Modi insurance scheme
நாம் வாழும் இந்த உலகில் இன்றைய காலகட்டத்தில் மிக மிக முதன்மையாக திகழ்வது பணம் தான். அதாவது பணம் இல்லாத ஒருவரை இந்த சமுதாயம் மனிதனாக கூட மதிப்பதில்லை. அதனால் நமது வாழ்க்கைக்கு தேவையான பணத்தை அனைவருமே மிக மிக கஷ்ட்டப்பட்டு சம்பாதிப்போம். அப்படி நாம் சம்பாதிக்கும் பணம் நமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மட்டுமே பயன்படுகிறது. நமது எதிர்காலத்தில் நமக்கு பணத்தின் தேவை இருக்கும் அதற்கான எந்த ஒரு சேமிப்பும் இல்லாமல் இருப்பது முட்டாள் தானம். இதனால் நமது குடும்பமும் பதிப்பிற்குஉள்ளாகும். நமக்கு அடுத்தது நமது குடும்பத்திற்கான சேமிப்பை நாம் செய்ய வேண்டும். அப்படி ஒரு திட்டம் தான் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா.
இந்திய மக்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய அவர்களில் நிதியிலமையில் மேம்படுத்த வருமானம் குறைந்த மக்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டம் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா. அதன் மூலம் அனைவரும் தங்களுக்கான இறப்பு காப்பீட்டை மிகவும் குறைந்த விலையில் பெற இந்த திட்டம் உறுதி செய்தது. இன்றைய பதிவில் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தினை பற்றியும் அதில் இணைவதற்கான தகுதிகள் மற்றும் முதலீடு தொகைகளை தெரிந்து கொள்ளவோம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Modi insurance scheme details in tamil:
இந்த திட்டத்தில் வருடத்திற்கு ஒரு முறை முதலீடு செய்வதால் 2 லட்சம் வரை இன்சூரன்ஸ் பெற முடியும். இந்த இன்சூரன்ஸ் திட்டம் 3 பிரிவுகளில் மக்களுக்கு சென்றடைகிறது. இன்று PMJJBY திட்டத்தினை பற்றி தெரிந்துகொள்வோம்.
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY)
PMJJBY என்பது ஒரு வருட ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இந்த திட்டத்தில் இணைவதற்கு 18 வயதிலிருந்து 50 வயதிற்குள் உள்ள அனைத்து இந்தியரும் இணையலாம்.
திட்டத்தில் இணைவதற்கு நீங்கள் அரசு அங்கீகரிக்கப்பட்ட வங்கி அல்லது தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் நீங்கள் செலுத்த வேண்டிய முதலீட்டை ஜூன் 1 முதல் மே 30 வரை உங்கள் கணக்கில் இருந்து பிடித்துக்கொள்வார்கள்.
இந்த திட்டத்தில் நீங்கள் வருடம் செலுத்த வேண்டிய தொகை 436 ஆகும்.
ஆயுள் காப்பீடாக 2 லட்சம் கிடைக்கும்.
எப்படி இறந்தால் இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும்:
இயற்கை முறையில் இருப்பவருக்கு 2 லட்சம் இன்சூரன்ஸ் கிடைக்கும்.
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |