Mahila Samman Saving Scheme Post Office 2023
நம்முடைய ஊரில் அமைந்து இருக்கும் போஸ்ட் ஆபீசில் மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் நிறைய திட்டங்கள் இருக்கிறது. அத்தகைய திட்டங்கள் அனைத்தும் அதிக வட்டியினை அளிக்கக்கூடிய சிறந்த திட்டமாக விளங்குகிறது. அந்த வகையில் பெண்களுக்கே என்றே பிரத்யோகமாக உள்ள ஒரு திட்டம் என்றால் அது தபால் துறையில் உள்ள மகிளா சம்மான் சேமிப்பு ஆகும். இது முற்றிலும் பெண்களுக்கு மட்டும் என்று கொண்டுவரப்பட்டதாகும். ஆனால் இந்த திட்டத்தின் பெயர்கள் தெரிந்து இருக்கும் அளவில் அதனை பற்றிய தகவல்கள் யாவும் அவ்வளவாக தெரியவில்லை. அதனால் இன்று போஸ்ட் ஆபீசில் உள்ள மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில் சேருவதற்கான தகுதிகள் பற்றியும் அதில் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும் என்றும் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே
👇 https://bit.ly/3Bfc0Gl
Post Office Mahila Scheme 2023:
தபால் துறையில் பெண்களுக்கான திட்டம் ஆகிய மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில் உங்களுடைய பணத்தை ஒரு முறை மட்டுமே செலுத்தினால் போதும். அதாவது Single பிரீமியம் செலுத்தி பயன் அடையாளம்.
டெபாசிட் தொகை:
இத்தகைய திட்டத்தில் குறைந்தப்பட்ச தொகையாக நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தி கொள்ளலாம். மேலும் அதிகபட்ச தொகை என்று பார்த்தால் 2 லட்சம் வரை செலுத்தி கொள்ளலாம்.
வட்டி விகிதம்:
பெண்களுக்கு உரிய இந்த மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் திட்டத்தில் வட்டி விகிதமாக 7.50% வரை அளிக்கப்படுகிறது.
முதிர்வு காலம்:
இந்த திட்டத்திற்கான முதிர்வு காலம் 2 வருடம் ஆகும்.
மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம்:
மேலே சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளின் படி குறிப்பிட்ட தொகையினை நீங்கள் முதலீடு செய்தால் 2 வருடத்திற்கு பிறகு வட்டி மற்றும் அசல் தொகையாக எவ்வளவு கிடைக்கும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
New Scheme👇👇 மாதந்தோறும் 2627 ரூபாய் செலுத்தினால் 12,12,500 ரூபாய் வருமானம் கிடைக்கும் LIC-யின் திட்டம்..
போஸ்ட் ஆபீஸ் மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் | |||
முதிர்வு காலம் | டெபாசிட் தொகை | மொத்த வட்டி தொகை | முதிர்வு கால தொகை |
2 வருடம் | 5,000 ரூபாய் | 801 ரூபாய் | 5,801 ரூபாய் |
10,000 ரூபாய் | 1,602 ரூபாய் | 11,602 ரூபாய் | |
50,000 ரூபாய் | 8,011 ரூபாய் | 58,011 ரூபாய் | |
80,000 ரூபாய் | 12,818 ரூபாய் | 92,818 ரூபாய் | |
1,00,000 ரூபாய் | 16,022 ரூபாய் | 1,16,022 ரூபாய் | |
1,50,000 ரூபாய் | 24,033 ரூபாய் | 1,74,033 ரூபாய் | |
2,00,000 ரூபாய் | 32,044 ரூபாய் | 2,32,044 ரூபாய் |
New Scheme👇👇 444 நாட்களில் Rs.5,51,110/- பெறலாம் இப்படி ஒரு திட்டமா
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |