Money saving plan in tamil
நண்பர்களுக்கு வணக்கம் இன்று நாம் ஒரு அருமையான சேமிப்பு முறையை பற்றி தான் பார்க்க போகிறோம். அதாவது தினமும் 50 ரூபாய் சேமித்து வந்தால் மிக எளிதாக 18.5 லட்சம் பெற முடியும். இந்த சேமிப்பு முறையை மிடில் கிளாஸ் மக்களால் கூட சேமிக்க முடியும். அது என்ன சேமிப்பு முறை என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
சேமிக்கும் முறை:
இந்த சேமிப்பு முறை குறைந்த சம்பளம் வாங்கும் நபரினால் கூட சேமிக்க முடியும். குறிப்பாக குறைந்த சேமிப்பில் நீண்டகால சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நமது எதிர்காலத்திற்கு ஒரு நல்ல சேமிப்பு நம்மிடம் இருக்கும். ஆக நாம் சம்பாதிக்கும் போது தினமும் சிறிய அளவில் சேமித்து வந்தால் நமது எதிர்காலத்திற்கு அந்த பணம் நமக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
ஆக தினம் சம்பாதிப்பவர்களும் இந்த சேமிப்பு முறையை பின்பற்றலாம் அல்லது மாதம் சம்பாதிக்கும் நபர்களுக்கும் இந்த சேமிப்பு முறையை பின்பற்றலாம். நாம் சேமிக்கும் பணத்தை ஏதாவது ஒரு நண்பகத்தனமான ஒரு ஸ்கீமில் முதலீடு செய்யலாம், அந்த பணம் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் மற்றும் அதற்கு வட்டியும் கிடைக்கும்.
அப்படி பாதுகாப்பான அரசு சேமிப்பு திட்டம் தான் PPF சேமிப்பு திட்டம். இதனுடைய முழு விரிவாக்கம் Public Provident Fund இந்த ஸ்கீமின் முழுமையான தகவலை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 Post Office PPF Scheme in Tamil 👈
சரி இந்த PPF ஸ்கீமில் நாம் எப்படி முதலீடு செய்ய போகிறோம் என்று பார்க்கலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
போஸ்ட் ஆபீஸின் பிக்ஸடு டெபாசிட் திட்டத்தில் 30000 ரூபாய் சேமித்தால் 1 வருடத்தில் எவ்வளவு கிடைக்கும்..!
PPF Scheme in Tamil:
தினமும் நீங்கள் வெறும் 50 ரூபாய் எடுத்து வைத்தாலே போது ஒரு மாதத்திற்கு 1500 ரூபாய் கிடைக்கும். அல்லது ஒரு மாதத்திற்கு 1500 ரூபாய் ஒதுக்கி வைக்கவும்.
இந்த 1500 ரூபாய் தொகையை PPF சேமிப்பு ஸ்கீமில் மாதம் மாதம் என்று 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து வரவும்.
இதற்கு வட்டி 7.1% தற்பொழுது அஞ்சலகத்தில் வழங்கப்படுகிறது. இதற்கு வட்டிக்கு வட்டி கூட்டு வட்டியும் கிடைப்பதினால் உங்களுடைய மெச்சுரிட்டி தொகை கூடுதலாக கிடைக்கும்.
இந்த திட்டத்தின் மெச்சுரிட்டி காலம் 15 ஆண்டுகள் ஆகும். இந்த மெச்சுரிட்டி காலம் முடிந்தபிறகு நீங்கள் மேலும் இந்த திட்டத்தை நீட்டிக்க விரும்பினால் ஐந்தைந்து வருடங்களாக நீங்கள் நீட்டித்து கொண்டு முதலீடு செய்து வரலாம்.
இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ஒரு வருடத்திற்கு 500 ரூபாய் முதலீடு செய்யலாம் உங்களுடைய சேமிப்பு கணக்கு அக்டிவாக இருக்கும். அதிகபட்ச ஒரு வருடத்திற்கு 1,50,000/- ரூபாய் வரை முதலீடு செய்து வரலாம்.
சரி இந்த திட்டத்தில் மாதம் மாதம் 1500 ரூபாய் முதலீடு செய்து வந்தால் எவ்வளவு தொகை கிடைக்கும் என்று பார்க்கலாம் வாங்க.
மெச்சுரிட்டி காலம் | முதலீட்டு தொகை | வட்டி | மெச்சுரிட்டி தொகை |
15 வருடத்திற்கு | 2,70,000 | 2,18,185 | 4,88,185 |
20 வருடத்திற்கு | 3,60,000 | 4,38,995 | 7,98,995 |
25 வருடத்திற்கு | 4,50,000 | 7,86,962 | 12,36,962 |
30 வருடத்திற்கு | 5,40,000 | 13,14,109 | 18,54,109 |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 444 நாளில் Rs.1,52,700/- வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |