LIC Single Premium Policy in Tamil
அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் வணக்கம் இன்று அனைவருக்கும் மனதில் ஒரு பயம் இருக்கிறது அதில் ஒன்று வாழ்க்கையை எப்படி நல்ல இடத்திற்கு எடுத்து செல்வது. அடுத்து பிள்ளைகளை நல்ல விதமாக வளர்க்க வேண்டும் என்று யோசிப்பார்கள். அவர்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதற்கு முக்கிய தேவை பணம். பணமா ? என்று யோசிப்பீர்கள் ஆம் பணம் இருந்தால் நல்ல கல்லூரியில் சேர்க்கலாம், அடுத்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பண தேவை அதிகம் இருக்கிறது. அதனால் பணத்தை சேமிக்க சிலர் முதலீடுகளின் போடுவீர்கள் அதில் போட்டு ரிஸ்க் எடுக்கவேண்டாம் என்று பாலிசி போடுவார்கள் அதாவது காப்பீடு செய்வார்கள்.
காப்பீடு என்றால் நியாபகத்துக்கு வருவது LIC. இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக திகழ்கிறது. ஒவ்வொரு மனிதனின் எதிர்கால பாதுகாப்பிற்காக அனைத்து அதிகளவு மக்கள் தேர்வு செய்வது LIC காப்பீட்டு நிறுவனத்தை தான்.
உங்கள் எதிர்காலத்திற்கான சிறந்த எல்ஐசி பாலிசி திட்டங்கள்..! |
Bima Bachat Plan in Tamil:
பீமா பட்சத் திட்டம் என்பது ஒரு மனிதனுக்கு இரண்டு லாபம் கிடைக்கும் என்று சொல்லாம் இந்த திட்டத்தை. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று சொல்லாம் புரியவில்லையா வாங்க தெளிவாக படித்து தெரிந்துகொள்வோம்.
ஓர் மனிதன் இந்த காப்பீட்டில் பெரிய அளவில் ஒரு தொகையை முதலீடாக செய்யலாம். பாலிசி கால வரையறையில் உங்களின் வாழ்க்கை குறித்த செலவுக்காக குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை இந்த பணத்தை செலுத்துவதுடன் உயிருக்கான காப்பீடு திட்டம் செலுத்தப்படுகிறது.
உத்தரவாத தொகை:
- குறைந்த பட்சமாக 9 ஆண்டுகள் தொடங்கி பன்னிரண்டு ஆண்டுகள் முதல் பதினைந்து ஆண்டுகளுக்குள் உத்திரவாத தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
- ஒன்பது ஆண்டுகள் தொடங்கி குறைந்தபட்சமாக உத்திரவதாக தொகையாக பெற்றுக்கொள்ளலாம்.
- பன்னிரண்டு ஆண்டுகளின் குறைந்தபட்சம் உத்திரவதாக தொகையாக ஐம்பது ஆயிரம் உத்திரவாத தொகையாக பெற்றுக்கொள்ளலாம்.
- பதினைந்து ஆண்டுகள் உத்திரவாத தொகையாக எழுபத்தி ஐந்தாயிரம் வழங்கப்படுகிறது. இந்த தொகை வரையறு கிடையாது. இந்த காப்பீட்டில் சேர்வதற்கு குறைந்தபட்ச வயது 15 முதல் அதிகபட்சமாக 50 வயது வரை சேரலாம்.
- இந்த பாலிசிக்காரர் மெச்சூரிட்டி அடையும் போது நீங்கள் வாங்கும் தொகையை திருப்பி தர வேண்டும். அதனை 5,10 அல்லது 15 ஆண்டுகளில் நீங்கள் அதனை பெற்றுக்கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக:
பாலிசிதாரருக்கு 21-வது வயதில் இருக்கும் நிலையில் அவர் 2,00,000 ரூபாய்க்கு பீமா பட்சத் பாலிசியில் 9 வருடம் காலமாக ஒரு பாலிசி எடுத்தார் என்றால் அவருக்கு மூன்று வருடத்திற்கு ஒருமுறை அதாவது பாலிசிதாரருக்கு 21 வயது என்றால் அவருடைய 24 வயதில் அவருக்கு 30,000 வாழ்க்கை மேம்பாட்டிற்காக வழங்கப்படும். அதே போல் அவருடைய 27 வயதிலும் 30,000 வழங்கப்படும். அப்படி இல்லையென்றால் இந்த தொகையை ஒரே தொகையாகவும் பெற்றுக்கொள்ளாம்.
இந்த பாலிசி கடைசியில் அவருக்கு மொத்தமாக ரூபாய் 2,23,432 அவருக்கு வழங்கப்படும்.
இதற்கிடையில் பாலிசிதாரர் 3 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார் என்றால் அவரின் குடும்பத்திற்காக பாலிசியின் தொகை முழுமையாக வழங்கப்படும். அதேபோல் 3 வருடத்திற்கு பிறகு பாலிசிதாரர் இறந்தார் என்றால் லாயல்டி அடிசன் பீமா பட்ச திட்டத்தின் கீழ் உத்திரவாத தொகை வழங்கப்படும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |