையான திட்டம் உள்ளது. எனவே அந்த திட்டத்தின் கீழ் உங்களுடைய குழந்தையையும் எப்படி பயன்பெறச்செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள்⇒ மாதம் 9,250 ருபாய் வரை பென்ஷன் தரும் LIC -யின் அருமையான திட்டம்..
Lic Policy for Child Jeevan Tarun in Tamil:
குழந்தைகளின் எதிர்காலத்திற்கு என்றே கொண்டு வரப்பட்டுள்ளது பாலிசி தான் lic Policy for Child Jeevan Tarun ஆகும்.
மேலும் இந்த பாலிசிக்கான குறைந்தபட்ச தொகை 75,000 ரூபாய் ஆகும்.
வயது தகுதி:
இந்த பாலிசிக்கான குறைந்தபட்ச வயது குழந்தை பிறந்த 90 நாட்கள் முதல் அதிகபட்ச வயது 12 வயது ஆகும்.
பாலிசிக்கான வட்டி விகிதம்:
Lic Jeevan Tarun Policy-யில் வட்டி விகிதம் என்பது நான்கு வகையான முறையில் அளிக்கப்படுகிறது.
பாலிசிக்கான வட்டி விகிதம் | ||||
பாலிசிதாரரின் வயது | வகை- 1 | வகை- 2 | வகை- 3 | வகை- 4 |
20 To 25 வயது முதல் | எதுவும் கிடையாது. | பாலிசி தொகையில் இருந்து 5% வட்டி தொகையாக வருடம் 1 முறை வழங்கப்படுகிறது. | பாலிசி தொகையில் இருந்து 10% வட்டி தொகையாக வருடம் 1 முறை வழங்கப்படுகிறது. | பாலிசி தொகையில் இருந்து 15% வட்டி தொகையாக வருடம் 1 முறை வழங்கப்படுகிறது. |
ஆகவே நீங்கள் தேர்ந்து எடுக்கும் முறையினை பொறுத்து தான் உங்களுக்கு வட்டி கிடைக்கும்.
பாலிசிக்கான முதிர்வு காலம்:
இத்தகைய பாலிசிக்கான முதிர்வு காலம் என்பது 25 வருடம் ஆகும். ஆனால் நீங்கள் பாலிசி வாங்கும் காலத்தை முதிர்வு காலத்தில் கழித்தால் வரும் வருடமே பாலிசிக்கான தீர்மானமான முதிர்வு காலமாக கணக்கிடப்படுகிறது.
உதாரணம்: 25 முதிர்வு காலம் – 4 பாலிசியில் சேர்ந்த காலம்= 21 தீர்மானமான முதிர்வு காலம்
பாலிசியில் தொகை செலுத்த வேண்டிய வருடம்:
Lic Jeevan Tarun Policy-கான தொகையினை நீங்கள் கடைசி வரை செலுத்த வேண்டாம். நீங்கள் பெற்ற பாலிசிக்கான முதிர்வு காலத்தில் இருந்து 5 வருடத்தினை கழித்த பிறகு வரும் வருடத்தில் மட்டுமே தொகையினை செலுத்தினால் போதும்.
உதாரணம்: 25 பாலிசி முதிர்வு காலம் – 5 = 21 வருடம்
இத்தகைய பாலிசியில் 5 லட்சம் முதலீடு செலுத்தினால் உங்களுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்:
1 வயதில் உள்ள ஒரு குழந்தை இந்த திட்டத்தின் கீழ் 5 லட்சம் முதலீடு செய்ய தொடங்கினால் அந்த குழந்தைக்கான பாலிசி காலம் 19 ஆகும்.
Lic Policy for Child Jeevan Tarun in Tamil | ||||
பாலிசிதாரரின் வயது | வட்டி வகை 1 | வட்டி வகை 2 | வட்டி வகை 3 | வட்டி வகை 4 |
மாதந்தோறும் செலுத்த வேண்டிய | 1916 ரூபாய் | 19,649 ரூபாய் | 2012 ரூபாய் | 2060 ரூபாய் |
வயது 20 முதல் 25 வரை | எதுவும் கிடையாது | 25,000 ரூபாய் | 50,000 ரூபாய் | 75,000 ரூபாய் |
மொத்த தொகை | 12,15,000 ரூபாய் ( வட்டியுடன் கூடிய தொகை) | 10,90,000 ரூபாய் | 9,65,000 ரூபாய் | 8,40,000 ரூபாய் |
இதையும் படியுங்கள்⇒ Lic-யில் 3 லட்சம் செலுத்தினால் 9 லட்சம் கிடைக்ககூடிடய அருமையான பாலிசி..! மிஸ் பண்ணிடாதீங்க..
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |