Lic Saral Policy Details 2023
பொதுவாக மூத்த குடிமக்களுக்கு என்று தபால் துறை, வங்கி மற்றும் நிதிநிறுவனங்கள் என இவற்றை எல்லாம் நிறைய திட்டங்களை அறிமுகம் செய்து உள்ளது. அந்த வகையில் எல்ஐசி நிறுவனமும் மூத்த குடிமக்களின் நலன் கருதி பாலிசியினை அறிமுகம் செய்து இருக்கிறது. ஆனால் இத்தகைய பாலிசி பற்றி பெரும்பாலும் யாருக்கும் தெரிவது இல்லை. அதை தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் கூட யாருக்கும் அதற்கான சரியான விளக்கங்கள் கொடுக்க முன்வருவது இல்லை. அதனால் இன்று எல்ஐசியில் மூத்த குடிமக்கள் அதிலும் வேலை புரியும் மக்களுக்கும் என்று அறிமுகம் செய்துள்ள சாரல் பென்ஷன் திட்டத்தினை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
சாரல் பென்ஷன் யோஜனா:
Lic நிறுவனம் அறிமுகம் செய்து உள்ள இந்த சாரல் பென்ஷன் திட்டம் ஆனது Single பிரீமியம் செலுத்தும் திட்டம் ஆகும். இத்தகைய திட்டத்தில் பென்ஷன் சேர உள்ள அனைத்து நபர்களும் சில நிபந்தனைகளுடன் சேரலாம்.
வயது தகுதி:
இந்த சாரல் பென்ஷன் திட்டத்தில் சேருவதற்கான குறைந்தபட்ச வயது 40 மற்றும் அதிகபட்ச வயது 80 ஆகும். இத்தகைய வயது தகுதியினை பெறாதவர்கள் இந்த பாலிசியில் சேர முடியாது.
பாலிசி தொகை:
எல்ஐசியில் உள்ள இந்த பாலிசிக்கான அதிகப்பட்ச தொகை என்பது எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கும். உங்களுடைய ஏற்ற முறை இதில் உள்ளது.
மேலும் நீங்கள் செலுத்த வேண்டிய பாலிசி தொகையினை காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்திரம் என இதில் எதை வேண்டுமானாலும் பாலிசி செலுத்துவதில் தேர்வு செய்து கொள்ளலாம்.
கடன் பெறும் வசதி:
நீங்கள் இந்த பாலிசியில் சேர்ந்த 6 மாதங்கள் பிறகு கடன் பெற்றுகொள்ளும் வசதி உள்ளது. அதேபோல் 6 மாதங்கள் முடிந்த பிறகு இந்த பாலிசியினை முடித்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கான வாய்ப்பும் இருக்கிறது.
New Scheme👇👇 1 லட்சம் செலுத்தினால் 2 லட்சம் பெறலாம் இரண்டு மடங்கு லாபம் தரும் அதிசய திட்டம்
Lic Saral Pension Yojana in Tamil:
Lic-யில் அறிமுகம் செய்து உள்ள இந்த திட்டத்தில் எவ்வளவு தொகை செலுத்தினால் குறிப்பிட்ட காலம் முடிந்த எவ்வளவு ரூபாய் கிடைக்கும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Lic Saral Pension Yojana | ||
வயது | Single பிரீமியம் செலுத்த வேண்டிய தொகை | பாலிசியில் கிடைக்கும் வருடாந்திர தொகை |
40 வயது | 2,50,000 ரூபாய் | 12,000 ரூபாய் |
10,00,000 ரூபாய் | 50,250 ரூபாய் | |
20,00,000 ரூபாய் | 1,00,000 ரூபாய் |
New Scheme👇👇 ஆண் குழந்தைகளுக்கு அரசின் அருமையான மூன்று சேமிப்பு திட்டங்கள்..
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |