Mahila Samman Saving Scheme Post Office Interest Rate
போஸ்ட் ஆபிசில் உள்ள திட்டங்களில் நாம் சேர்ந்து சேமிக்கின்றோம் இல்லையோ ஆனால் கண்டிப்பாக அந்த திட்டத்தினை பற்றி கேள்வி பட்டிருப்போம். அந்த வகையில் நாம் அனைவருக்கும் பெண் குழந்தைகளுக்கு என்று உள்ள செல்மகள் சேமிப்பு திட்டம் பற்றி அறிந்து இருப்போம். அதிலும் ஒரு சிலர் தனது பெண் குழந்தையின் வாழ்க்கைக்காக இந்த திட்டத்தில் சேமித்து வருகிறார்கள். அந்த வகையில் பெண்களுக்காக என்று போஸ்ட் ஆபீசில் மற்றொரு திட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது போஸ்ட் ஆபீஸ் மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் ஆகும். எனவே இந்த திட்டத்தினை பற்றிய முழு விவரத்தினையும் தெளிவாக பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
மகிளா சம்மான் சேமிப்பு திட்டம்:
போஸ்ட் ஆபீசில் உள்ள மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில் பெண்கள் மட்டும் தான் பயன்பெற முடியும். அதேபோல் இதில் நீங்கள் செலுத்தும் சேமிப்பு தொகையினை ஒற்றை பிரீமியமாக மட்டும் தான் செலுத்த முடியும்.
1,00,000 முதலீட்டிற்கு 1,00,000 ரூபாயை வட்டியாக மட்டும் அளிக்கும் அஞ்சலக திட்டம்
வயது வரம்பு:
18 வயது பூர்த்தி ஆன பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் என இவர்கள் அனைவரும் சேமிக்கலாம்.
சேமிப்பு தொகை:
இத்தகைய திட்டத்தில் நீங்கள் அதிகப்பட்ச தொகையாக 2,00,000 ரூபாய் வரை செலுத்தி சேமிக்கலாம். மேலும் நீங்கள் சேமிக்கும் தொகையினை ஒற்றை பிரிமீயமாக முதலில் செலுத்தி விட வேண்டும்.
5 ஆண்டுகளில் 4,11,000/- அளிக்க கூடிய சீனியர் சிட்டிசன் திட்டம்
வட்டி விகிதம்%:
மகிளா சம்மன் திட்டத்தில் உங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 7.50% ஆகும்.
முதிர்வு காலம்:
போஸ்ட் ஆபீசில் உள்ள இந்த திட்டத்தில் உங்களுக்கான முதிர்வு காலம் என்பது 2 வருடம் ஆகும்.
டபுள் ஜாக்பாட் அடிக்கும் தபால் துறையின் அசத்தலான மாதாந்திர வருமான கணக்கு
இந்த திட்டத்தில் சேர தேவையான ஆவணங்கள்:
- ஆதார் அட்டை
- வாக்காளர் அட்டை
- பான் கார்டு
- ஓட்டுநர் உரிமம்
- KYC படிவம்
- விண்ணப்ப படிவம்
மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில் கிடைக்கும் அசல் மற்றும் வட்டி எவ்வளவு:
மேலே சொல்லப்பட்டுள்ள விவரங்களின் படி ஒரு பெண் இந்த திட்டத்தில் குறிப்பிட்ட தொகையினை 2 வருட கால அளவில் டெபாசிட் செய்தால் எவ்வளவு வட்டி மற்றும் அசல் கிடைக்கும் என்று கீழே அட்டவணை படுத்தப்பட்டுள்ளது.
சேமிப்பு தொகை | வட்டி தொகை | அசல் தொகை |
Rs. 10,000/- | Rs. 1,602/- | Rs. 11,602/- |
Rs. 50,000/- | Rs. 8,011/- | Rs. 58,011/- |
Rs. 1,00,000/- | Rs. 16,022/- | Rs. 1,16,022/- |
Rs. 1,50,000/- | Rs. 24,033 | Rs. 1,74,033/- |
Rs. 1,90,000/- | Rs. 30,442/- | Rs. 2,20,442/- |
210 ரூபாய் சேமித்தால் 8,50,000 ரூபாய் தரும் மத்திய அரசின் திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |