Mahila Samman Saving Scheme Details in Tamil
பணத்தை சேமிப்பதற்கு பல சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அதிலும் பெண்களுக்கு என்று தனியாக சேமிப்பு திட்டங்கள் நிறைய உள்ளன. அந்த வகையில் பெண்கள் போஸ்ட் ஆபீஸில் மாதம் 1300 ரூபாய் வட்டி தரக்கூடிய அருமையான திட்டம் பற்றித்தான் பார்க்கபோகிறோம். பெண்களின் எதிர்கால பயன்பாட்டிற்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் வட்டிக்கு எந்தவொரு வரி பிடித்தமும் கிடையாது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே இத்திட்டத்தில் பெண்கள் எவ்வளவு தொகை சேமிக்கலாம்.? வருடத்திற்கு எவ்வளவு வட்டி போன்ற விவரங்களை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
மகிளா சம்மன் சேமிப்பு திட்டம்:
2023 ஆம் ஆண்டில் பெண்களுக்காக உருவாக்கப்பட்டது தான் மகிளா சம்மன் சேமிப்பு பத்திரம். இத்திட்டத்தில் அனைத்து பெண்களும் கணக்கை தொடங்கலாம். அதுமட்டுமில்லாமல் பெண்குழந்தைகளின் பெயர்களிலும் இத்திட்டத்தில் கணக்கை தொடங்கலாம்.
வேலைக்கு செல்லும் பெண்கள், கல்வி கற்கும் பெண்கள் மற்றும் பெண் குழந்தையின் எதிர்க்காலத்திற்காக பெற்றோர்கள் இத்திட்டத்தில் கணக்கை தொடங்கலாம்.
மகிளா சம்மன் சேமிப்பு பத்திர திட்டம் குறுகிய கால திட்டம் என்பதால் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது இத்திட்டம் மார்ச் 2025 ஆம் ஆண்டு வரையில் மட்டுமே செயலில் இருக்கும்.
தபால் துறையில் 3 வருடத்தில் 20,06,864 ரூபாய் பெறக்கூடிய அசத்தலான சேமிப்பு திட்டம்..
முதலீடு தொகை:
பெண்கள் மகிளா சம்மன் சேமிப்பு பத்திர திட்டதின் கீழ் கணக்கை தொடங்கி குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சம் 2 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
வட்டி விகிதம்:
மகிளா சம்மன் சேமிப்பு திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் தொகைக்கு வருடம் 7.5% வட்டி அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தில் அதிகபட்சம் 2 லட்சம் முதலீடு செய்தால் வருடத்திற்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்..?
Mahila Samman Saving Interest Rate in Tamil | ||||
முதலீடு தொகை | வட்டி விகிதம் | வட்டி தொகை (மாதம்) | வட்டி தொகை (1 வருடம்) | வட்டி தொகை (2 வருடம்) |
2 லட்சம் | 7.5% | ரூ.1,300 | 16 ஆயிரம் ரூபாய் | 32 ஆயிரம் ரூபாய் |
வெறும் Rs.20/- செலுத்தி Rs.2,00,000/- பெறலாம் அருமையான மத்திய அரசு திட்டம்..
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |