ரூ.436 செலுத்தி 2 லட்சம் பெறலாம்..! மத்திய அரசு திட்டம்..! Life Insurance Policy of PMJJBY full Details in Tamil..!
மத்திய அரசின் 2 லட்சம் ரூபாய் பாலிசியான Pபிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா-ஐ பற்றி தான் இன்றைய பதிவில் நாம் தெரிந்துகொள்ள போகிறோம். அனைத்து நபர்களும் தங்களுடைய வாழ்க்கையில் இன்சூரன்ஸ் கவரை பெற வேண்டும் என்ற நோக்கில் கொண்டுவந்த ஸ்கீம் தான் இந்த PMJJBY திட்டம் குறித்த தகவல்களை இப்பொழுது நாம் படித்தறியாம வாங்க.
Rs.436 PMJJBY Premium Plan Details Tamil:-
இந்த ஸ்கீமில் குறைந்த பிரீமியத்தில் 2 லட்சம் ரூபாய் வரை இன்சூரன்ஸ் வழங்குகிறார்கள். இந்த ஸ்கீமிற்கான நீங்கள் வருடத்திற்கு ஒரே ஒரு முறை பிரீமியம் தொகை செலுத்தினால் போதும் உங்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கான பாலிசியை வழங்குவார்கள்..
பாலிசிதாரருக்கு ஏதாவது ஆகும் பட்சத்தில் அவர்களுடைய நாமினிக்கு இந்த 2 லட்சம் ரூபாயை வழங்குவார்கள். இந்த இன்சூரன்ஸில் இணைய விரும்புபவர்கள் உங்கள் அருகாமையில் உள்ள அஞ்சல் அலுவலகம் மற்றும் வங்கியில் இணையலாம்.
இவற்றில் நீங்கள் பாலிசி எடுப்பதற்கு கண்டிப்பாக உங்களிடம் ஒரு சேமிப்பு அக்கௌன்ட் இருக்க வேண்டும். இந்த இன்சூரன்ஸ் ஸ்கீமில் இணைவதற்கு எந்த ஒரு Medical Checkup-ம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 399 நாளில் Rs.87,529/- வட்டி தரும் அருமையான சேமிப்பு திட்டம்..!
இந்த இன்சூரன்ஸில் யாரெல்லாம் இணையலாம் என்றால் 18 வயது முதல் 50 வயது வரை பூர்த்தியடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் இணையலாம்.ஒரு நபர் ஒரே ஒரு பாலிசியை மட்டும் தான் இந்த திட்டத்தில் பெற முடியும். இந்த ஸ்கீமிற்கான Covering Period என்பது ஜூன் 1 முதல் மே 31 வரை செட் செய்துள்ளனர். ஆக ஒவ்வொரு வருடமும் இந்த ஸ்கிமிற்க்கான பாலிசி தொகையை உங்கள் சேமிப்பு கணக்கில் இருந்து மே கட் செய்வார்கள்.
இந்த ஸ்கீமிற்கான Yearly Premium தொகை ரூபாய் 436 ஆகும். இந்த இன்சூரன்ஸ் ஸ்கீமில் நீங்கள் இணைந்த முதல் 30 நாட்களுக்குள் விபத்து தவிர்த்து வேறு ஏதாவது காரணத்தினால் பாலிசிதாரர் இறந்தால் அவர்கள் எந்த விதமான கிளைமும் பெற முடியாது. இருப்பினும் விபத்தினால் இறந்தால் 2 லட்சம் ரூபாயை நீங்கள் கிளைம் செய்துகொள்ளலாம்.
மேலும் இந்த பாலிசியில் உங்களுக்கு எந்த விதமான மெச்சுரிட்டி தொகையும் வழங்கப்படாது. இன்சூரன்ஸ் கவர் மட்டுமே வழங்குவார்கள்.இந்த பாலிசி மூலமாக உங்களுடைய 55 வயது வரைக்கும் லைப் கவர் வழங்குகிறார்கள்.
இந்த பாலிசியில் இயற்கை மரணம், விபத்து, தற்கொலை, கொலை, இயற்கை சீற்றம் இது போன்ற மரணங்களுக்கு இன்சூரன்ஸ் கிளைம் செய்துகொள்ளலாம். இது தவிர்த்து வேறு ஏதாவது ஒரு காரணத்தினால் இறந்தாலும் 2 லட்சம் இன்சூரன்ஸ் வழங்கபடுகிறது.
இந்திய குடிமக்கள் மட்டும் இல்லமால் NRI-ம் இந்த இன்சூரன்ஸ் பாலிசியை வாங்கலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வெறும் Rs.20/- செலுத்தி Rs.2,00,000/- பெறலாம் அருமையான மத்திய அரசு திட்டம்..!
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |