மாதாந்திர வருமான கணக்கு திட்டம் (MIS)
மனிதனின் வாழ்க்கையில் சேமிப்பு என்பது ரொம்ப முக்கியமானதாக இருக்கிறது. ஏனென்றால் நாம் வாழ்நாள் முழுவதும் வேலை பார்த்து கொண்டே இருக்க முடியாது. 55 வயதிற்கு மேல் மனிதனுக்கு ஓய்வு தேவைப்படும். அதனால் அப்போது நாம் உட்கார்ந்து சாப்பிட வேண்டுமென்றால் இப்போது சம்பாதிக்கின்ற பணத்தை சேமித்து வைக்க வேண்டும். சேமிப்பைப் பொறுத்தவரை இந்தத் திட்டம் உங்களுக்கு பல்வேறு நன்மைகளை தரும். மாதம் மாதம் இந்த திட்டத்தின் மூலம் வருமானத்தை பெறமுடியும். இந்த திட்டம், தொடர்பான அனைத்து தகவல்களையும் இங்கே நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
மாதாந்திர வருமான கணக்கு திட்டம் (MIS):
தபால் அலுவலக முதலீடு செய்வதற்கும் சேமிப்பதற்கும் மிகச் சிறந்தவை என்பது தற்போது பரவலாக அறியப்படும் மாதாந்திர வருமான கணக்கு திட்டம் (MIS). இந்த MIS திட்டம் தபால் அலுவலக மூலம் மிகச் சிறந்த வட்டி விகிதங்களில் சிறந்த வருமானத்தை வழங்குகின்றது.
இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் ஒவ்வொரு மாதமும் வருமானம் பெற முடியும்.
தபால் அலுவலக தேசிய மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில் (MIS):
நீங்கள் உங்களை கணக்கை அருகில் உள்ள தபால் அலுவலகத்தில் குறைந்த பட்சமாக ரூபாய் 1000 செலுத்தி இந்த திட்டத்தில் இணைத்துக்கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் தனி நபர் கணக்கில் 1000 மடங்கில் ஆரம்பித்து ரூ.9 லட்சம் வரையிலும் செலுத்தலாம்.
கூட்டு கணக்கில் ரூ.15 லட்சம் வரையிலும் நீங்கள் டெபாசிட் செய்து பயன்பெறலாம். ஒரு வருடத்திலும் உங்கள் கணக்கை முடித்துக்கொள்ளலாம்.
ஒரு வருடத்தில் கணக்கை முடிப்பதால் உங்கள் டெபாசிட் தொகையில் இருந்து 2 % பிடித்துக்கொள்ளப்படும்.
ஒவ்வொரு மாதமும் உங்கள் வட்டியை பெற்றுக்கொள்ளலாம்.
வட்டி விகிதம் எவ்வளவு?
தபால் அலுவலகத்தின் தேசிய மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில் (MIS) கணக்கைத் தொடங்கிய நாளிலிருந்து ஒரு மாதம் முடிந்தவுடன் உங்களது கணக்கில் வட்டி செலுத்த படும். அதனை ஒவ்வொரு மாத முடிவிலும் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் டெபாசிட்தாரர்களுக்கு ஆண்டுக்கு 7.4 சதவீத வட்டி விகித பலன் அளிக்கப்பட்டுள்ளது.
வட்டியை சேமிப்பதால் மேல் வருமானம் எதுவும் இந்தத்திட்டத்தில் கிடைப்பதில்லை.
முதிர்வு காலம்:
முதிர்வு காலம் 5 ஆண்டுகள்.
முதிர்வு காலத்திற்குப் பிறகு, அது 5 ஆண்டுகளுக்கு திட்டத்தை நீட்டிக்கலாம்.
Post Office Monthly Income Scheme Account-யை Open செய்ய தேவையான ஆவணங்கள்:
- அடையாளச்சான்று
- முகவரிச்சான்று
- புகைப்படங்கள்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |