மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டம் | Moovalur Ramamirtham Scheme in Tamil
தமிழக அரசு பெண்களின் நலன் கருதி பலவகையான திட்டங்களை அறிமுகம் செய்கின்றது. அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டம் ஜூலை 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.
அரசு பள்ளிகளில் படித்தால் பல நன்மைகள் உண்டு. ஆனால் நாம் என்ன செய்கிறோம் தனியார் பள்ளியில் தான் குழந்தைகளை சேர்க்கிறோம். பள்ளியில் சேர்க்கமாட்டார்கள். ஆனால் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்று சொல்வார்கள். இது நியாயமா.? இந்த திட்டத்தின் பிறகாவது அரசு பள்ளியில் பயின்று வெற்றி அடையுங்கள். இந்த திட்டத்திற்கு யாரெல்லாம் தகுதி உடையவர்கள், எப்படி உதவி தொகையை பெறுவது என்பதை பற்றியும் இந்த பதிவில் காண்போம்.
12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வி திட்டம்!! |
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி:
- 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த பெண்களுக்கு உதவித்தொகை திட்டத்தை இந்த மாதம் முதல் முதல்வர் தொடங்கிவைப்பார் என உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். இந்த திட்டத்தை பற்றிய செய்தியை கண்ட நபர்கள் பதிவு செய்து வருகின்றனர். முதல் நாளிலேயே 15,000 -க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தாக பொன்முடி கூறியுள்ளார்.
உதவித்தொகை அறிவிப்பு:
- 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்படிப்பு சேரும் மாணவிகளுக்கும் கல்வி படித்து முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.
- இந்த மாணவிகள் ஏற்கனவே வேற முறையில் கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்திலும் உதவித்தொகையை பெறலாம்.
உதவி தொகை பெறுவதற்கு தகுதிகள்:
- 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டிலே உயர்கல்வி படிப்பவராக இருத்தல் வேண்டும்.
- அரசு பள்ளி என்பது பஞ்சாயத்து யூனியன் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பள்ளிகள், வனத்துறை பள்ளிகள், சமூகப் பாதுகாப்புத் துறை பள்ளிகள் போன்ற பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர் கல்வி சேருபவர்களும் விண்ணப்பிக்கலாம்.
- அதுமட்டுமில்லாமல் சான்றிதழ், பட்டயம், இளங்கலை பட்டம், தொழில் சார்ந்த படிப்பு மற்றும் பாரா மெடிக்கல் போன்ற படிப்புகளில் சேருபவர்களும் இத்திட்டத்தில் பயனடையலாம்.
- இளங்கலை, தொழிற்கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் கடைசி ஆண்டு படிக்கும் மாணவிகள் தவிர மற்ற மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பிக்கும் மாணவிகள் வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
- இத்திட்டத்திற்கு பதிவு செய்ய வங்கி கணக்கு புத்தகம், ஆதார் கார்டு, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், போன்ற ஆவணங்கள் உள்ள மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
- இத்திட்டத்திற்கு penkalvi.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
- அதில் login என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு விவரங்களை பதிவு செய்து விண்ணப்பிக்கவும்.
- இத்திட்டத்திற்கான தகுதிகளை சரிபார்த்து விரைவாக விண்ணப்பித்து பயனைடையுங்கள்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |