தபால் துறை சேமிப்பு திட்டங்கள்
இந்த நவீன காலத்தை பொறுத்தவரை ஆண் மற்றும் பெண் இருவரும் சமம் என்று தான் கருதப்படுகிறது. அதற்கு ஏற்றவாறு தான் இருவரும் சமநிலையில் செயல்பட்டு வருகிறார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் மற்றும் ஆண்கள் என இருவரும் வேலைக்கு சென்று பணம் சம்பாதித்து வருகிறார்கள். இது மாதிரி இருவரும் வேலைக்கு சென்று சம்பாதிப்பதோடு மட்டும் விட்டு விடாமல் அதில் ஒன்று அல்லது இரண்டு பகுதி தொகையினை சேமித்து வைக்க வேண்டும். அப்படி பணத்தினை சேமித்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்து உடன் அத்தகைய பணத்தினை போஸ்ட் ஆபீஸ் அல்லது நிதி நிறுவனங்களில் உள்ள ஒரு திட்டத்தின் கீழ் சேமித்து வைக்க வேண்டும். இதுமாதிரி முறையில் சேமித்து வைக்கும் போது நம்முடைய சேமிப்பு தொகைக்கு அதிகமான தொகை கிடைக்கும். ஆகையால் இன்று போஸ்ட் ஆபீஸ் உள்ள ஒரு அருமையான சேமிப்பு திட்டத்தை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Monthly Income Scheme Post Office 2023:
போஸ்ட் ஆபீசில் இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் முதலீடு செய்தால் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையினை வருமானமாக பெறலாம்.
முதலீடு தொகை:
இத்தகைய திட்டத்திற்கான குறைந்த பட்ச முதலீடு தொகை 1000 ரூபாய் ஆகும். அதுவே ஒரு தனியாக கணக்கை தொடங்கினால் அதற்கான அதிகப்பட்ச தொகை 9 லட்சம் ரூபாய் மற்றும் கூட்டு கணக்காக தொடங்கினால் அதற்கான தோரயமான அதிகப்பட்ச தொகை 15 லட்சம் ஆகும்.
வட்டி விகிதம்:
போஸ்ட் ஆபீஸில் உள்ள இத்தகைய திட்டத்திற்கான வட்டி விகிதம் ஆனது 6.7% ஆகும். மேலும் இந்த வட்டி தொகையினை மாதந்தோறும் 5 வருடம் பெற்று கொள்ளலாம்.
அதுபோல இதில் சொல்லப்பட்டுள்ள வட்டி விகிதமானது எப்போது வேண்டுமானலும் மாறலாம். ஆனால் நீங்கள் இந்த கணக்கை தொடங்கும் போது உங்களுக்கு அளிக்கப்பட்டு வட்டி விகிதம் 5 வருடம் வரை அப்படியே தான் இருக்கும்.
முதிர்வு காலம்:
இந்த Monthly Income திட்டத்திற்கான முதிர்வு காலம் என்பது 5 வருடம் ஆகும்.
இத்திட்டத்திற்கான விதிமுறைகள்:
அஞ்சலகத்தில் உள்ள இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்த பிறகு 1 வருடம் கழித்து நீங்கள் கணக்கை முடித்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கான வாய்ப்பானது சில விதிமுறைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது.
3 வருடத்திற்கு பிறகு இந்த கணக்கை நீங்கள் பாதியில் முடித்து கொள்ள வேண்டும் என்றால் உங்களுடைய சேமிப்பு தொகையில் இருந்து 2% தொகை பிடிக்கப்படும்.
அதுவே 3 வருடத்திற்கு பிறகு நீங்கள் கணக்கை முடித்து கொள்ள வேண்டும் என்றால் உங்களுடைய சேமிப்பு தொகையில் இருந்து 1% தொகை பிடிக்கப்படும்.
Post Office Monthly Income Scheme Details:
தபால் துறையில் உள்ள இந்த திட்டத்தின் நீங்கள் குறிப்பிட்ட தொகையினை முதலீடு செய்தால் உங்களுக்கு வட்டி எவ்வளவு கிடைக்கும், மொத்த தொகை எவ்வளவு கிடைக்கும் போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
முதலீடு தொகை | மாதாந்திர வட்டி தொகை | மொத்த வட்டி தொகை | மொத்த தொகை |
50,000 ரூபாய் | 279 ரூபாய் | 16,750 ரூபாய் | 66,750 ரூபாய் |
1,00,000 ரூபாய் | 558 ரூபாய் | 33,500 ரூபாய் | 1,33,500 ரூபாய் |
2,00,000 ரூபாய் | 1,116 ரூபாய் | 67,000 ரூபாய் | 2,67,000 ரூபாய் |
3,00,000 ரூபாய் | 1,675 ரூபாய் | 1,00,500 ரூபாய் | 4,00,500 ரூபாய் |
4,50,000 ரூபாய் | 2,512 ரூபாய் | 1,50,750 ரூபாய் | 6,00,750 ரூபாய் |
9,00,000 ரூபாய் | 5,025 ரூபாய் | 3,01,500 ரூபாய் | 12,01,599 ரூபாய் |
இதையும் படியுங்கள்⇒ 1 லட்சம் ரூபாய் செலுத்தினால் போதும் 1,43,226 ரூபாய் பெறக்கூடிய சிட்டி யூனியன் பேங்கின் அருமையான திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |