LIC -யில் ஒரு முறை டெபாசிட் செய்தால் ஆயுள் முழுவதும் மாதந்தோறும் 1000 ரூபாய் வருமானம் கிடைக்கும் திட்டம்..

Advertisement

Guaranteed Pension Lifetime LIC Scheme in Tamil

மனிதர்களாக பிறந்த அனைவருமே சம்பாதிக்கின்றனர். அதில் அரசு வேலை பார்ப்பவர்கள் ஓய்வு பெற்றவுடன் ஓய்வூதியம் கிடைக்கும். அதுவே தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் பணத்தை சேமித்து வைத்தால் மட்டுமே கடைசி காலத்தில் உட்கார்ந்து சாப்பிடலாம். பணத்தை சேமித்து வைத்தாலும் திடீரென்று பணத்தேவை ஏற்பட்டால் சேமித்து வைத்த பணத்தை எடுத்து செலவு செய்திடுவோம். அதனால் உங்களுக்கும் உதவும் வகையில் LIC-யில் வாழ்நாள் ஓய்வூதியம் திட்டத்தை பெறலாம். இந்த திட்டத்தை பற்றிய தகவலை தெரிந்து கொள்வோம் வாங்க..

LIC Saral Pension Scheme:

LIC-யின் சாரல் பென்சன் திட்டம் என்பது ஒற்றை பிரிமியம் திட்டம் என்று கூறலாம். பாலிசி எடுத்தவுடனேயே பாலிசிதாரரின் ஓய்வூதியம் தொடங்கும். ஓய்வூதியம் பெறுபவர் அவர்களின் விருப்பத்தின் பேரில் ஒவ்வொரு மாதமும், காலாண்டு, அரையாண்டு அல்லது வருடத்திற்கு ஒரு முறை ஓய்வூதியம் பெறலாம்.

பாலிசிதாரர் இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ.1,000 மாத ஓய்வூதியம் அல்லது ரூ.2,000 வருடாந்திர ஓய்வூதியத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.

மாதம் மாதம் 9,250/- ரூபாய் வருமானம் தரும் அருமையான திட்டம் கடைசி தேதி மார்ச் – 31..!

தகுதி:

எல்ஐசி சாரல் ஓய்வூதியத் திட்டத்தில்  40 முதல் 80 வயது வரை உள்ள அனைவரும் இந்த திட்டத்தில் பயன் அடையலாம்.

முதலீடு:

இந்த திட்டத்தில் நீங்கள் வருடத்திற்கு 1 லட்சம் ஓய்வூதியம் பெற விரும்பினால் மொத்த முதலீடாக 20 லட்சம் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.

நீங்கள் 10 லட்சம் முதலீடு செய்தால் வருடத்திற்கு 50,250 ரூபாய் பெறும் ஓய்வூதியத்தை பெறுவார்கள்.

கடன் வசதி:

இந்த பாலிசியை எடுத்த 6 மாதத்திற்கு பிறகு கடனை பெற்று கொள்ளலாம்.

மரண பலன்:

இந்த திட்டத்தில் பயன் அடைந்தவர் இறந்து விட்டால் பயனாளரின் அடிப்படை பிரீமியம் நாமினிக்கு வழங்கப்படும்.

தபால் துறையில் 90 நாட்களுக்கு ஒரு முறை 60,000 ரூபாய் வருமானம் தரும் அருமையான திட்டம்.. 

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil

 

Advertisement