Lic-யில் 3 லட்சம் செலுத்தினால் 9 லட்சம் கிடைக்ககூடிடய அருமையான பாலிசி..! மிஸ் பண்ணிடாதீங்க..!

Advertisement

Lic Single Premium Endowment Plan 917 

நீங்கள் நிறைய வகையான முறையில் பணத்தை சேமித்து இருப்பீர்கள். அதிலும் குறிப்பாக நாம் எப்போதும் போஸ்ட் ஆபீஸ் மற்றும் Lic ஆகிய நமக்கு நன்றாக தெரிந்த இடத்தில் தான் சேமிப்பு என்பதையே தொடங்குவோம். அந்த வகையில் இன்று  உங்களுக்கு பயனுள்ள மாதிரியான Lic-யில் உள்ள ஒரு அருமையான திட்டத்தை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் இந்த திட்டமானது யாருக்கெல்லாம் பயனுள்ளதாக இருக்கிறது என்றும் மற்றும் இந்த திட்டத்தில் நாம் சேருவதற்கு என்ன தகுதிகள் வேண்டும் என்றும் விரிவாகவும் தெளிவாகவும் இன்றைய பதிவின் மூலம தெரிந்துக்கொண்டு சேமிக்க தொடங்கலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ மாதம் 9,250 ருபாய் வரை பென்ஷன் தரும் LIC -யின் அருமையான திட்டம்..!

Lic Single Premium Endowment Plan 917 Details in Tamil:

நீங்கள் இந்த திட்டத்தில் சேருவதற்கு முன்பாகவே நீங்கள் எவ்வளவு தொகை செலுத்த போகிறீர்கள் என்பதை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அந்த தொகையினை மட்டும் ஒரே ஒருமுறை Single Payment ஆக செலுத்தினால் போதும்.

மேலும் இந்த பாலிசியின் குறைந்த பட்ச தொகை 50,000 ரூபாய் முதல் ஆரம்பமாகிறது. அதற்கு மேல் வேண்டும் என்றாலும் நீங்கள் பாலிசியினை பெற்று கொள்ளலாம்.

வயது தகுதி:

இந்த பாலிஸிற்கான வயது தகுதி என்பது குறைந்த பட்ச வயது ஒரு குழந்தை பிறந்த 90 நாட்கள் மற்றும் அதிகபட்ச வயது 65 வயது வரையாகும்.

இந்த திட்டத்தில் ஒரு குழந்தையின் பெயரில் நீங்கள் வாங்கினால் அந்த குழந்தைக்கு பாலிசி முடியும் போது 18 வயதும் மற்றும் 65 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு பாலிசி முடியும் போது 75 வயது பூர்த்தி ஆகியிருக்க வேண்டும்.

பாலிசி முதிர்வு காலம்:

Lic Single Premium Endowment Plan 917 பாலிசியில் காலம் குறைந்த பட்சம் 10 வருடம் முதல் அதிகபட்சமாக 25 வருடம் வரை உள்ளது. ஆகாயல் உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு இந்த பாலிசியினை பெற்று கொள்ளலாம்.

நீங்கள் திடீரென்று இந்த பாலியிஸினை இடையில் முடித்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கான வாய்ப்பும் இதில் உள்ளது. ஆனால் நீங்கள் செலுத்திய Single Payment-ல் இருந்து 90% தொகை + அப்போது உள்ள வட்டி தொகை இரண்டும் சேர்த்து குறிப்பிட்ட தொகை வழங்கப்படும்.

LIC-ல் 200 ரூபாய் செலுத்தி 28 லட்சம் வரை பெறக்கூடிய அருமையான திட்டம்..!

லோன் பெரும் முறை:

இத்தகைய திட்டத்தின் மூலம் நீங்கள் லோன் பெற வேண்டும் என்று விரும்பினால் அதற்கான வாய்ப்பும் இதில் உள்ளது. நீங்கள் செலுத்திய தொகையில் இருந்து 90% தொகையினை லோன் தொகையாக பெற்றுக்கொள்ளலாம்.

ஆயுள் காப்பீடு:

நீங்கள் இந்த பாலிசியில் சேரும் போதே உங்களுக்கான ஆயுள் காப்பீடு முறையினை தேர்வு செய்து கொள்ளலாம். இதில் 2 வகைகள் உள்ளன.

Lumsum Payment:

  • இந்த பாலிசியின் மூலம் கிடைக்கும் தொகையினை மொத்தமாக ஒரே முறையில் உங்களுக்கு அளித்து விடுவார்கள்.

In Instalment:

  • இதில் பாலிசியின் மூலம் கிடைக்கும் தொகையினை 3 மாதத்திற்கு ஒரு முறை அல்லது 6 மாதத்திற்கு ஒரு முறை அல்லது வருடத்திற்க்கு ஒருமுறை என பிரித்து வழங்கப்படும்.

Lic Single Premium Endowment Plan 917 Details in Tamil:

நீங்கள் 20 வருட கால அளவில் 5 லட்சம் ரூபாயினை வாங்குவதற்கு இந்த பாலிசியினை தேர்வு செய்தால் கிடைக்கும் மொத்த தொகை எவ்வளவு என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Lic Single Premium Endowment Plan 917
Single Payment 2,70,315 ரூபாய்
VSR Bonus 4,30,000 ரூபாய்
F.A Bonus 35,000 ரூபாய்
Total Amount 9,65,000 ரூபாய்

 

இதையும் படித்துப்பாருங்கள்⇒அசத்தலான ஆயுள் காப்பீடு..! முதிர்வு காலத்தில் லம்ப் அமௌன்ட் கிடைக்கும்..!

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement