33,000 ரூபாய் வரை லாபம் தரும் தபால் துறையின் அருமையான திட்டம்..!

Advertisement

Monthly Income Scheme in Post Office in Tamil 

இன்றைய கால கட்டத்தில் உள்ள பொருளாதார ஏற்ற இறக்கத்தை சமாளிப்பது என்பதே மிகவும் கடினமாக உள்ளது. அதனால் அனைவருமே தனது எதிர்காலத்திற்காக சேமிக்கும் ஆர்வமும், கவனமும் வந்து விட்டது. ஆனால் எந்த வகையான திட்டத்தில் முதலீடு செய்தால் அல்லது சேமித்தால் நல்ல வட்டியும், முதிர்வு தொகையும் கிடைக்கும் என்பதில் தான் பலருக்கும் பெரிய குழப்பம் இருக்கும். அப்படி உங்களின் மனதிலேயும் இந்த மாதிரியான குழப்பம் உள்ளது என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான்.

ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் தபால் துறையில் மாத மாதம் வருமானம் அளிக்கும் ஒரு அருமையான திட்டத்தை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> மிஸ் பண்ணீடாதீங்க 400 நாட்களில் 50,000-திற்கு மேல் வட்டி கிடைக்கும் அருமையான இரண்டு திட்டங்கள்

Post Office Monthly Income Scheme in Tamil:

Post Office Monthly Income Scheme in Tamil

இந்த திட்டத்தின் மூலம் மாத மாதம் வருமானம் பெற முடியும். இந்த திட்டத்தில் ஒரு நபர் மட்டும் கூட இணைந்து கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் கணவன் மனைவி இருவரும் இணைந்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் இந்திய குடிமக்கள் மட்டுமே இணைந்து கொள்ள முடியும். மேலும் 18 வயது நிறைவடைந்தவர்கள் மட்டுமே இந்த திட்டத்திற்கு தகுதி உடையவர்கள்.

நன்மைகள்:

இந்த தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில் கணக்கை தனித்தனியாகவும் கூட்டாகவும் திறக்கலாம்.

தனிநபர் கணக்கை திறக்கும் போது இந்த  திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சம் ரூ.4.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

கூட்டுக் கணக்கில் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> என்னது போஸ்ட் ஆபீஸில் குழந்தைகளுக்கு இவ்வளவு அருமையான ஆயுள் காப்பீடு திட்டம் உள்ளதா இத்தனை நாளா இது தெரியாம போச்சே

இந்த திட்டத்தில் நீங்கள் மாதந்தோறும் 6.6% வட்டியாக பெறுவீர்கள். மேலும் இந்த திட்டத்தை நீங்கள் 5 ஆண்டுகளுக்கு முடித்து கொள்ளலாம்.

உதாரணமாக ஒருவர் இந்த கணக்கில் ரூ.50,000 டெபாசிட் செய்தால், அவருக்கு மாதம் ரூ.275 அல்லது ஆண்டுக்கு ரூ.3,300 கிடைக்கும். ஐந்தாண்டுகளில் மொத்தம் ரூ.16,500 வட்டியாக கிடைக்கும்.

இதுவே ஒருவர் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால் மாதம் ரூ.550 வட்டியாகவும், ஆண்டுக்கு ரூ.6600 வட்டியாகவும், ஐந்தாண்டுகளில் ரூ.33,000 வட்டியாகவும் கிடைக்கும்.

மேலும் ஒருவர் ரூ.4.5 லட்சத்திற்கு மாதம் ரூ.2,475 வட்டியாகவும், ஆண்டுக்கு ரூ.29,700 வட்டியாகவும், ஐந்தாண்டுகளில் ரூ.1,48,500 வட்டியாகவும் கிடைக்கும்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> என்னது போஸ்ட் ஆபிஸில் 95 ரூபாய் முதலீடு செய்தால் 14 லட்சம் வரை கிடைக்குமா

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil

 

Advertisement