ஆண் குழந்தைகளுக்கான மூன்று அரசு சேமிப்பு திட்டங்கள் – Male Child Saving Scheme New Update 2023
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. பெண் குழந்தைகள், பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டங்களான செல்வமகள் சேமிப்பு திட்டம், Mahila Samman Savings Certificate போன்று. ஆண் குழந்தைகள், ஆண் குழந்தைகளுக்கு என்னென்ன சேமிப்பு திட்டங்கள் உள்ளது என்பது குறித்து இந்த பதிவில் நாம் முழுமையாக படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
பொன்மகன் சேமிப்பு திட்டம்:
இந்த ஸ்கீமை PPF ஸ்கீம் என்று சொல்லலாம்.
மைனர் குழந்தையின் பெயரில் அவர்களுடைய பெற்றோர் அல்லது லீகல் கார்டியன் கணக்கை தொடங்கலாம்.
இந்த சேமிப்பு திட்டத்தின் கால அளவு 15 ஆண்டுகள் ஆகும்.
பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1.50 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
இந்த சேமிப்பு திட்டத்திற்கு 7.10% வட்டி வழங்கப்படுகிறது.
உங்கள் செல்ல மகனின் பெயரில் பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆரம்பிக்க வேண்டும் என்றால் உங்கள் ஊரில் உள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று இந்த சேமிப்பு திட்டத்தில் இணையலாம்..
இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 5000 டெபாசிட் செய்து வந்தால். ஸ்கீமினுடைய கால அளவு 15 வருடத்தில் மொத்த டெபாசிட் தொகை 9 லட்சம் ரூபாயை நீங்கள் டெபாசிட் செய்திருப்பீர்கள். அதற்கான வட்டி 6,77,840 ரூபாய் வழங்குவார்கள். ஆக 15 வருடம் கழித்து உங்களுக்கு வழங்கப்படும் மெச்சுரிட்டி தொகை 15,77,840 ரூபாய் ஆகும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
1 லட்சம் செலுத்தினால் 2 லட்சம் பெறலாம் இரண்டு மடங்கு லாபம் தரும் அதிசய திட்டம்
National Saving Certificate – அஞ்சலக சேமிப்பு பத்திரம்:
National Saving Certificate ஸ்கீம் என்பது ஒரு குறிப்பிட்ட தொகையை லாம்சமாக ஒரே ஒரு முறை மட்டும் முதலீடு செய்வதாகும்.
இது ஒரு நண்பகத்தனமான சேமிப்பு திட்டம் ஆகும்.
இந்த திட்டத்தின் டெபாசிட் காலம் 5 வருடங்கள் ஆகும்.
18 வயது பூர்த்தியான இந்திய குடிமக்கள் அனைவருமே இந்த திட்டத்தில் இணையலாம்.
இந்த திட்டத்தின் குறைந்தபட்ச டெபாசிட் தொகை 1000 ரூபாய். அதிகபட்சமாக தொகையாக நீங்கள் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
இந்த சேமிப்பு திட்டத்திற்கு வழங்கப்படும் வட்டி 7.70% வழங்கப்படுகிறது.
முதலீட்டு காலம் | முதலீட்டு தொகை | வட்டி | மெச்சுரிட்டி தொகை |
5 வருடம் | 1 லட்சம் | 44,903 | 1,44,903 |
3 லட்சம் | 1,34,710 | 4,34,710 | |
5 லட்சம் | 2,24,517 | 7,24,517 | |
10 லட்சம் | 4,49,034 | 14,49,034 |
Recurring Deposit Scheme:
மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய விரும்புபவர்கள் இந்த Recurring Deposit Scheme-ஐ தேர்வு செய்யலாம்.
இந்த சேமிப்பு திட்டத்திற்கான குறைந்தபட்ச முதலீட்டு தொகை 100 ரூபாய் ஆகும். அதுவே அதிகபட்ச தொகை என்று பார்த்தால் நீங்கள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
இந்த திட்டத்திற்கு வழங்கப்படும் வட்டி 6.2 சதவீதம் ஆகும்.
இந்த சேமிப்பு திட்டத்தில் ஆண், பெண் என்று அனைவருமே முதலீடு செய்யலாம்.
இந்த திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் 2000 ரூபாய் முதலீடு செய்து இந்த கணக்கை தொடங்கினால், ஸ்கீமினுடைய கால அளவான 5 வருடத்தில் 1,20,000 ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். இதற்கு வழங்கப்படும் வட்டி 20865/- ரூபாய் ஆகும். டெபாசிட் தொகை மற்றும் வட்டி இரண்டையும் சேர்த்து உங்களுக்கு மெச்சுரிட்டி தொகையாக 1,40,865/- ரூபாய் வழங்கப்படும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
399 நாளில் Rs.87,529/- வட்டி தரும் அருமையான சேமிப்பு திட்டம்..!
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |