Mahila Samman Saving Scheme Post Office in Tamil
அனைவருடைய வீட்டிற்கு அருகிலும் போஸ்ட் ஆபீஸ் இருப்பது எல்லோருக்கும் தெரியும். அத்தகைய போஸ்ட் ஆபீஸில் நிறைய திட்டங்கள் இருப்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்து இருக்கும். மற்றவர்களுக்கும் தெரிந்து இருக்கும். ஆனால் இத்தகைய திட்டங்களை பற்றி யாரும் பெரிதாக எடுத்து கொள்வது இல்லை. ஆனால் போஸ்ட் ஆபீஸில் உள்ள ஒவ்வொரு திட்டங்களும் மக்களுக்கு நிறைய வகையான நன்மைகளை தரக்கூடியதாக உள்ளது. அதுமட்டும் இல்லாமல் அதில் வட்டி விகிதங்களும் நிறையவே உள்ளது. ஆகையால் அத்தகைய போஸ்ட் ஆபீஸில் விரைவில் நடைமுறைக்கு வர இருக்கின்ற ஒரு திட்டத்தினை பற்றி தான் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் அந்த திட்டத்தின் மூலம் யாரெல்லாம் பயன் அடையாலாம் என்று பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்⇒ 400 நாட்களில் 5,40,029 ரூபாய் வழங்கும் SBI-யின் திட்டம்.! மார்ச் 31 கடைசி தேதி..
Post Office Savings Scheme:
போஸ்ட் ஆபீஸில் அறிமுகப்படுத்தப்பட்ட Mahila Samman Saving திட்டமானது முற்றிலும் பெண்களுக்கான ஒரு திட்டம் ஆகும். நீங்கள் இந்த திட்டத்தில் ஒரே ஒரு முறை மட்டும் சேமிப்பு தொகையினை செலுத்தினால் போதும்.
மேலும் இந்த திட்டமானது 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதியில் இருந்து போஸ்ட் ஆபீஸில் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலீடு தொகை:
போஸ்ட் ஆபீசில் உள்ள இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கான குறைந்த பட்ச தொகை 2 லட்சம் ஆகும். அதிகபட்சம் என்றால் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம்.
வட்டி விகிதம்:
இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.50% ஆகும்.
முதிர்வு காலம்:
Mahila Samman Saving திட்டத்திற்கான முதிர்வு காலம் 2 வருடம் ஆகும். மேலும் 2 வருடத்திற்குள் நீங்கள் குறிப்பிட்ட தொகையினை Deposit செய்ய வேண்டும் என்றால் அதற்கான வாய்ப்பும் இதில் உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நீங்கள் 2 லட்சம் முதலீடு செய்தால் உங்களுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்:
Mahila Samman Saving Scheme Post Office | ||||
முதலீடு செய்த தொகை | 1 வருடத்திற்கான வட்டி தொகை | 2 வருடத்திற்கான வட்டி தொகை | மொத்த வட்டி தொகை | மொத்த தொகை |
2 லட்சம் | 15,427 ரூபாய் | 16,617 ரூபாய் | 32,044 ரூபாய் | 2,32,044 ரூபாய் |
இதையும் படியுங்கள்⇒ சூப்பரான திட்டமா இருக்கே..! 1 லட்சத்திற்கு வட்டி மட்டுமே 97,073 ரூபாய் இந்த திட்டத்தில் பெறலாமா ..
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |