நரேந்திர மோடி அறிவித்த திட்டங்கள் | Modi Scheme in Tamil

Modi Scheme in Tamil

பிரதமர் மோடி திட்டங்கள் | Prathamar Modi Thittam

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தன் இந்திய நாட்டிற்காக பல திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளார். மே மாதம் 30-ம் தேதியன்று 2019 ஆம் ஆண்டில் இந்திய நாட்டின் பிரதமராக பதவி ஏற்றார். குஜராத் மாநிலத்தில் பல காலம் முதல்வராக இருந்தவர் என்ற தனிச்சிறப்பும் இவருக்கு உண்டு. பிரதமராக பதிவு ஏற்றதும் நாட்டிற்காக பல நல திட்டங்களை ஏற்படுத்தியவர். நரேந்திர மோடி அவர்கள் செயல்படுத்திய மத்திய அரசின் திட்டங்களை கீழே காண்போம் வாங்க.

இலவச சிலிண்டர் வாங்குவது எப்படி?

இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பங்களில் உள்ள பெண்களின் நலன் கருதி, பிரதம மந்திரியின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச சமையல் சிலிண்டர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டமானது உத்திர பிரதேசத்தில் 2016-ம் ஆண்டு மே 01-ம் தேதி மத்திய அரசால் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த வகையில் நாடு முழுவதுமாக வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு ஐந்து கோடி சமையல் சிலிண்டர் இணைப்புகள் வழங்கும் நோக்கத்தில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. இலவச சிலிண்டர் வாங்குவது எப்படி என்று தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கின்றிர்களா அப்படி என்றால் கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

மத்திய அரசின் இலவச சிலிண்டர் எப்படி வாங்குவது..?

தெருவோர வியாபாரிக்கான கடனுதவி திட்டம் | PM Svanidhi Yojana Scheme:

இந்த மத்திய அரசு கடனுதவி திட்டத்தில் வியாபாரிகள் கடனுதவி எவ்வளவு பெறலாம், இந்த திட்டத்தில் யாரெல்லாம் லோனை பெறலாம், தெருவோர வியாபாரிகளின் வீடுகளுக்கு சென்றே கடனுதவியை வழங்குவதற்கு மத்திய அரசானது மொபைலில் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. தெருவோர வியாபாரிக்கான கடனுதவி திட்டம் பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கின்றிர்களா அப்படி என்றால் கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

மத்திய அரசு வழங்கும் தெருவோர வியாபாரிக்கான கடனுதவி திட்டம்

சவரன் தங்க பத்திர முதலீடு திட்டம் | Sovereign Gold Bond Scheme In Tamil:

மத்திய அரசானது தங்க பத்திர முதலீடு திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளது. நேரடியாக தங்க நகைகள் வாங்குவதை குறைத்து பத்திரம் வைத்து நகை வாங்குவதன் மூலம் தங்கம் இறக்குமதி செலவினை குறைக்கலாம் என்ற நோக்கத்தின் மூலமாக கொண்டுவரப்பட்டது தான் இந்த சவரன் தங்க பத்திரம் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் அக்டோபர் 2018 முதல் பிப்ரவரி 2019 வரை தொடர்ந்து 5 மாதங்கள் வரை முதலீடு செய்யலாம் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த திட்டம் பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கின்றிர்களா அப்படி என்றால் கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

சவரன் தங்க பத்திர முதலீடு திட்டம்

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு திட்டம்:

இந்த திட்டத்தின் மூலம் யாரெல்லாம் கடனுதவி பெறலாம், கடனுதவி பெறுவதற்கு தேவையான ஆவணங்கள், இந்த திட்டத்தில் எப்படி அப்ளை செய்வது என்ற விவரங்கள் சிலருக்கு இன்றும் தெரியாமல் இருக்கிறது. தொழில் துவங்குவதற்கு அதற்கேற்ற முதலீடு இல்லாதவர்கள் பலர் இருப்பார்கள். இதனால் அரசாங்கம் மூலம் கடனுதவி பெறுவதற்காக கொண்டுவரப்பட்டது தான் இந்த வேலைவாய்ப்பு திட்டம். இந்த திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு ரூ.25/- லட்சம் வரையிலும் கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கின்றிர்களா அப்படி என்றால் கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

ரூ.25 லட்சம் கடனுதவி வழங்கும் பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம்

பிரதமரின் தாய்மை வந்தன திட்டம் | PMMVY Scheme Details in Tamil:

பிரதமரின் தாய்மை வந்தன திட்டமானது கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டமாகும். இந்த திட்டமானது 01.01.2017 அன்று செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் பெயர் பிரதம மந்திரி மாத்ரு வந்தன திட்டம். பிரதமரின் தாய்மை வந்தனத் திட்டம் (PMMVY) என்பது பெண்களுக்குப் பேறுகாலப் பயன்கள் தரும் திட்டமாகும். 2013 ஆம் ஆண்டின் உணவு உறுதிப்பாடு சட்டத்தின் படி, நம் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அவர்களுடைய முதல் குழந்தைக்கு மூன்று தவணை மூலம் ரூ 5000 வழங்கப்படுகிறது. அதேபோல்  தமிழக அரசு வழங்கும் ரூ.18,000/- உதவி தொகையுடன், இந்த மத்திய அரசு வழங்கும் ரூ.5,000/- உதவி தொகையையும் பெற்று கொள்ளலாம். இந்த திட்டம் பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கின்றிர்களா அப்படி என்றால் கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.5000 அறிவிப்பு..! பிரதமரின் தாய்மை வந்தன திட்டம்..!

மத்திய அரசின் 4,00,000/- வழங்கும் திட்டம் | PMSBY And PMJJBY Scheme In Tamil:

இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.4 லட்சம் கிடைக்கக்கூடிய சிறந்த திட்டம். மத்திய அரசின் முதல் திட்டமானது சுரக்ஷா பீமா யோஜனா(PMSBY) மற்றும் ஜீவன் ஜோதி பீமா யோஜனா(PMJJBY). இந்த திட்டத்தில் ரூ.12/- முதலீடு செய்தால் போதும். இதன் மூலம் ஒவ்வொரு திட்டத்தில் ரூ.2 லட்சம் எப்படி பெறலாம் என்று கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

ரூ.12/- செலுத்தினால் போதும்..! 4,00,000/- பெற புதிய திட்டம்..!

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்:

இந்த அடல் பென்ஷன் திட்டம் ஜூன் 1 2015-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. சரி இந்த திட்டத்தில் யாரெல்லாம் இணைந்து பயன்பெறலாம், இந்த திட்டத்தின் நோக்கம் என்ன?, இந்த திட்டத்தின் அம்சங்கள் போன்ற விவரங்களை பற்றி தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

மாதம் 5,000/- ரூபாய் வருமானம் தரக்கூடிய அடல் பென்ஷன் யோஜனா திட்டம்

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம்:

பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம் கடந்த 2019 பிப்ரவரி, 24ல் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு வருடா வருடம் ரூ.6,000/- நிதி உதவி இத்திட்டத்தில் பெறலாம். அதாவது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை இத்திட்டத்தில் ரூ.2000/-வீதம் விவசாயிகள் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும். இத்திட்டம் சிறு, குறு, நடுத்தரம் மற்றும் பெரிய விவசாயிகளுக்கும் இப்போது வழங்கப்படுகிறது. இந்த திட்டம் பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கின்றிர்களா அப்படி என்றால் கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம்

புதிய கல்வி கொள்கை திட்டம்:

புதிதாக உருவாக்கம் செய்யப்பட்ட இந்த தேசிய கல்வி கொள்கை 34 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட தேசிய கல்வி கொள்கை 1986-க்கு மாற்றாக அமையும் என்று குறிப்பிட்டுள்ள இந்திய அரசின் பத்திரிகை தகவல் நிறுவனமான PIB முக்கிய கல்வி கொள்கையின் அம்சங்களை வெளியிட்டுள்ளது. இந்த திட்டம் பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கின்றிர்களா அப்படி என்றால் கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

புதிய கல்வி கொள்கை திட்டம்

மத்திய அரசின் ஓய்வூதிய திட்டம்:

மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள அனைவருக்கும் ஓய்வூதியம் திட்டம் பற்றி தங்களுக்கு தெரியுமா..? தேசிய ஓய்வூதியத் திட்டம் இதனை ஆங்கிலத்தில் National Pension Scheme என்று சொல்வார்கள். இந்த திட்டம் PFRDA திட்டத்தின் கீழ் செயல்படுகிறது. பொதுவாக அரசாங்கத்துறையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் தான் அரசு ஓய்வூதியம் பெற முடியும். மற்றபடி தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு அரசின் ஓய்வூதியம் பெற முடியாது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பென்ஷன் இல்லாதபட்சத்தில் நமது இந்திய அரசாங்கம் இந்த தேசிய ஓய்வூதியம் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. அதாவது தாங்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் இந்த திட்டத்தில் பயன்பெற இயலும். இந்த திட்டம் பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கின்றிர்களா அப்படி என்றால் கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

மத்திய அரசின் ஓய்வூதிய திட்டம்

மத்திய அரசு வீடு கட்டும் திட்டம்:

அனைவருமே சொந்தமாக வீடுகட்ட பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் தங்களுக்கு பெரிதும் உதவுகிறது. இது மத்திய அரசின் மிக சிறந்த திட்டம் என்றும் சொல்லலாம். இந்த திட்டத்தின் மிக முக்கிய நோக்கம் 2022 ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் அனைவருக்கும் சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுகிறது. இந்த திட்டம் பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கின்றிர்களா அப்படி என்றால் கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

மத்திய அரசு வீடு கட்டும் திட்டம்

மத்திய அரசின் இளம் தொழில் முனைவோருக்கான கடனுதவித் திட்டம்:

புதிதாக தொழில் துவங்கும் அனைத்து இளம் தொழில் முனைவோர்களுக்கு மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி பல்வேறு மானிய உதவிகளையும், நிதியுவிகளையும் வழங்குகின்றன. அந்த வகையில் 5,00,000 வரை பிணையம் இல்லாமல் கடன் உதவி பெறலாம். அதுதான் மத்திய அரசின் CGTMSE திட்டமாகும். இந்த திட்டம் பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கின்றிர்களா அப்படி என்றால் கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

மத்திய அரசின் இளம் தொழில் முனைவோருக்கான கடனுதவித் திட்டம்

ஜன்தன் யோஜனா வங்கி கணக்கு தொடங்குவது எப்படி:

இந்த ஜன் தன் திட்டம் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் 2014 ஆகஸ்டு 28-ஆம் நாள் அன்று புதுதில்லியில் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தின் நோக்கமானது வீட்டுக்கு ஒரு வங்கி கணக்கு  வகையில் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், வங்கியில் கணக்கு இல்லாத 7 1/2 கோடி குடும்பத்தினருக்கு காப்பீடு வசதிகளுடன் வங்கி கணக்கு தொடங்கப்படுகிறது. நாடு முழுவதும் மாநில தலைநகரங்களிலும் மற்றும் முக்கிய மாவட்ட தலைநகரங்களிலும் இந்த ஜன்தன் திட்டமானது தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்கு தொடங்குவதற்கு ஆதார் அட்டை இருந்தால் மட்டும் போதும். வேறு எந்த ஆவணங்களும் தேவையில்லை. இந்த திட்டம் பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கின்றிர்களா அப்படி என்றால் கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

ஜன்தன் யோஜனா வங்கி கணக்கு தொடங்குவது எப்படி

செல்வமகள் சேமிப்பு திட்டம்:

மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்குக் கொண்டு வரப்பட்ட திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் (Sukanya Samriddhi Yojana Scheme In Tamila). இத் திட்டம் தான் தமிழ் நாட்டில் செல்வ மகள் திட்டமாக செயல்பட்டு வருகிறது. 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்தக் கணக்கை அனைத்து அஞ்சலகங்களிலும் குறிப்பிட்ட வங்கிகளிலும் துவங்க முடியும். இந்த திட்டம் பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கின்றிர்களா அப்படி என்றால் கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

செல்வமகள் சேமிப்பு திட்டம்

பொன் மகன் சேமிப்பு திட்டம்:

பெண் குழந்தைகள் போன்றே ஆண் குழந்தைக்களுக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள “பொன்மகன் சேமிப்பு திட்டம்” மூலமாக வைப்பு முதிர்வு தேதிக்கு முன்பாகவே பணம் பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அஞ்சல் துறை இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பொன் மகன் சேமிப்பு திட்டம்(magan semippu thittam) குறிப்பாக ஆண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக, ‘பொன் மகன்’ சேமிப்பு திட்டத்தை, தபால் துறை அறிமுகப்படுத்தி உள்ளது. அதவாது ஆண் குழந்தைகளுக்காக, ‘பொன் மகன்’ சேமிப்பு திட்டம் அறிமுகமாகி உள்ளது. ஆண்டுக்கு, 12 முறை என குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம், ஒரு லட்சத்து. 1,50,000/- ரூபாய் வரை சேமிப்பு தொகை செலுத்தலாம். இந்த திட்டம் பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கின்றிர்களா அப்படி என்றால் கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

பொன் மகன் சேமிப்பு திட்டம்

விவசாயிகளுக்கு பயனுள்ள 6 திட்டங்கள்:

விவசாயிகளுக்கான சிறந்த 6 பயனுள்ள நல திட்டங்களை மத்திய அரசு விவசாயிகளுக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்களை பற்றி இன்னும் சிலருக்கு தெரியாமலேயே இருக்கின்றன. இந்த திட்டம் பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கின்றிர்களா அப்படி என்றால் கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

விவசாயிகளுக்கு பயனுள்ள 6 திட்டங்கள்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil