போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள் 2023
மாதாந்திர வட்டி திட்டம் என்பது நாம் சேமிக்கும் தொகையினுடைய வட்டி விகிதத்தினை மாதந்தோறும் பெரும் முறை ஆகும். இத்தகைய திட்டம் ஆனது மக்கள் அனைவருக்கும் மிகவும் பயன் அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் மக்கள் அனைவரும் மாதந்தோறும் சம்பாதித்தாலும் கூட அவற்றை இல்லாமல் ஒரு நிலையான வருமானத்தை பெற வேண்டும் என்று தான் கருத்தில் கொள்கிறார்கள். அதனால் இந்த திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட MIS திட்டத்தினை உங்களுடைய ஊரில் இருக்கும் போஸ்ட் ஆபீஸிலேயே சேர்ந்து பயன்பெறலாம். மேலும் இந்த திட்டத்தினை பற்றிய முழு தகவலையும் மிகவும் தெளிவாகவும் விரிவாகவும் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
MIS Scheme in Post Office 2023:
இந்த MIS திட்டத்தில் 18 வயது பூர்த்தி ஆன மக்கள் அனைவரும் சேர்ந்து பயன் அடையலாம். மேலும் இந்த திட்டத்தில் ஒரு நபர் எத்தனை கணக்குகளை வேண்டுனமானாலும் ஓபன் செய்து கொள்ளலாம்.
சேமிப்பு தொகை:
போஸ்ட் ஆபீசில் உள்ள இந்த திட்டத்திற்கான குறைந்தபட்ச சேமிப்பு தொகை 1,000 ரூபாய் ஆகும். அதுவே அதிகப்பட்ச தொகை என்பது 9,00,000 ரூபாய் ஆகும்.
வட்டி விகிதம்:
இத்தகைய மாதாந்திர சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதமாக தற்போது 7.4% அளிக்கப்படுகிறது. ஆனால் வட்டி விகிதம் என்பது நீங்கள் சேமிப்பில் சேரும் நாள் முதல் அடுத்த 5 வருடம் வரை மாற்றம் இல்லாமல் காணப்படும்.
முதிர்வு காலம்:
மாதாந்திர சேமிப்பு திட்டத்திற்கான முதிர்வு காலம் 5 வருடம் ஆகும்.
ஒருவேளை இந்த திட்டத்தில் நீங்கள் சேமிக்க தொடங்கிய பிறகு 1 வருடம் கழித்து கணக்கை Premature ஆக முடித்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கான வாய்ப்புகளும் சில நிபந்தனைகளின் அடிப்படையில் வரும்.
New Scheme👇👇 மத்திய அரசின் அசத்தலான திட்டம்.. 7 வருடத்தில் Rs.15,14,500/- பெறலாம்..
Monthly Income Scheme Post Office 2023:
சேமிப்பு தொகை | மாதாந்திர வட்டி தொகை | 5 வருடத்திற்கான வட்டி தொகை | அசல் தொகை |
Rs. 1,000/- | Rs. 6/- | Rs. 360/- | Rs. 1,360/- |
Rs.10,000/- | Rs. 62/- | Rs. 3,720/- | Rs. 13,720 /- |
Rs. 50,000/- | Rs. 308/- | Rs. 18,480/- | Rs. 68,480/- |
Rs. 1,00,000/- | Rs. 617/- | Rs. 37,020/- | Rs. 1,37,020/- |
Rs. 2,00,000/- | Rs. 1,233/- | Rs. 73,980/- | Rs. 2,73,980/- |
Rs. 5,00,000/- | Rs. 3,083/- | Rs. 1,84,980/- | Rs. 6,84,980/- |
New Scheme👇👇 போஸ்ட் ஆபீசில் மாதம் 3,000 ரூபாய் செலுத்தினால் போதும் 15,49,435 ரூபாய் பெறக்கூடிய சேமிப்பு திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |