திருமண உதவித்தொகை பெறுவது எப்படி..! Marriage Assistance Scheme..!

Advertisement

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்..! Thalikku Thangam Thittam..! திருமண உதவித்தொகை..!

Marriage Assistance Scheme / திருமண உதவித்தொகை பெறுவது எப்படி 2024:- தமிழக அரசு பெண்களின் நலன் கருதி பலவகையான திட்டங்களை அறிமுகம் செய்கின்றது. அந்த வகையில் ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு அரசு நிதியுதவி அளிக்கிறது. அதாவது தமிழ்நாட்டில் உள்ள ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்கமும் 25,000 முதல் 50,000 வரை திருமண உதவி தொகையும் வழங்கப்படுகிறது. சரி இந்த திட்டங்களில் யாரேல்லாம் தகுதியுடையவர்கள், எப்படி இந்த திருமண உதவி தொகையை பெறலாம் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தமிழக அரசின் திருமண உதவி திட்டம்..! Thirumana Uthavi Thogai Form In Tamil / Thalikku Thangam Thittam..!
1. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதியுதவித் திட்டம்
2. டாக்டர். தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்
3. ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் நிதியுதவித் திட்டம்
4. அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் நிதியுதவித் திட்டம்
5. டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம்
மேல் கூறப்பட்டுள்ள திட்டங்களை பற்றி ஒவ்வொன்றாக தெரிந்து கொள்ளலாம்..

திருமண உதவித் தொகை விண்ணப்பம்- Thalikku Thangam Thittam Scheme in Tamil..!

Moovalur Ramamirtham Ammaiyar Scheme in Tamil

Marriage Assistance Scheme

இந்த திட்டத்தின் நோக்கம் / Thirumana Uthavi Thittam Details In Tamil:-

கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அரசு நிதியுதவி வழங்குகிறது. பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஏழைப் பெண்களின் பெற்றோருக்கு நிதியுதவி வழங்குதலும், பெண் கல்வி நிலையை உயர்த்துவதுமே மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டத்தின் நோக்கம்.

இரண்டு வகையான திட்டங்கள்:-

அதாவது இந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டத்தில் 10-ம் வகுப்பு படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ.25,000 உதவியுடன் தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது, அதேபோல் பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் திருமணத்திற்கு ரூ.50,000 உதவி தொகையும் 8 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும்.

வயது நிபந்தனை:

திருமணம் செய்துகொள்ளும் பெண்ணிற்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும், ஆணிற்கு  21 வயதும் பூர்த்தியாகியிருக்க வேண்டியது அவசியம்.

தகுதிகள் / நிபந்தனைகள்

திட்டம் 1

மணப்பெண் 10-ஆம் வகுப்புத் தேர்ச்சியோ அல்லது தோல்வியோ அடைந்திருக்கலாம். தனியார் தொலைநிலைக் கல்வி மூலம் படித்திருந்தால் 10-ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

திட்டம் 2

பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

ஆண்டு வருமானம்

72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படும். மணமகளின் தாய் அல்லது தந்தை பெயரில் உதவி தொகை வழங்கப்படும். பெற்றோர் இல்லையெனில், மணமகள் பெயரில் வழங்கலாம்.

திருமண உதவித்தொகை பெற தேவையான ஆவண சான்றுகள்

  • பள்ளிமாற்றுச் சான்று
  • நகல் திருமண அழைப்பிதழ்
  • வருமானச் சான்று
  • 10-ம் வகுப்பு படித்தவர்களாக இருந்தால் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
  • பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்று
  • ரேஷன் கார்ட் நகல் ஒன்று
  • பாஸ்போர்ட் அளவில் உள்ள ஒரு புகைப்படம்
newஅஞ்சல் துறையின் PPF Scheme..! ரூ.1000 முதலீடு செய்தால் வட்டி ரூ.1,45,455/- கிடைக்கும்

 

மேல் கூறப்பட்டுள்ள அனைத்து சாண்றிதழ்களையும் விண்ணப்பத்துடன் இணைத்து திருமணம் ஆகுவதற்கு முன் 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.



டாக்டர். தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்..! Thalikku Thangam Thittam Scheme in Tamil

 இத்திட்டத்தின் நோக்கம்:-

விதவைகளுக்குப் புதுவாழ்வளிக்க, அவர்களின் மறுமணத்திற்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் விதவைகள் மறுமணத்தை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

வழங்கப்படும் உதவி

திட்டம் 1

25,000 ரூபாய் (15,000 ரூபாய் காசோலையாகவும், 10,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

திட்டம் 2

50,000 ரூபாய் (30,000 ரூபாய் காசோலையாகவும், 20,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

தகுதிகள் / நிபந்தனைகள்

திட்டம் 1 – இதற்கு கல்வித் தகுதி தேவை இல்லை.

திட்டம் 2 – பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
வருமான வரம்பு இல்லை.

வயது தகுதி:-

மணமகளின் குறைந்தபட்ச வயது 20 ஆக இருத்தல் வேண்டும். மணமனின் வயது 40 வயது மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு

திருமண நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேவையான சான்றுகள்

விதவைச் சான்று மறுமணப் பத்திரிகை மணமகன் அல்லது மணமகளின் வயதுச் சான்று திருமணப் புகைப்படம் பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்று.



திருமண உதவித்தொகை பெறுவது எப்படி..! Thalikku Thangam Scheme Details in Tamil

ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் நிதியுதவித் திட்டம்

இத்திட்டத்தின் நோக்கம்:-

ஏழை விதவையாரின் மகள் திருமணத்திற்கு போதிய நிதிவசதி இல்லாத பட்சத்தில் அவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெறலாம்.

திட்டம் 1

25,000 ரூபாய் (15,000 ரூபாய் காசோலையாகவும், 10,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 8 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

திட்டம் 2

50,000 ரூபாய் (30,000 ரூபாய் காசோலையாகவும், 20,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 8 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

தகுதிகள்:-

திட்டம் 1 – இதற்கு கல்வித் தகுதி தேவை இல்லை.

திட்டம் 2 – பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
வருமான வரம்பு இல்லை.

நிபந்தனைகள்:-

ஆண்டு வருமானம் 72,000 மிகாமல் இருக்க வேண்டும்.

விதவை தாயின் ஒரு மகளின் திருமணத்திற்கு மட்டுமே திருமண உதவி தொகை வழங்கப்படும்.

மணமகளின் வயது 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

இந்த திட்டம் பொறுத்தவரை மணமகளின் தாய்க்கு உதவி தொகை வழங்கப்படும். ஒரு வேளை விண்ணப்பித்த தாய் இறந்து விட்டால் மணமகள் பெயரில் உதவி தொகை வழங்கப்படும்.

தேவைப்படும் சான்றிதழ்கள்:-

  1. பள்ளிமாற்றம் சான்று நகல்,
  2. திருமண அழைப்பிதழ் சான்று,
  3. வருமான சான்றிதழ்,
  4. 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்,
  5. பட்டப் படிப்பு / பட்டய படிப்பு தேர்ச்சி பெற்ற சான்றிதழ்,
  6. ஆதார் கார்ட் நகல்
  7. பேங்க் பாஸ் புக் நகல்

இவை அனைத்தும் தேவைப்படும்.



அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் நிதியுதவித் திட்டம் | Annai Theresa Ninaivu Marriage Assistance Scheme

திட்டத்தின் நோக்கம்:

தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற பெண்களுக்கு பொருளாதார வகையில் திருமணத்திற்கு உதவுவதே இத்திட்டத்தின் நோக்கம். வழங்கப்படும் உதவி

திட்டம் 1

25,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

திட்டம் 2

50,000 ரூபாய் (காசோலை) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

தகுதிகள்

ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் நிதியுதவித் திட்டத்திற்கான தகுதிகளே இத்திட்டத்திற்கும் பொருந்தும். வருமான வரம்பு இல்லை.

மணமகளுக்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். வயது உச்சவரம்பு இல்லை.

தேவையான சான்றுகள்

  • சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து ஆதரவற்றோர் சான்று பெற்று வழங்கலாம்
  • அல்லது தாய், தந்தை இறப்புச் சான்று வழங்க வேண்டும்.
  • விண்ணப்பதாரரின் வயதுச்சான்று.
  • பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்று

குறிப்பு

விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு:

திருமணத்திற்கு 30 நாட்களுக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம். திருமணத்தன்றோ, திருமணத்திற்குப் பிறகோ விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.



டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவி திட்டம் | 

திட்டத்தின் நோக்கம்:

கலப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்தி பிறப்பு அடிப்படையிலான ஜாதி, இன வேறுபாட்டை அகற்றி தீண்டாமை எனும் கொடுமையை ஒழிப்பதே இத்திட்டத்தின் நோக்கம் வழங்கப்படும் உதவி

திட்டம் 1

25,000 ரூபாய் (15,000 ரூபாய் காசோலையாகவும், 10,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

திட்டம் 2

50,000 ரூபாய் (30,000 ரூபாய் காசோலையாகவும், 20,000 ரூபாய் தேசிய சேமிப்புப் பத்திரமாகவும்) மற்றும் 4 கிராம் தங்க நாணயம் திருமாங்கல்யம் செய்ய வழங்கப்படும்.

தகுதிகள் / நிபந்தனைகள்

பிரிவு 1- புதுமணத் தம்பதியரில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினராக இருந்து, பிற இனத்தவரை மணந்துகொண்டால் நிதியுதவி வழங்கப்படும்.

பிரிவு 2- புதுமணத் தம்பதியரில் ஒருவர் முற்பட்ட வகுப்பினராகவும் மற்றொருவர் பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும் இருந்தால் நிதியுதவி வழங்கப்படும்.

கல்வி தகுதி:

திட்டம் 1-யில் இதற்கு கல்வித் தகுதி தேவை இல்லை.

திட்டம் 2-யில் பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பட்டயப் படிப்பு, எனில் தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

வருமான வரம்பு இல்லை விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு, திருமணம் முடிந்து இரண்டு வருடங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேவையான சான்றுகள்

  • திருமணப் பத்திரிகை அல்லது திருமணப் பதிவுச் சான்று
  • மணமகன் அல்லது மணமகளின் ஜாதிச் சான்று
  • மணப்பெண்ணின் வயதுச் சான்று
  • பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்று
  • ஆதார் கார்ட்
  • பேங்க் பாஸ் புக் நகல்

குறிப்பு:

அனைத்துத் திட்டங்களுக்கும் மாவட்ட சமூகநல அலுவலர்கள் மற்றும் சமூக நல விரிவாக்க அலுவலர்களை அணுகவும்.



மேல் கூறப்பட்டுள்ள திட்டங்களில் பயன்பெற யாரை அணுகுவது?

மாநகராட்சிப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மாநகராட்சி ஆணையரையும், நகராட்சிப் பகுதிகளில் நகராட்சி ஆணையரையும், ஊரகப் பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய ஆணையரையும் அணுகலாம். தவிர மாவட்ட சமூகநல அலுவலர்கள், சமூகநல விரிவாக்க அலுவலர்கள், மகளிர் ஊர்நல அலுவலர்களையும் அணுகலாம்.

மேலும் முழுமையான விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> Marriage Assistance Scheme CLICK HERE>>

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement