மாதம் 5,325 ரூபாய் வருமானம் தரும் அருமையான போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம்..!

Advertisement

Post Office Scheme 2023

சேமிப்பு என்பது அனைவருடைய வாழ்க்கையிலும் மிகவும் அவசியமானது மற்றும் கட்டாயமானது என்று தான் கூற வேண்டும். ஆகையால் இந்த இரண்டையும் மனதில் கருதி மக்கள் அனைவரும் நிறைய திட்டத்தின் கீழ் சேமித்து வருகிறோம். அதிலும் குறிப்பாக பார்த்தால் நம்மில் பாதி பேர் போஸ்ட் ஆபீஸ் உள்ள திட்டத்தின் கீழ் தான் பயன் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் இப்போது போஸ்ட் ஆபீஸில் ஒரு புதியம் திட்டம் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் மாதம் 5,325 ரூபாய் வருமானம் பெறலாம். சரி வாருங்கள் இந்த திட்டம் பற்றிய முழுவிவரத்தையும் தெரிந்துக்கொள்வோம்.

இதையும் படியுங்கள்⇒ மாதந்தோறும் 10,000 ரூபாய் வருமானம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்..!

Post Office Monthly Income Scheme:

போஸ்ட் ஆபீஸில் இந்த வருடம் வட்டி மற்றும் முதிர்வு காலம் இவை இரண்டிலும் சில மாற்றங்களுடன் புதிதாக வந்துள்ளது தான் Monthly Income Scheme ஆகும்.

இத்திட்டத்தின் கீழ் நீங்கள் 1000 ரூபாய் மட்டும் செலுத்தி சேமிக்க தொடங்கலாம். ஆனால் இந்த திட்டத்தின் கீழ் ஒரு Account மட்டும் தான் ஓபன் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை கிடையாது.

அதுபோல தனியாக இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் சேர விரும்பினால் அதற்கான அதிகபட்ச தொகை 4,50,000 ரூபாய் மற்றும் கூட்டமாக சேர விரும்பினால் அதற்கான அதிகபட்ச தொகை 9 லட்சம் ரூபாய் ஆகும்.

வட்டி விகிதம்:

போஸ்ட் ஆபீஸில் உள்ள இத்தகைய திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.1% ஆகும். இத்தகைய வட்டி விகிதமான 5 வருடம் வரை எந்த விதமான மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கும்.

நீங்கள் 5 வருடமும் மாதந்தோறும் 7.1% வட்டி தொகையினை பெற்று கொள்ளலாம்.

முதிர்வு காலம்:

போஸ்ட் ஆபீஸில் உள்ள Monthly Income Scheme-ற்கான முதிர்வு காலம் 5 வருடம் ஆகும்.

விதிமுறைகள்:

நீங்கள் இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்து சேமித்து கொண்டிருக்கும் போது திடீரென கணக்கை முடித்துக்கொள்ள விரும்பினால் அதற்கான வாய்ப்பும் உள்ளது. 1 வருடம் முடிந்த பிறகு இந்த கணக்கை முடித்து கொள்ளலாம்.

அதேபோல நீங்கள் மட்டும் தனியாக இந்த திட்டத்தின் கீழ் சேமித்து கொண்டிருக்கும் போது திடீரென இந்த கணக்கை நீங்கள் மூன்று நபர்கள் கூடிய கூட்டு கணக்காகவும் மாற்றி கொள்ளலாம்.

2 வருடம்:

2 வருடம் முடிந்த பிறகு நீங்கள் இந்த கணக்கை முடிக்க வேண்டும் என்றால் உங்களுடைய சேமிப்பு தொகையில் இருந்து 2% கூடிய குறிப்பிட்ட தொகை பிடிக்கப்பட்டு மீதம் உள்ள தொகை மட்டும் போஸ்ட் ஆபீஸில் வழங்கப்படும்.

3 வருடம்: 

அதே நீங்கள் 3 வருடம் முடிந்த பிறகு இந்த கணக்கை முடிக்க வேண்டும் என்றால் உங்களுடைய சேமிப்பு தொகையில் இருந்து 1% கூடிய குறிப்பிட்ட தொகை பிடிக்கப்பட்டு மீதம் உள்ள தொகை மட்டும் போஸ்ட் ஆபீஸில் வழங்கப்படும்.

Monthly Income Scheme Post Office 2023 in Tamil:

Post Office Monthly Income Scheme 2023
சேமிப்பு தொகை  மாத வட்டி  மொத்த வட்டி தொகை  முதிர்வு கால தொகை 
50,000 ரூபாய்  Rs. 295/- Rs. 17,750/- Rs. 67,750/-
1 லட்சம் Rs. 591/- Rs. 35,500/- Rs. 1,35,500/-
2 லட்சம்  Rs. 1,183/- Rs. 71,000/- Rs. 2,71,000/-
4,50,000 ரூபாய்  Rs. 2,662/- Rs. 1,59,750/- Rs. 6,09,750/-
9 லட்சம்  Rs. 5,325/- Rs. 3,19,500/- Rs. 12,19,500/-

 

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 5 வருடத்தில் 6,96,967 ரூபாய் வாங்கலாமா..! நல்ல திட்டமா இருக்கே..!

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement