எல்ஐசி-யில் மாதம் 4,000 ரூபாய் முதலீட்டில் உள்ள அருமையான பாலிசி..!

lic siip policy details 2023 in tamil

எல்ஐசி பாலிசி

நமக்கு ஆரம்பகாலத்தில் இருந்து தெரிந்த ஒரு நிதி நிறுவனம் என்றால் அது எல்ஐசி தான். இப்போது எத்தனையோ நிதிநிறுவனங்கள் வந்தாலும் கூட எல்ஐசி இன்றும் சிறந்த விளங்கக்கூடிய ஒன்றாக உள்ளது. அந்த வகையில் Lic-யில் நிறைய பாலிசிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பாலிசியின் மூலம் மக்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் பயன் அடைந்து தான் வருகின்றனர். அதிலும் சில நபர்களுக்கு Lic-யில் உள்ள பாலிசி பற்றிய சரியான விளக்கங்கள் எதுவும் தெரியாமல் உள்ளது என்றும் கூறலாம். ஆகையால் இன்று Lic-யில் மாதம் 4,000 ரூபாய் செலுத்தக்கூடிய ஒரு அருமையான பாலிசியின் முழு தகவலை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

இதையும் படியுங்கள்⇒ Lic-யில் மாதம் 3,785 ரூபாய் செலுத்தினால் போதும் 5 லட்சம் வரை பெறக்கூடிய அருமையான திட்டம்.. 

Lic SIIP Policy Details 2023:

வயது தகுதி:

ஒரு குழந்தை பிறந்த 90 நாட்கள் முதல் அதிகபட்ச வயதாக 65 வயது உள்ளவர்கள் மட்டும் தான் இந்த பாலிசியில் சேர முடியும்.

மேலும் இந்த பாலசி முதிர்வு அடையும் போதும் குறைந்த வயது 18 அல்லது அதிகபட்ச வயது 85 ஆக இருக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்று.

முதலீடு தொகை:

இத்தகைய பாலிசியில் உங்களுக்கு விருப்பட்ட தொகையினை பாலிசி தொகையாக தேர்வு செய்து கொள்ள வேண்டும். ஆகையால் இந்த பாலிசியில் சேரும் போதும் உங்களுக்கான பாலிசி தொகையினை நிர்ணயித்து கொள்ள வேண்டும்.

பாலிசிக்கான பிரீமியம்:

இந்த பாலிசியில் உங்களுக்கான பிரிமீயம் தொகையினை நீங்கள் 4 முறைகளில் செலுத்தலாம்.

  • மாதந்தோறும் 
  • 3 மாதத்திற்கு ஒரு முறை 
  • 6 மாதத்திற்கு ஒரு முறை 
  • வருடத்திற்கு ஒரு முறை 

மேலே சொல்லப்பட்டுள்ள முறைகளில் உங்களுக்கான பாலிசி பிரீமியம் தொகையினை செலுத்தி கொள்ளலாம்.

முதிர்வு காலம்:

Lic-யில் அறிமுகம் செய்து உள்ள இந்த பாலிசிக்கான முதிர்வு காலம் என்பது 5  வருடம் ஆகும்.

Lic Plan 852 Details 2023 in Tamil:

எல்ஐசி-யில் இந்த திட்டத்தில் நீங்கள் 40,000 ரூபாய்க்கான பாலிசி தொகையினை  தேர்வு செய்து இருந்தால் நீங்கள் 4 முறைகளில் எப்படி தொகையினை செலுத்த வேண்டும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • மாதந்தோறும்- 4,000 ரூபாய் 
  • 3 மாதத்திற்கு ஒரு முறை- 12,000 ரூபாய் 
  • 6 மாதத்திற்கு ஒரு முறை- 22,000 ரூபாய் 
  • வருடத்திற்கு ஒரு முறை- 40,000 ரூபாய் 

எனவே நீங்கள் தேர்வு செய்யும் பாலிசி தொகையினை பொறுத்து உங்களுக்கான தொகை வேறுபடும்.

இதையும் படியுங்கள்⇒ LIC-யில் மாதந்தோறும் 6500 செலுத்தினால் 27 லட்சம் பெறும் திட்டம்..

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil